அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
I. சரியான வி்டையைத் தேர்வு செய்க.
1. ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை
- தனி நபராட்சி
- முடியாட்சி
- மக்களாட்சி
குடியரசு
விடை : முடியாட்சி
2. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு நபர் அரசாங்க முறை
- சிறுகுழு ஆட்சி
- மதகுருமார்களின் ஆட்சி
- மக்களாட்சி
- தனி நபராட்சி
விடை : தனி நபராட்சி
3. முன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறை
- சிறுகுழு ஆட்சி
- நாடாளுமன்றம்
- மக்களாட்சி
- இவற்றில் எதுவுமில்லை
விடை : சிறுகுழு ஆட்சி
4. முன்னாள் சோவியத் யூனியன் …………………க்கு எடுத்துக்காட்டு.
- உயர்குடியாட்சி
- மத குருமார்களின் ஆட்சி
- சிறுகுழு ஆட்சி
- குடியரசு
விடை : சிறுகுழு ஆட்சி
5. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
- இந்தியா
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- பிரான்ஸ்
- வாட்டிகன்
விடை : வாட்டிகன்
6. ஆபிரகாம் லிங்கன் …………………. நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- இங்கிலாந்து
- சோவியத் ரஷ்யா
- இந்தியா
விடை : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
7. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
- சேரர்கள்
- பாண்டியர்கள்
- சாேழர்கள்
- களப்பிரர்கள்
விடை : சாேழர்கள்
8. பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்ட பகுதி
- பண்டைய இந்தியாவின் குடியரசுகள்
- அமெரிக்கா
- பண்டைய ஏதேன்ஸ் நகர அரசுகள்
- பிரிட்டன்
விடை : பண்டைய ஏதேன்ஸ் நகர அரசுகள்
9. எந்த நாட்டில் மக்களாட்சித் தோன்றியது?
- இந்தியா
- சுவிட்சர்லாந்து
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- ஏதேன்ஸ்
விடை : ஏதேன்ஸ்
10. எந்த மொழியிலிருந்து “டெமோகிரஸி” என்ற வார்த்தைப் பெறப்பட்டது?
- கிரேக்கம்
- லத்தீன்
- பாரசீகம்
- அரபு
விடை : கிரேக்கம்
11. மக்களாட்சியில் இறும அதிகாரம் பெற்றவர்கள்
- நாடாளுமன்றம்
- மக்கள்
- அமைச்சர் அவை
- குடியரசு தலைவர்
விடை : மக்கள்
12. கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது.
- இந்தியா
- பிரிட்டன்
- கனடா
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
13. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு
- கனடா
- இந்தியா
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- சீனா
விடை : இந்தியா
14. கூற்று (A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R) : மக்கள் நேரடியாக முடிவெடுப்பத்தில் பங்கு பெறுகிறார்கள்.
- (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
- (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
- (A) சரியானது மற்றும் (R) தவறானது
- (A) தவறானது மற்றும் (R) சரியானது
விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
15. கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம் (R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
(A) சரியானது மற்றும் (R) தவறானது
(A) தவறானது மற்றும் (R) சரியானது
விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
16. வாக்குரிமையின் பொருள்:
தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
வாக்களிக்கும் உரிமை
பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
விடை : வாக்களிக்கும் உரிமை
17. அளனவருக்கும் வாக்குரிமை வழங்குவது
சமூகச் சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
சட்ட சமத்துவம்
விடை : சமூகச் சமத்துவம்
18. பிரதரை நியமிப்பவர்/நியமிப்பது
மக்களவை
மாநிலங்களவை
சபாநாயகர்
குடியரசுத்தலைவர்
விடை : குடியரசுத்தலைவர்
19. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள்
லோக் சபைக்கு 12 உறுப்பினர்கள்
ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்
விடை : ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
20. இந்தியோவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு
1948
1952
1957
1947
விடை : 1952
II. காேடிட்ட இடங்களை நிரப்புக
1. இந்திய அரசியலைமப்பு இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு _____________________
விடை : 1949
2. இரண்டு வகையான மக்களாட்சி _____________________ மற்றும் _____________________ ஆகும்.
