அமிலம்(Acid) மற்றும் காரம்(Base) இவற்றை எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது என்பதை பற்றி இங்கே ஆராயலாம்.
தேவைப்படும் பொருட்கள்
1)கண் மருந்து விடும் குழாய்(Eye Droppers)
2 )லிட்மஸ் பேப்பர்(Litmus paper)
3)காகிதத் தாள்-1
4) பிஸ்கட் செய்ய பயன்படும் தாள்
5)பென்சில்
6)எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு
7)வீட்டில் பயன்படும் அமோனியா திரவம்
செய்முறை
பிஸ்கட் தாளின்மீது சாதாரண காகிதத்தாளை பரப்பி வைக்கவும். அதன் மீது லிட்மஸ் தாளை வைக்கவும். சாதாரண வெள்ளைத் தாளின் நான்கு முனைகளிலும் ஊறுகாய், எலுமிச்சை, திராட்சை ,ஆரஞ்சு என எழுதவும். ஒவ்வொரு பெயரின் அருகிலும் அந்தந்த பொருளின் சாறை ஓரிரு துளிகளாக விடவும்.அத்துளிகள் லிட்மஸ் தாளின் மீது விட்டிருத்தல் வேண்டும். இப்பொழுது கண்சொட்டு மருந்து குழாய் வழியாக ஓரிரு துளிகள் அமோனியா திரவத்தை அந்த நான்கு சாற்றின் மீதும் விடவும். அமோனியா திரவம் லிட்மஸ் தாளைப் பச்சையாகவும் மற்ற சாறுகளை சிவப்பு நிறமாகவும் மாற்றியிருப்பதை காண்பீர்கள்.
விஞ்ஞான உண்மை
அம்மோனியா என்பது காரவகையைச் சேர்ந்தது. மற்ற சாறுகள் எல்லாம் அமிலம் வகையை சேர்ந்தது. பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. ஊறுகாயில் வினிகர் என்னும் அசிட்டிக் அமிலம் உள்ளது.
0 கருத்துகள்