Ad Code

Ticker

6/recent/ticker-posts

பாட்டில் அலங்காரம்

 


வீட்டை அலங்கரிக்க எவ்வித செலவும் செய்யாமல், வீட்டில் உள்ள சாதாரண பொருட்களையே பயன்படுத்த முடியும். தண்ணீர் பாட்டில், கண்ணாடி பாட்டில்கள், ஆயில் கேன், வாட்டர் கேன் ஆகியவற்றை எவ்வாறு அழகிய வடிவங்களில் மாற்றியமைத்து, வீட்டை அலங்கரிப்பது என்பதை இங்கே பார்ப்போம். குளிர்பான பாட்டிலின் மேல் பாகத்தை துண்டித்து அகற்றி விட்டு, மண்ணை நிரப்பி, சிறிய பூச்செடிகள் வளர்க்கலாம். பல பாட்டில்கள் இருந்தால், அவற்றை வரிசையாக மேல்மாடியில் அடுக்கி வண்ண மலர்கள் பூக்கும் விதவிதமான செடிகளையும் வளர்க்கலாம். கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை வகைகளை வளர்க்கவும் இந்த முறையை ஏற்றது.



மினரல் வாட்டர் கேன்களை கிடைமட்டமாக துண்டித்து அல்லது மேல் பாகத்தை மட்டும் துண்டித்து மண் நிரப்பி, மாடித்தோட்ட தொட்டிகளாக பயன்படுத்தலாம். சிறிய அளவுள்ள வாட்டர் பாட்டில்களில் துளையிட்டு, வீட்டு தோட்டத்திற்கு நீரூற்றும் பூவாளியாக பயன்படுத்தலாம். கண்ணாடி பாட்டில்களை, தோட்டத்தின் ஓரங்களில் சுவர்கள் போன்று பயன்படுத்துவது அழகாக இருக்கும். ஜன்னல் ஓரங்களில் அழகாகவும், அறைக்குள் பிராணவாயு பரவலாகக் கிடைக்கும் வகையிலும் சிறிய அளவுள்ள அழகுச் செடிளை பாட்டில்களில் வளர்க்கலாம். பிளாஸ்டிக் பாட்டிலை அழகிய வடிவத்தில் துண்டித்து நூல் ,பெயிண்டு அல்லது வண்ண பேப்பர் கொண்டு அழகுபடுத்தி "வால்ஹேங்கிங்" செய்தும் சுவற்றில் தொங்க விடலாம். "பாட்டில் ஆர்ட்" கலை வடிவத்தில் அலங்கார உருவங்களை பாட்டில்களில் வரைந்து, ஆங்காங்கே அழகுக்காக காட்சிப்படுத்தலாம். டிவி, பிரிட்ஜ் போன்றவற்றின் மேல் புறத்தில் பாட்டில் மூலம் "பிளவர் வாஸ்" செய்து காட்சிப்பொருளாக வைக்கலா ம் பாட்டில் ஓவியங்களை நண்பர்கள் மனம் கவரும் வகையில் பரிசுகளாக வழங்கலாம்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் மேற்பகுதி துண்டித்துவிட்டு அதை பேனா மற்றும் பென்சில் "ஸ்டாண்ட்" ஆக பயன்படுத்தலாம் கண்ணாடி பாட்டிலில் பட்ஸ் அல்லது சிறிய பிரஷ் கொண்ட அழகான ஓவியங்களை அவரவர் கற்பனைக்கு ஏற்ப வரைந்து அழகாக அடுக்கி வைக்கலாம். பிறந்தநாள் விழா கொண்டாடும் போது பல வண்ண விளக்குகளை பயன்படுத்தி வீட்டை அலங்கரிப்பது வழக்கம். அந்த வகையில் பாட்டில்களைக் கொண்டு வித்தியாசமான "லைட் செட்டிங்" செய்யலாம். வித்தியாசமான மின்விளக்கு அலங்காரத்துடன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடலாம். ஜாம் பாட்டில், மருந்து பாட்டில் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து அவற்றை சிறு பொருட்களை போட்டு வைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி உபயோகமற்ற சிறு பொருட்களைக் கூட கலையழகு மிளிரும் வண்ணம் அலங்கரிக்கலாம் அவ்வாறு வீட்டை அழகு படுத்தும் போது, நம்மிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைப்பதால் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்