1. எத்தியோப்பியாவின் படைகள் இத்தாலியின் படைகளை எவ்விடத்தில் தோற்கடித்தது?
அ) டெல்வில்லி
இ) அடோவா
ஆ) ஆரஞ்சு நாடு
ஈ) அல்ஜியர்ஸ்
2. ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தான நாள்
அ) ஜூன் 26, 1942
ஆ) ஜூன் 26, 1945
இ) ஜனவரி 1, 1942
ஈ) ஜனவரி 1, 1945
3. 'சத்யார்த்த பிகாஷ்' எனும் நூலின் ஆசிரியர்
அ) சுவாமி தயானந்த சரஸ்வதி
ஆ) ஆத்மராம பாண்டுரங்
இ) அன்னிபெசண்ட்
ஈ) தேவேந்திரநாத்
4. எந்த கிளர்ச்சியின் பின்னணியில் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?
அ) கோல் கிளர்ச்சி
ஆ) இண்டிகோ கிளர்ச்சி
இ) முண்டா கிளர்ச்சி
ஈ) தக்காண கலவரங்கள்
5. கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின.
காரணம்: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
ஆ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
6. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) கொல்லேறு ஏரி
இ) சிலிகா ஏரி
ஆ) வேம்பநாடு ஏரி
ஈ) பழவேற்காடு ஏரி
7. பொன் புரட்சி எந்த வேளாண் பொருள் உற்பத்தியுடன் தொடர்புடையது?
அ) உருளைக் கிழங்கு
ஆ) எண்ணெய் வித்துக்கள்
இ) தேன்
ஈ) சணல்
8. தேசிய காற்றாற்றல் நிறுவனம் அமைந்தள்ள இடம்
அ) ஃபரிதாபாத்
ஆ) சென்னை
இ) கன்னியாகுமரி
ஈ) விழிஞ்சம்
9. பின்னடையும் பருவக்காற்று எந்த கடலிலிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது?
அ) அரபிக் கடல்
ஆ) வங்கக் கடல்
இ) இந்தியப் பெருங்கடல்
ஈ) தைமூர்க் கடல்
10. பேரிடர் அவசரகால தொலைபேசி எண்
அ) 1095
ஆ) 1944
இ) 1098
ஈ) 1077
11. பின்வருவனவற்றுள்எந்த உரிமை Dr.B.Rஅம்பேத்கர் அவர்களால் “இந்திய அரசியல் அமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா" என விவரிக்கப்படுகிறது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைக்குட்பட்டுதீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
12. புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
அ) மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ) சர் சிரில் ராட்கிளிஃப்
இ) கிளமெண்ட் அட்லி
ஈ) கான் அப்துல் கஃபார் கான்
13. ஒரு நல்ல பொருளாதாரம் இதனின் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
அ) பண மானியங்கள்
ஆ) மூலதன சந்தை
இ) வரி சலுகைகள்
ஈ) சொத்து உரிமைகள்
14. சரியில்லாத கூற்றைத் தோந்தெடுக்கவும்.
i) இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்களின் பற்றாக்குறை கருப்பு பணத்திற்கு மூலக் காரணம் ஆகும்.
ii) கருப்புப் பணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறை ஆகும்.
iii) கருப்புப் பணம் உருவாவதற்கு கடத்தல் ஒரு முக்கிய மூலமாகும்.
iv) வரிவிகிதம் குறைவாக இருக்கும்போது, அதிக கருப்புப் பணம் தோன்றுகிறது
அ) (i) மற்றும்(ii) மட்டும்
ஆ) (iv) மட்டும்
இ) (i) மட்டும்
ஈ) (ii) மற்றும் (iii) மட்டும்
10ம் வகுப்பு சமூக அறிவியல் 1 மதிப்பெண் வினா வினாத்தாள் | Online MCQ தேர்வு பயிற்சி
Key words
10ம் வகுப்பு சமூக அறிவியல், ஒரு மதிப்பெண் வினாக்கள், சமூக அறிவியல் MCQ தமிழ், SSLC online test Tamil, 10th Social Science quiz, SSLC one mark questions, SSLC 2025 test
0 கருத்துகள்