திருவண்ணாமலை அடிமுடிகாண முடியாமல் திரும்பிய திருமாலுக்கும். பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சி தந்தார் சிவபெருமான். அந்த நிகழ்வு நடைபெற்றது சிவராத்திரி நாளில்தான். சிவன் வீற்றிருந்து அருள்வழங்கும் கோவில் ஒன்றில், ஒரு பெருச்சாளி ஓடித் திரிந்தது. அந்தக் கோவிலில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கின் நெய்பாசனை பெருச்சாளியின் மூக்கைத் துளைத்தது. அதைச் சுவைப்பதற்காக விளக்கின் மேல் ஏறியது.
மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் அருகில் எலி வந்தது. எலியின் மூக்கு திரியில் பட்டு, மங்கலாக எரிந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. எலியின் மூக்கில் வெப்பம் பட்டதால் அது, தாவி ஓடிவிட்டது. அதுவும் ஒரு சிவராத்திரி தினத்தில் நடந்ததுதான், தன்னை அறியாமலேயே விளக்குத் திரியை தூண்டிவிட்ட எலியை, அடுத்த பிறவியில் மூவுலகையும் ஆளும் மகாபலி சக்கரவர்த்தியாக இறைவன் பிறப் பெடுக்க வைத்தார். சிவராத்திரி அன்று சிவாலயத் தில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு கைங்கரியமும் நம்மை உயர்த்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஒரு முறை உமாதேவி விளையாட்டாக சிவபெரு மானின் கண்களை மூடினார். அதனால் உலகமே இருளில் மூழ்கியது. அந்த நாளே 'சிவராத்திரி' என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த இரவில் ஒளி வேண்டி தவித்த தேவர்களுக்கெல்லாம். ஒளிகொடுப்பதற்காக சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணைத் திறந்ததாகவும் கருதப்படு கிறது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமய மாக மாற, எல்லோரும் இந்த விரதத்தை மேற் கொள்ளலாம்.
இந்த விரதநாளில் சிவபெருமானை மனமுருகி வழிபட்டால், தினமும் தித்திக்கும் செய்திகள் வந்துசேரும். மகா சிவராத்திரி என்பது மாசி மாதம்கிருஷ்ண பட்சம் சதுர்த் தசி திதியில் வருவதாகும். அன்றைய தினம் மாலை முதல் நான்கு சாமங்களிலும் சிவ பூஜை செய்து விரதம் இருந்தால், நாள் தோறும் நற்பலன்கள் நடைபெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், நான்காவது சாமத்தில் பூஜையை முடித்த பிறகு அதிகாலையில் நீராடி, அதன்பிறகு உணவு உண்பது நன்மை தரும். சிவராத்திரி அன்று சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்து சேரும். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிவுடைய அன்னை பார்வதி தேவியை அன்று வணங்கினால் ஊரும், உறவும் உங்களைப் போற்றிக் கொண்டாடும் விதத்தில் உங்கள் வாழ்க்கை மாறும்.
சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் அவரை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும். வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து சுத்த அன் ளத்தை நைவேத்தியமாக படைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சர மந்திரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் வந்துசேரும்.
இந்த இனிய நான் இவ்வாண்டு மாசி மாதம் 3-ம் நாள் (15.2.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அதற்கு முதல் நாள் சிவ தூதனாம் நந்தியம்பெருமானைக் கொண்டாடும் சனிப்பிர தோஷமும் வருகிறது. சிவராத்திரியன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஒவ்வொரு சாமங்களிலும், சகல சிவாலயங்களி லும் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெறும், அதில் கலந்துகொண்டு சிவன், உமைய வள், நந்தி ஆகியோரின் நல்லருளைப் பெற்று நலமுடன் வாழலாம். மகிழ்ச்சியை அனைவரும் வரவழைத்துக்கொள்ள மகேசன் அருள்புரியட்டும்.
ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்
Key words
சிவராத்திரி வழிபாடு,மகாசிவராத்திரி வழிபாடு,சிவராத்திரி பூஜை முறை,சிவராத்திரி பரிகாரம்,செல்வ வளம் தரும் வழிபாடு,பணவரவு அதிகரிக்கும் வழிபாடு,சிவ பூஜை பலன்கள்,சிவராத்திரி மந்திரம்,Mahashivratri pooja tamil,Shivratri pooja benefits,Lord Shiva wealth remedy,Mahashivratri benefits Tamil,spiritual remedies for money,powerful pooja for wealth

0 கருத்துகள்