Ad Code

Ticker

6/recent/ticker-posts

படுக்கை அறை சுகாதாரம்

 


வீட்டுப் பராமரிப்பில் மிக முக்கியமானது படுக்கையறையின் தூய்மை. உழைத்து களைத்த உடலின் ஓய்வுக்காகவும் மனதின் அமைதிக்காகவும் நாம் தொடர்ந்து எட்டு மணி நேரம் பயன்படுத்த கூடிய ஒரே இடம், படுக்கை அறைதான். எனவே அதை எப்படி பராமரிக்க வேண்டும், அதன் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போமா..?

படுக்கை அசுத்தமாவது எப்படி?

பஞ்சு மெத்தையை பயன்படுத்தும்போது நமது உடலில் இருந்து உதிரும் இறந்த செல்கள், காற்றில் மிதந்துவரும் தூசுகள் மெத்தையில் படுகின்றன. மேலும் குழந்தைகள் அதன்மீது ஏறி குதிக்கும் போதும் பஞ்சு மெத்தை சேதமடைகிறது.

தூசுகள்

படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில்தான் அதிக தூசுகள் படிந்து இருக்கும். திறந்த நிலையில் உள்ள அலமாரிகள், பரண்களிலும் தூசுகள் சேர்ந்திருக்கும். மின் விசிறியை அடிக்கடி துடைக்காவிட்டால் இறக்கைகளின் ஓரங்களில் பெரிய தூசுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். இவை அனைத்தையும் அவ்வப்போது துடைத்து சுத்தப் படுத்த வேண்டும்.



சுகாதாரமின்மை தரும் பிரச்சனைகள்

படுக்கை அறை தூய்மையாக இல்லையென்றால், சுவாச பிரச்சனைகள், அலர்ஜி, ஆஸ்துமா, அரிப்பு, தோல் பிரச்சினைகள் உண்டாகும் அதற்கு இடமளிக்காமல் துயிலும் இடத்தை தூய்மையாக பராமரித்தால் உடலில் உற்சாகம் பெருகும் இதை உணரலாம்.

பராமரிப்பு

படுக்கை விரிப்புகளை தினமும் வெளியே எடுத்துச் சென்று நன்கு உதறிவிட்டு உபயோகிக்கவேண்டும். வாரத்திற்கு ஒரு முறை படுக்கை விரிப்புகளையும், தலையணை உறைகளையும் மாற்றவேண்டும். மாதத்துக்கு ஒருமுறையாவது மெத்தையை வேக்குவம் கிளீனர் உதவியுடன் தூய்மைப்படுத்த வேண்டும். சில மாதங்களுக்கு ஒருமுறையாவது, படுக்கையை வெயிலில் இருபுறமும் திருப்பிப் போட்டு நன்றாகக் காய வைக்க வேண்டும். தினமும் படுக்கை அறையை நன்றாக பெருக்கி துடைக்கவேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது கட்டளை நகத்தி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அலமாரிக்கு கதவுகள் இல்லை என்றால் திரைசீலை போட்டு மூடி வைக்கலாம் மின்விசிறியும் கருணையும் மாதத்துக்கு ஒரு முறையேனும் சுத்தப்படுத்த வேண்டும்.

ஏ.சி.அறையில் உறங்கினால்

நமது உடல் எப்போதும் அறையின் வெப்ப நிலையிலேயே இருக்க வேண்டும் ஏசி அறையில் தூங்கும் போது உடல் தனது வெப்ப நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காக விடிய விடிய போராடிக் கொண்டே இருக்கும் எனவே அறையின் வெப்பநிலையை ஏசியை பயன் படுத்துங்கள் இயேசு பயன்படுத்தாத காலங்களில் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து காற்றோட்டமாக தூங்குவது நல்லது பாதுகாப்புக்கு ஜன்னல்களில் கொசுவலை அமைத்துக் கொள்ளலாம்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்