Ad Code

Ticker

6/recent/ticker-posts

மகா சிவராத்திரி 2026 – இந்த ஒரு வழிபாடு செய்தால் பணம், புண்ணியம், அதிர்ஷ்டம் கிடைக்கும்

 


சிவபெருமாறுக்கும் முக்கிய விரத வழிபாடுகளில் ஒன்றான மகா சிவ ராத்திரியில் சிவனை வழி பட்டால் பலவிதமான துன்பங் களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் சிவ பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து இருந்து, சிவ நாமத்தை உச்சரித்தபடி சிவனை வழிபடு வார்கள். ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி தினம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை இ சதுர்த்தசி நாளையே, 'மகா சிவராத்திரி' என்று போற்றி வணங்குகிறோம். மகா சிவராத்திரி பற்றி பல புராண தகவல்கள் உள்ளன.


பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப் பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டன. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தார். நான்கு ஜாமங் களிலும், இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். அம்பிகை இவ்வாறு சூரிய அஸ்தமன நேரம் முதல் மறு நாள் சூரிய உதயம் வரை பூஜை செய்த காலமே, மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.


ந்த பூஜையின் முடிவில் பார்வதிக்கு, சிவபெருமான் காட்சி கொடுத்தார். அவரிடம், "சிவராத்திரி அன்று. சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில், மோட் சத்தையும் அளிக்க வேண்டும்" என்று பார்வதிதேவி வேண்டினார். சிவபெருமானும் 'அப்படியே ஆகட்டும்' என்று அருள்புரிந்தார்.


ரு சமயம் மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இருவரில் 'யார் பெரியவர்' என்ற போட்டி ஏற்பட்டபோது, சிவபெருமான் அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக உயர்ந்து நின்றார். அதில் ஈசனின் ' முடியையோ, அடியையோ காண்பவர்களே பெரியவர் என்று சொல்லப்பட் டது. இதையடுத்து பிரம்மதேவன், அன்னப் பறவை உருவம் கொண்டு முடியைத் தேடியும், மகாவிஷ்ணு வராக உருவம் கொண்டு பாதாளத்தைத் தோண்டியபடி, ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர். இந்த கோலத்தையே, 'லிங்கோத்பவர் கோலம்' என்பார்கள்.மகாசிவராத்திரி நாளில்தான், இந்த திருக்காட்சி காணக்கிடைத்தது என்கிறார்கள்.


கிருத யுகத்தில், துர்வாச முனிவர் தனக்கு மகா லட்சுமி அளித்த மாலையை இந்திரனுக்கு கொடுத்தார். அதை, இந்திரன் தன் வாகனமான ஐராவதத்தை வாங்கச் சொல்ல, யானையோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி காலில் போட்டு மிதித்தது. இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தன் செல்வத்தை இழந்துபோவான் என்று சபித்தார். செல்வத்தை இழந்த இந்திரன், பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டு, இழந்த செல்வத்தைப் பெற முயற்சித்தான். அதன்படி, இந்திரன் பூஜித்த காலமே மகா சிவராத்திரி என்கிறார்கள்.


தேவர்கள் அமிர்தம் வேண்டி, மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால் தேவர்களால் பாற்கடலைக் கடைய முடியவில்லை. எனவே துணைக்கு அகரர்களை அழைத்தனர். அகார்களும்,தேவர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்த போது, ஆலகாலம் என்ற கொடிய விஷம் வெளிப்பட்டது. அதன் சக்தியால் அனைத்து உயிர்களும் வெப்பத்தில் துன்பப்பட்டன. இதைக் கண்டு பார்வதி தேவி, பரமேஸ்வரனிடம் முறையிட்டார். உடனே பரமேஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டார். இதனால் மயங்கி சரிவதுபோல் இருந்த நீலகண்டரை கண்ட தேவர்கள் பயந்து, "சுவாமி தாங்கள் கண் விழித்து எங்களை காக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தனர். அவ்வாறு தேவர்கள், சிவபெருமானை பூஜித்த காலமே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படு கிறது.


சிவராத்திரி விரதம்


சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம், சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம், வருடம் முழுவதும் விரதம் மேற்கொள்வது, நூறு அஸ்வமேத யாகம் செய்வது, பலமுறை கங்கையில் நீராடுவது ஆகியவை கூட ஒரு சிவராத்திரி விரதத்திற்கு ஈடாகாது.


சிவராத்திரிக்கு முன்தினம் ஒரு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜை செய்ய வேண்டும். அதன்பின் சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். நான்கு கால பூஜையிலும் கலந்துகொண்டு, சிவபெரு மானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரங்களை கண்டு களிக்க வேண்டும். அப்போது இறைவனின் திருநாமத்தைத் தவிர வேறு எதையும் உச்சரிக்கக் கூடாது. இரவு முழுவதும் கண்விழித்து இருக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றுதான் கண்விழித்து இருக்க வேண்டும் என்று கிடையாது. வீட்டிலும் கூட மகா சிவராத்திரி அன்று, நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்து, ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது உரிய பலனைத் தரும்.


மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், ஐந்தெ ழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற சொல்லை 108 முறை அல்லது 1008 முறை உச்சரித்து பூஜிக்க வேண்டும். நான்கு ஜாம பூஜைகளும் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் நீராடி, இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை தானம் அளித்தும், விரதம் இருப்பவர்கள் உண்டும் விரதத்தை முடிக்க வேண்டும். தொடர்ச்சியாக 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தி அடைவார்கள், பல புண்ணியங்கள் செய்த பலன் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.


வேடனின் பாவம் போக்கிய மகா சிவராத்திரி


முன்பொரு சமயம், வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றான். அவ்வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்தான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றிவந்தது. வேடன் எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றியபடியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் வேடன் வீடு திரும்பினான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.


அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. பலமிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாவ கணக்கில் எதுவும் இல்லை என்று சித்திரகுப்தன் சொன்னது, எமதர்மனுக்கு அதிர்ச்சி அளித்தது. வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது. வில்வ மரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன. வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது.மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர்.

சிவாலய ஓட்டம்

ன்னியாகுமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரி தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறி ஏந்தி 'கோவிந்தா. கோபாலா.. என்ற திருநாமத்தை உச்சரித்தபடியே 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவார்கள். இதையே 'சிவாலய ஓட்டம்' என்கிறார்கள். மகா சிவராத்திரிக்கு முந்தைய தினம் மாலையில் முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் தொடங்கி, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந் திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு ஆசிய சிவ தலங்களுக்கு சென்று இறுதியில் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவு பெறும். இந்த சிவாலய ஓட்டம் ஹரியும்,சிவனும் ஒன்று என்னும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் நடத்தப்படுகிறது.


Key words 

மகா சிவராத்திரி,Mahashivratri 2026 Tamilசிவராத்திரி வழிபாடு,சிவராத்திரி விரதம்,சிவராத்திரி பலன்கள்,சிவபெருமான் வழிபாடு,Mahashivratri benefits Tamil,சிவராத்திரி பூஜை முறை,Mahashivratri fasting Tamil,சிவராத்திரி முக்கியத்துவம்,Lord Shiva worship Tamil,Mahashivratri, pooja time

கருத்துரையிடுக

0 கருத்துகள்