Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஈஸ்டர் திருநாளும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளும்



இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை, ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் வசந்த கால தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அதன் முக்கிய அம்சம் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் ஆகும்.

முட்டை வடிவில் கோழியிலிருந்து வெளிவரும் உயிர், பிறகு முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சாக வெளிவருகிறது. மறுபிறப்பின் அடையாளமாக முட்டை இருக்கிறது. எனவே பழைய வாழ்க்கையிலிருந்து புதிய வாழ்க்கைக்கு மாறுவது புதுப்பெண் ஈஸ்டர் திருநாளின் அர்த்தத்தை தரக் கூடியதாக அமைகிறது. முட்டை ஓடு இயேசுபிரானின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுந்ததையும் குறிக்கிறது. பாரம்பரியமாக ஈஸ்டர் கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் முட்டைகளில் சிவப்பு நிற வண்ணங்கள் பூசப்பட்டன. அது இயேசு சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது.



சாவை வீழ்த்தி பாவத்தை அழித்து இருளை வெற்றிகொண்ட இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்த நாள் "பாஸ்காபண்டிகை" எனப்படும் ஈஸ்டர் திருநாள் ஆகும். பாஸ்கா என்றால் "கடந்து போதல்" என்று பொருள்.

அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் அவற்றின் மாய சக்தியால் சந்தோஷம், சேமிப்பு, ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றை அளிப்பதாக மக்கள் நம்புகின்றனர். இந்த முட்டைகள் ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டுபிடிக்குமாறு மறைத்து வைக்கப் படுகின்றன. முட்டைகளைத் தேடிக் கண்டு பிடிக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் பரிசுகளை வழங்கி மகிழ்கின்றனர்.

மேலை நாடுகளில் ஈஸ்டர் முட்டை பெயரில் பல வண்ண சாக்லேட், கேக் தயார் செய்து, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கும் உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகளுக்கும் முட்டையை உணவாக தருவது உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சிவப்பு நிற வண்ணத்தை மட்டுமே பயன்படுத்தி ஈஸ்டர் முட்டைகள் அலங்கரிக்கப்பட்டன. இன்றைய நவீன காலத்தில் புதிய கலைநயத்தோடு அலங்காரம் செய்யப் படுகின்றன.

 அவை, மதச்சடங்குகளிருந்து விலகி படைப்பை வெளிப்படுத்துதலின் புதிய வடிவமாக திகழ்கின்றன. அலங்காரம் என்பது சாயமிடுதல் மற்றும் ஓவியம் தீட்டுதல் ஆகியவற்றை கடந்து அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. விண்வெளி அண்டத்தை நினைவுபடுத்தும் விதமாக வண்ணம் தீட்டப்பட்ட முட்டைகள், விதவிதமான டிசைன்களில் துளையிடப்பட்டு அலங்கரிக்கப்பட்ட முட்டைகள், மணிகளால் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள், துணிகளால் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் என்று பல விதங்களில் தற்போது முட்டைகள் அலங்கரிக்கப்படுகின்றன.




கருத்துரையிடுக

0 கருத்துகள்