வாழ்க்கை, ஒரு சதுரங்க விளையாட்டு போன்றது. ஏனெனில் இரண்டிலும் பல்வேறு சிக்கல்களை சாதுர்யமாக சரிசெய்து, அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்போம். சதுரங்கம், 1500 ஆண்டுகள் வரலாறு கொண்டது. கிபி ஆறாம் நூற்றாண்டில் "சதுரங்கா" என்று அழைக்கப்படும் சதுரங்கம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இந்திய முனிவர் சேத் சதுரங்கத்தை உருவாக்கியதாக புராணம் கதை சொல்கிறது. 1886 ஆம் ஆண்டு நியூயார்க்கில் முதல் அதிகாரப்பூர்வ உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. மேலும் 1966 ஆம் ஆண்டிலிருந்து "தேசிய சதுரங்க தினம்" கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து பக்கங்களிலும் ஒரு கட்டம் மட்டும் நகரும், ராஜாதான் சதுரங்க ஆட்டத்தின் நாயகன். ராணி தான் சதுரங்க ஆட்டத்தில் மிக வலிமை வாய்ந்தவர். எந்த நேரத்திலும், எந்த நிலையிலும், எங்கு வேண்டுமானாலும் செல்லும் சக்தி ராணிக்கு உண்டு. ஒரே நிறக்கட்டத்தில் மட்டும் பயணிக்கும் மந்திரி, ஒரே பாதையில் முன்னும் பின்னும் நகரும் சக்தி கொண்டது. குதிரை அனைத்து பக்கங்களிலும் "எல்" வடிவில் நகரும் தன்மை கொண்டது. யானை நேராக சென்று வரக் கூடியது, ராணிக்கு அடுத்தபடியான சக்திகளைக் கொண்டது. சதுரங்கத்தின் ஆன்மா 'சிப்பாய்' தோற்றத்தைப் பார்த்து எடை போட கூடாது என்பார்கள், இது முற்றிலும் பொருந்துவது சிப்பாய்க்கே, ராஜாவை கூட சிப்பாயால் வீழ்த்த முடியும். அதே போல் சதுரங்கத்தில் குறிப்பிட்டு நிலையை அடைந்ததும் ராணியின் சக்தியை பெற்றுவிடும்.
சதுரங்கத்தில் நாம் எடுக்கும் ஒரு தவறான நகர்வால் விளையாட்டையே இழக்கலாம். அதுபோலத்தான் வாழ்விலும், நாம் எடுக்கும் தவறான முடிவால் இழப்புகள் உண்டாகலாம். சதுரங்கத்தைப் போல வாழ்க்கையை மறுதொடக்கம் செய்ய முடியாது. ஆகையால் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நன்கு யோசித்து எடுக்க வேண்டும். விளையாட்டுப் போலவே நிஜத்திலும் அற்புதங்களும் முயற்சியும் நம்மை வந்தடையும்.
நாம் முன்னேற நினைக்கும்போதுதான், பல தடைகள் வரும். அவற்றைக் கடந்து தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் எலிதாகவும், தாழ்த்தியும் நினைக்கக்கூடாது. வாழ்வில் சந்திக்கும் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு உதவியாகவும், வழிகாட்டியாகவும் இருப்வர்களே. ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள் இருக்கும். பல்வேறு கோணத்தில் யோசித்து செயல்படுவது நல்லது.
சதுரங்கத்தை போலவே வாழ்விலும் அனைவருக்கும் தனித் தனி பாதை இருக்கிறது. அந்த பாதையை சரியாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து முன்னேறினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு சிறு செயலையும் பிறகு செய்யலாம் என்று அலட்சியமாக விட்டு விடாதீர்கள். நாம் நழுவிவிடும் வாய்ப்பு மற்றவருக்கு ஏணியாக கூட அமையலாம். வாழ்க்கையிலும் விளையாட்டிலும் முதல் அடி எடுத்து வைப்பதை விட, முடிவில் யார் இறுதி நிலையை அடைகிறார் என்பதே முக்கியம்.வாழ்க்கையில் சில முடிவுகளையும் மூளையும், சில முடிகளை மனதும் எடுக்க வேண்டும். அதை சரியாக தீர்மானித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
0 கருத்துகள்