Ad Code

Ticker

6/recent/ticker-posts

சைபர் கிரைம் புகாரளிப்பது எப்படி?



சைபர் கிரைம் என்றால் என்ன ?

ஒருவருடைய கணினி, மொபைல்போன் போன்றவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் சைபர் கிரைம் எனப்படுகிறது. அதாவது குற்றச்செயல்களில் கணினி ஒரு கருவியாகவோ அல்லது குற்றச்செயல்கள் ஒரு கணினிக்கு எதிராகவோ நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டும்.

 சைபர் கிரைம் குற்றங்கள் எந்தெந்த முறைகளில் நடைபெறும் ?

 முறையான அனுமதியின்றி ஒருவருடைய கணினியையும், நெட்வொர்க்கையும் ஹேக் செய்வதன் மூலம் அதனை பயன்படுத்துவது, வைரஸ் போன்றவற்றை புகுத்தி அந்த கணினியை செயல்படாமல் செய்வது அல்லது அந்த கணினியில் உள்ள தகவல்கள் அழிந்து போக செய்வது, மென்பொருள் இயக்கத்தில் சில மாறுதல்களை புகுத்தி அதனை முறையாக செயல்படாமல் செய்வது, அல்லது அதன் பயன்பாட்டை மாற்றுவது, Email Bomb எனப்படும் அதிகப்படியான எண்ணிக்கையில் போலி இமெயில்கள் அனுப்புவது, போன்றவையாகும்.

 சைபர் கிரைமின் வகைகள் என்னென்ன?

 அரசுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் சைபர் டெரரிசம், தனி மனிதருக்கு எதிராக நடைபெறுவது சைபர் போர்னோகிராபி, சைபர் ஸ்டாக்கிங், சைபர் டிஃபேமேசன், சொத்துக்கள் மற்றும் பணத்தின் மீதான குற்றங்களான சூதாட்டம், கிரெடிட் கார்டு ஏமாற்று வேலை போன்றவைகளாகும். 

 பிஸிங் என்றால் என்ன? 

 ஈமெயில் மூலமோ, போன் மூலமோ தொடர்பு கொண்டு ஒருவருடைய வங்கி கணக்கு எண், கடவுச்சொல், கிரெடிட் கார்டு விவரங்கள் போன்றவற்றை திருடுவது அல்லது நம்பிக்கைக் குரிய வகையில் பேசி பெறுவது போன்றவையாகும்.

 சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிரான சட்டம் என்ன ? 

கணினி வழியாக திருட்டு, ஏமாற்றுவேலை, தகாத முறையில் நடந்துகொள்வது போன்ற அனைத்தும் சைபர் கிரைமின் கீழ் வரும். அவற்றிற்காக தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

 சைபர் கிரைம் குறித்து எவ்வாறு புகார் அளிப்பது ?

 சைபர் கிரைம் குற்றங்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் முறையான தகவல்களுடன் நீங்கள் சைபர் கிரைம் அலுவலகத்துக்கு புகாரளிக்கலாம். அப்போது உங்களுடைய பெயர், நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த விவரம், அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சமர்பிக்க வேண்டும். உடனடி பாதுகாப்போ, நடவடிக்கையோ தேவையெனில் உங்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களையும் தொடர்புகொள்ளலாம்.

எங்கே புகார் அளிக்க வேண்டும்?

https://cybercrime.gov.in/

அடையாளத்தை மறைத்து (Anonymus) புகாரளிக்க முடியுமா?

முடியும்.

புகார் அளிக்கும் போது என்னென்ன தகவல்கள் கொடுக்க வேண்டும்?

அடையாளத்தை மறைத்துப் புகார் அளிப்பவர்கள் தனிப்பட்ட தகவல்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை ஆனால், குற்றம் சம்பந்தப்பட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

கொடுத்த புகார் பற்றிய தகவல்களைப் பின்தொடர (Report and Track), உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், எந்த மாநிலத்தைச் சார்ந்தவர் மற்றும் குற்றம் தொடர்பான விவரங்கள் அவசியம்.உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP மூலம் புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.

பொய் புகாரளித்தால் என்ன ஆகும்?

பொய்யான புகாரளித்தால், இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

புகாரளித்ததற்கான Acknowledgement கிடைக்குமா?

கிடைக்கும். சைபர் கிரைம் தளத்தில் புகாரளித்த பிறகு உங்கள் மொபைலுக்கும், மின்னஞ்சலுக்கும் Reference எண் வரும்.

தற்போதைய புகார் நிலையை எப்படிக் கண்டறிவது?

Reference எண்ணை வைத்து Check Status மூலமாகத் தற்போதைய நிலையை அறியலாம்.

அடையாளத்தை மறைத்துப் புகாரளித்தவர்கள் இச்சேவையைப் பெற முடியாது.

புகாரைத் திரும்பப் பெற முடியுமா?

பெண்கள் / குழந்தைகள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதுக்குப் புகாரளிக்கப்பட்டதைத் திரும்பப் பெற முடியாது.

ஆனால், மற்ற சைபர் குற்றங்களை FIR பதிவு செய்யப்படுவதற்கு முன் திரும்பப் பெற முடியும். FIR பதிவு செய்யப்பட்டு இருந்தால், புகாரைத் திரும்பப் பெற முடியாது.

உங்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் கீழ்க்கண்ட முகவரியில் புகார் அளியுங்கள். https://cybercrime.gov.in/ என்ற முகவரிக்கு சென்ற உடன் கீழ்கண்டவாறு அந்த பக்கம் இருக்கும். அதில் ஃபைல் கம்பிளைன்ட்னு சொடுகவும்.

பின்னர் அவர்களின் தனிப்பட்ட கொள்ளையை படித்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
பிறகு எந்த மாதிரியான புகார் என கேட்கட்டும். பெண்களுக்கு எதிரான மோசடி புகார் அல்லது மற்ற மோசடி புகாரா என.
மற்றதை தேர்ந்தெடுதந்தால் உங்களின் பெயர் மற்றும் கைபேசி எண் முதலியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து ஒரு முறை பயன்படுத்தும் ஆறு இலக்க எண்கள் குறுச்செய்தியாக வரும் அதை உள்ளீட்டு செய்து புகார் அளிக்கும் பக்கத்திற்கு நுழையவும்.
அங்கே எந்த மாதிரியான குற்றம், எதன் மூலம் நடந்தது, அவற்றின் தள முகவரி, நடந்த நாள் மற்றும் நேரம், பணம் இழந்தீர்களா, அவற்றின் ஆதாரம், ஏமாற்றியவரின் முகவரி, எதன் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது, எப்படி அறிந்தினீர்கள் ன கேட்கப்படும் கேள்விகளை அவரை பூர்த்தி செய்து அளிக்கப்பட்ட ஆதாரம் சரியாக இருந்தால் உங்களின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள்.
படம்: சைபர் கிரைம் இணைய பக்கம்



Reference


கருத்துரையிடுக

0 கருத்துகள்