Ad Code

Ticker

6/recent/ticker-posts

108MP Camera | 5520mAh Battery | 3D Display – Redmi Note 15 Smartphone Full Specs & Price in India

108 எம்.பி. கேமரா.. 5520 எம்.ஏ.எச். பேட்டரி.. 3டி டிஸ்பிளே..

ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன்..!




 ரெட்மி நிறுவனம்! நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 5ஜி மாடலை, ஜனவரி மாதம் 6-ந் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகமான நிலையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன், இந்திய சந்தையில் நுழைய இருக்கிறது.


108 எம்.பி. கேமரா, 5520 எம்.ஏ.எச். பேட்டரி, 3டி டிஸ்பிளே... என ரெட்மி நோட் 15 மாடலின் சிறப்பம்சங்கள் நீண்டு கொண்டே இருக்க, அந்த மாடலின் முழு விவரங்களை இந்தத் தொகுப்பில் அறிந்து கொள்வோம்.


செயல்திறன்


10 சதவீத ஜி.பி.யூ. பூஸ்ட் மற்றும் 30 சதவீத சி.பி.யூ. பூஸ்ட் கொண்ட குவால்காம் ஸ்நாப்டிராகன் 6 ஜென் 3 (Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் இருப்பதால், தொய்வில்லாத செயல்திறனை கொடுக்கும்.


குறைந்தது 48 மாதங்களுக்கு லேக்-ப்ரீ பெர்பாமென்ஸை எதிர்பார்க்கலாம். 120 ஹட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.77 அங்குல 3-டி கர்வ்ட் அமோ லெட் (3D Curved AMOLED) தொடுதிரைக்கு, 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.


கேமரா


ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 108 எம்.பி. மெயின் கேமரா இந்த ஸ்மார்ட்போனின் பிளஸ் பாயிண்ட். அதுபோக, 8 எம்.பி. அல்ட்ரா வைட் கேமரா,


20 எம்.பி. செல்பி கேமரா, பிரகாசமான பிளாஷ் லைட் போன்றவையும், கேமரா அம்சங்களை முழுமையாக்குகின்றன. இதுவொரு போர்ட்ராய்டு கேமரா மாடலாகும். ஆகவே, மல்டிபோகல் போர்ட் ராய்டு லெஜண்ட் (Mutifocul Portrait Legend) சப்போர்ட், டைனமிக் ஷாட் (Dynamic Shot) போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.


பேட்டரி


இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனில் 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5520 எம்.ஏ.எச். பேட்டரி வழங்கப்படுகிறது. இதை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் போதும், 1.6 நாட்கள் இயங்கும்.


சக்திவாய்ந்த பேட்டரியுடன், ஸ்லிம் போனாக இது வெளிவருவது கூடுதல் சிறப்பு. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஐ.பி.66 பாதுகாப்பு தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், தூசி மற்றும் தண்ணீரால் பாதிப்படையாது.கூடவே, தொடுதிரையின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்தாலும் டிஸ்பிளே இயங்கும் வகையில் 'ஹைட்ரோ டச் 2.0'(Hydro Touch 2.0) வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


விலை


இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தொழில்நுட்ப அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில், விலை இன்னும் அறிவிக்கப் படவில்லை. இருப்பினும் சர்வதேச சந்தையில் அறிமுகமானதை வைத்து, உத்தேச விலை கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரி வேரி யண்ட்டின் விலை ரூ.22,999 ஆகவும், 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி வேரியண்டின் விலை ரூ.24,999 ஆகவும் நிர்ண யிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது


Redmi Note 15 Launch in India – 108MP Camera, 5520mAh Battery, 3D Display | Full Details



கருத்துரையிடுக

0 கருத்துகள்