காடுகளைப் பசுமைப்பொன் என்று அழைத்தால் அதில் தவறில்லை. காடுகளின் பயனை அறிந்தே நம் மத்திய அரசு 'வனத்துறை பாதுகாப்பு' என்ற ஒரு அமைச்சகத்தையே நியமித்துள்ளது. விறகுகளுக்காகவும் ஏனைய மரச்சாமான்ககளை உருவாக்கவும் நாம் வெட்டி அழித்த காடுகள் ஒன்றல்ல இரண்டல்ல. காடுகள் அழிந்து போகுமாயின் அது நாட்டைப் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் யாவருக்கும் உண்டு. காடுகளே மழைக்கு முக்கிய காரணமாக விளக்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளே கார்மேகங்களை குளிர்வித்து மழையைப் பொழிவிக்கின்றன.
மழையில்லையேல் நாட்டில் வளமேது? காலத்தே மழைபெய்யாவிடில் நாட்டில் வறட்சி, பஞ்சம், பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாடு, தானியங்கள் விளையாமை என பல தீமைகள் விளையும்.
காடுகளிலுள்ள மரங்களின் வேர்கள் மண்ணில் ஊடுருவி இருப்பதாலேயே மண்ணின் கெட்டித்தன்மை மாறாதிருக்கிறது. மரங்கள் இல்லையென்றால் மண் இளகி ஆங்காங்கே நிலச்சரிவு புதைமணல் என்ற நிலையாகிவிடும்.
இது தவிர காடுகள் மூலிகைகளின் பொக்கிஷங்கள் ஆகும். சித்த மருத்துவத்தில் பயன்படும் அனைத்து மூலிகைகளையும் தருவது காடுகளே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
தேன், ஏலம், மிளகு, காய், கனிகள் போன்ற உணவுப் பயிர்களைத் தருவது காடுகளே. மரச்சாமான்கள் செய்யப்பயன்படும் தேக்கு, கருங்காலி, போன்ற மரங்களை விளைவிப்பதும் காடுகள்.
பறவைகளின் சரணாலயங்களாகவும் விலங்குகளின் சரணாலயங்களாகவும் விளங்குவது காடுகளே.
யாரும் பராமரிக்காமல் இயற்கையின் வரப்பிரசாதமாக விளங்கும் காடுகள் மனிதர்க்கு இத்தனைப் பயன்களை அள்ளி வழங்குவதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
காடுகளின் பயனைத் தெரிந்த நாம் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தேவையின்றி மரங்களை வெட்டுதல் கூடாது.
ஒரு மரத்தை வெட்டினால் இரு மரங்களை நடு என்று இன்று எல்லாவிடங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதை நாமும் செயல்படுத்த வேண்டும். மேலும் புதியதாக வளர்ந்து நமது வருங்கால சந்ததியினரை நலமுடன் வாழவைப்போம்.
அரசு அறிவித்துள்ள சட்ட திட்டங்களை மதித்தல்
பிளாஸ்டிக் கழிவுகளை காடுகளில் கொட்டுவதை தவிர்த்தல்
அனுமதி இன்றி மரங்களை வெட்டுவதை தவிர்த்தல்
கண்ணாடி பாட்டில் உடைத்து எரிவதை நிறுத்துதல்
காட்டுப்பகுதியில் தீ பற்றவைத்தலை தவிர்த்தல் அல்லது பூரணமாக அணைத்தல்
0 கருத்துகள்