Ad Code

Ticker

6/recent/ticker-posts

மாலத்தீவு ஸ்பெஷல் பிஸ்கீமியா செய்வது எப்படி?

 


தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ்-1/4 கிலோ

மைதா மாவு -1/4 கிலோ

பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2

 வேகவைத்த முட்டை- 3

கொத்தமல்லி தழை-தேவையான அளவு

மிளகுத்தூள்-2 டீஸ்பூன்

 உப்பு -தேவையான அளவு

எண்ணெய்-தேவையான அளவு

தண்ணீர்-தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த முட்டையை துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொண்டு அத்துடன் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் முட்டைக்கோஸ் மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதோடு சிறிதளவு காய்ச்சிய எண்ணெய் சேர்க்கவும் பின்பு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சமோசா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் சிறிய உருண்டைகளாக மாவை உருட்டி முன்னர் பிசைந்து வைத்து இருந்த "ஸ்டபிங்கை" உள்ளே வைத்து ஓரங்களில் தண்ணீர் விட்டு மடித்துக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் அதை பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும் இன்னர் என்ன சுவையான பிஸ்கீமியா தயார்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்