தமிழ்நாடு அரசு தேர்வுத் திட்டத்தின் படி, 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் என்பது மாணவர்களுக்கு மிக முக்கியமானது. இந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் ஒரு மதிப்பெண் வினாக்களை (1 Mark Questions) தினசரி பயிற்சி செய்ய வேண்டும்.
அதற்காகத்தான் இந்த Online Test!
இது உங்கள் தேர்வு தயாரிப்பை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உயர்த்தும்.
இன்றைய 5 வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) பிரான்சு
விடை: ஆ) ரஷ்யா
2. அமெரிக்க பங்குசந்தைகளில் முதல் பெரும் வீழ்ச்சி ஏற்பட்ட நாள்
அ) 24 அக்டோபர் 1929
ஆ) 14 அக்டோபர் 1929
இ) 24 நவம்பர் 1925
ஈ) 24 நவம்பர் 1928
விடை:அ) 24 அக்டோபர் 1929
3. அணிசேரா இயக்கத்தின் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டவர்
அ) லால்பகதூர் சாஸ்திரி
ஆ) மோதிலால் நேரு
இ) ஜவஹர்லால் நேரு
ஈ) வல்லபாய் பட்டேல்
விடை:இ) ஜவஹர்லால் நேரு
4. உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்ட ஆண்டு
அ) 1827
ஆ) 1826
இ) 1829
ஈ)1927
விடை:இ) 1829
5. கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857- ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம்: மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வியடைந்தது.
அ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
விடை
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
மேற்கண்ட ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் படித்து விட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஆன்லைன் தேர்வு எழுதி உங்கள் மதிப்பெண் சரி பாருங்கள்
இந்த Online Test எப்படி பயனுள்ளதாக இருக்கும்?
*தினசரி 5 வினாக்கள் மூலம் தொடர்ந்து Revise செய்ய முடியும்
*பொதுத் தேர்விற்கு (SSLC Public Exam) உறுதியான தயாரிப்பு
*தேர்வு பயத்தில் மனஅழுத்தம் இல்லாமல், சீரான பயிற்சி
*மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக சிறந்த resource
குறைந்த நேரத்தில் அதிக பயன்!
இந்த மாதிரி Online Test-கள் உங்கள் தினசரி timetable-இல் 10 நிமிடங்கள் மட்டும் ஒதுக்கினால் போதும். ஒவ்வொரு வினாக்களும் தேர்வில் வரும் முக்கியமான பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
மறக்காமல் பார்க்க
*10 th social தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆன்லைன் தேர்வு -7
*தினமும் ஐந்து வரைபடம் வினாக்கள் ஆன்லைன் தேர்வு
0 கருத்துகள்