Ad Code

Ticker

6/recent/ticker-posts

உணவே உணர்வுகளின் ஆதாரம்

 


ண்ணும் உணவுக்கும் உள்ளத்தின் உணர்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. காலையில் நாம் சாப்பிடும் உணவை பொறுத்தே, அந்த நாளில் நமது மனநிலை அமைவதை பல நேரங்களில் உணர்ந்திருப்போம். மனநிலையை நிர்ணயிப்பது "செரோடோனின்"என்னும் நரம்பு கடதியாகும். இது 95 சதவீதம் வயிற்றில் சுரக்கிறது. அதாவது நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து செரோடினின் சுரக்கிறது. மனநிலை, தூக்கத்தை முறைப்படுத்துவது, பசியைத் தூண்டுவது, வலியை குறைப்பது போன்றவை இதன் முக்கிய வேலையாகும். எத்தகைய உணவுகளை உட்கொள்கிறோமோ, அதைப் பொறுத்து மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.


ன அழுத்தம் காரணமாக உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு, அளவுக்கு அதிகமாக உண்பதால், உடல் எடை அதிகரித்தல், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், வாழ்வியல் குறைபாடுகள் ஏற்படுகின்றன. நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ ஏதேனும் குறிப்பிட்ட சுவையின் மீது உங்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டாலோ உடனடியாக கவனியுங்கள். என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளுங்கள். மன அழுத்தத்தில் இருந்தால் அதனை சரி செய்யுங்கள்.



மூக வலைத்தளங்களில் அடிக்கடி உணவு தொடர்பான பதிவுகளை பார்ப்பதும், அடுத்த நொடியில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவதும் மன அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள்,மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமில்லாத உணவு பழக்கங்கள் மனநிலையிலும் உணர்வுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. உணவை சாப்பிடாமல் தவிர்க்கும் போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையக்கூடும். இதன் மூலம் சோர்வாகவும், பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும். துத்தநாகம் இரும்பு,பி வைட்டமின்கள், மெக்னீசியம் வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் மனநிலையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.



சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்களால் செய்யப்படும் உணவுகளை சாப்பிடும் போது ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து எரிச்சல் உணர்வு ஏற்படக் கூடும். அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்து இருக்கும் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது, முழு தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்றவற்றை மேற்கொண்டால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்