விடை : நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சி
3. நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு _____________________
விடை : சுவிட்சர்லாந்து
4. இந்தியா _____________________ மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
விடை : மறைமுக
5. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதர் _____________________
விடை : ஜவஹர்லால் நேரு
6. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு _____________________
விடை : 1920
7. இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் _____________________ மற்றும் _____________________
விடை : எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர்
II. பொருத்துக
1. தனிநபராட்சி |
18 |
2. வாக்குரிமை |
அர்த்தசாஸ்திரம் |
3. சாணக்கியர் |
வாடிகன் |
4. மதகுருமார்கள் ஆட்சி |
வடகொரியா |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
IV. சிறுவினாக்கள்
1. ஆபிரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையைக் கூறு
“மக்களால் மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார்.
2. மக்களாட்சி அரசாங்க அமைப்பினைப் பற்றிக் கூறுக.
மக்களாட்சி அரசாங்க அமைப்பு முறை இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றது. அவை
நாடாளுமன்ற அரசாங்க முறை
இந்தியா, இங்கிலாந்து
அதிபர் அரசாங்க முறை
அமெரிக்கா, பிரான்சு
3. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.
நேரடி மக்களாட்சி |
மறைமுக மக்களாட்சி |
1 பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக் கூடிய அரசு முறை நேரடி மக்களாட்சி எனப்படுகிறது. |
பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசு முறை மறைமுக மக்களாட்சி எனப்படுகிறது |
2 எ.கா:
பண்டைய
கிரேக்க அரசுகள் |
எ.கா: இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி
1. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?
இந்தியாவில் மக்களாட்சி உள்ள முக்கிய சவால்கள்
கல்வியறிவின்மை
வறுமை
பாலினப் பாகுபாடு
பிராந்தியவாதம்
சாதி, வகுப்பு, சமய வாதங்கள்
ஊழல்
அரசியல் குற்றமயமோதல்
அரசியல் வன்முறை
2. இந்தியாவின் மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படத் தேவையான நிலைமைகளை விளக்குக
இந்தியாவின் மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படத் தேவையான நிலைமைகள்
ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின் பலன்களை கிடைக்கச் செய்ய அதிகாரமளித்தல்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது அரிகாரத்தையும், பொதுச் சொத்துகளையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூக தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்
மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க பாரபட்சமற்ற திறமை மிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்
பொது மக்களின் கருது்து வலுவாக இருத்தல்
மக்களிடையே சகிப்புத் தன்மையும், மத நல்லிணக்கமும் நிலவுதல்
அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல்
வலுவான பொறுப்புமிக்க எதிர்கட்சி இருத்தல்.
3. இந்தியாவில் மக்களாட்சிப் பற்றிய உங்களது கருத்து என்ன?
சமத்துவம், சுதந்திரம், சமூக நீதி, பொறுப்புணர்வு மற்றும் அனைவருக்கும் மதிப்பளித்தல் போன்ற அடிப்படை மக்களாட்சிப் பண்புகளை, மக்கள் மனதில் கொண்டு செயல்படும்போது மக்களாட்சி மேலும் துடிப்பானதாகவும், வெற்றிகரமானதாகவும் இருக்கும்.
மக்களின் எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் நடத்தைகள் ஆகியவை மக்களாட்சியின் தலையாய கொள்கைகளுடன் பொருந்திச் செயல்பட வேண்டும்.
எனவே மக்களாட்சியின் இலக்குகளை நடைமுறைப்படுத்த மக்கள் தங்களை முன்மாதிரியாக பங்கெடுத்தக் கொள்ளவும், கடமை உணர்வோடு செயல்படவும், தங்களுக்குள் பொறுப்புணர்வை உருவாக்கவும், தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புக்களுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.
0 கருத்துகள்