இன்றைய சூழலில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவமடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும் கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்படுகிறது. நோயாக இல்லாவிட்டாலும் சரி வர கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படும். 15 வயது முதல் 45வயது வரையிலான பெண்களே இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் பிறப்புறுப்பில் அமிலத்தன்மை கொண்ட நிறமற்ற லேசான பிசுபிசுப்புத் தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரந்து கிருமித் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். தொற்று ஏற்பட்டால், அந்தப் பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மையை மாறும் அதனால் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என அந்த திரவம் வெளிப்படும் சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பு, துர்நாற்றம் கூட ஏற்படும். இவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
பாதிப்புக்கான காரணங்கள்
தவறான உணவுப் பழக்கங்கள், கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுய இன்பப் பழக்கம், மாதவிடாய் தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊளச்சதை, ரத்த சோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்தப் பிரச்சினை ஏற்படலாம். மேலும், கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை, போன்றவை காரணமாக இருக்கக்கூடும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது. பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
தடுக்கும் வழிமுறைகள்
மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்பு உறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம். பருத்தித் துணியால் ஆன உள்ளாடைகளை அணிவதே சிறந்தது. நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். ஆரம்ப நிலையில் வீட்டிலேயே சில உணவுகளை சாப்பிட்டு பயன்பெறலாம் அவை சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று கீழாநெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். உளுந்து ,பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு,சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம். தினமும் எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம் உள்ள விட்டமின் டி ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை வறட்சியைத் தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றத்தையும் அகற்றிவிடும். வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டாலே கூட வெள்ளைப்படுதலுக்கான காரணத்தைக் மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதே பல சிக்கல்களை தடுக்கும்.
0 கருத்துகள்