தேவையான பொருட்கள்
சேப்பங் கிழங்கு -1/4 கிலோ
கான்ஃப்ளார்-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
மிளகு-அரை டீஸ்பூன்
சோம்பு-அரை டீஸ்பூன்
பூண்டு-5 பல்
இஞ்சி-ஒரு துண்டு
பட்டை-1
செய்முறை
மிளகு, சோம்பு, பூண்டு, இஞ்சி, பட்டை இவற்றை நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். சேப்பங்கிழங்கை குழைந்து விடாமல் வேக வைத்து, தோலுரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்குங்கள்.அரைத்த மசாலா, உப்பு, கான்ஃப்ளார் ஆகியவற்றை கிழங்கில் சேர்த்து பிசறி காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுங்கள்.
0 கருத்துகள்