பலரும் மறந்து போன பழம் இலந்தை மருத்துவ குணம் அதிகம் கொண்ட இலந்தை பழத்தின் பிறப்பிடம் சீனா வறட்சிப் பகுதிகளில் தானாகவே வளரும் இந்த மரத்திற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை குளிர்காலத்தில் அதிக விளைச்சலைத் தரும் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும் இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
*உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடியது
* நினைவாற்றலை அதிகரிக்கும்
*சளியை போக்க உதவும் மலமிளக்கியாக பசியை அதிகப்படுத்த பயன்படுகிறது
*பித்தம் கபம் குறையும்
* ரத்த சுத்தி, முதுகு வலி, ஆஸ்துமா ரத்த அழுத்தத்தைக் குறைக்க தலைவலி குணமாக என பலவிதங்களிலும் இலந்தை உதவுகிறது உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது.
*இலந்தை இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் குணம் கிட்டும் வேனல் கட்டிகள் மீது இலைகளை அரைத்து கட்டினால் விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
தேவையான பொருட்கள்
இலந்தைப்பழம்- ஒரு கப்
வெல்லம்-கால் கப்
பச்சை மிளகாய்- 2
பெருங்காயம் -ஒரு சிட்டிகை
உப்பு -சிறிதளவு
செய்முறை
முதலில் பச்சை மிளகாயை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். பிறகு இலந்தைப்பழம் பெருங்காயம் உப்பு வெல்லம் சேர்த்து அரைக்கவும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் காயவிடவும் அடுத்த நாள் அற்புதமான ருசியில் இலந்தை அடை தயார் கைகளால் உரலில் இடித்து செய்தால் கூடுதல் ருசிக் கொண்ட பதமாக இருக்கும் சீனா கொரியா வியட்நாம் ஜப்பான் ஆகிய நாடுகளில் இலந்தை இலையில் டீ தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்