Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்!" கல்கிள்ளி கைஉயர்ந்தார் இல் "

தமிழ் அறிவோம்!


" கல்கிள்ளி கைஉயர்ந்தார் இல் " 




 என் நண்பன் ஒருவன் கையில் பெரிய கட்டுப்போட்டுக் கொண்டு வந்தான். " நண்பா! உனக்கு என்னவாயிற்று. கையில் என்ன காயம்? "   என்று கேட்டேன்.  " நான் ஈருருளியில் சென்றேன். எதிரே வந்த பேருந்து என்மீது மோதிவிட்டது. அதனால் என் கை உடைந்துவிட்டது " என்றான். 


" கொஞ்சம் பார்த்துச் செல்லக்கூடாதா? என்று கேட்டேன். " கொஞ்சம் அல்ல. நன்றாக பார்த்துக் கொண்டேதான் சென்றேன். இவன் நம்மீது  மோதிவிட்டு சென்றுவிடுவானா? என்று நினைத்துக்கொண்டே  அந்தப் பேருந்துக்கு வழிவிடாமல் சாலையின் நடுவே சென்றேன். அதனால் அந்தப் பேருந்து வேறுவழியில்லாமல்  என்மீது மோதிவிட்டு சென்றது " என்றான். " ,இப்படி தெரிந்தே நீ தப்பு  பண்ணலாமா? என்று கேட்டேன். " தப்பு செய்தால் தானே தத்துவம் பிறக்கும் " என்று சொல்லிவிட்டு ஒரு தத்துவத்தைக் கூறிவிட்டுச் சென்றான். 

" நம்மைவிட பெரிய ஆளுங்கக்கூட மோதினால்,  நமக்குத்தான் சேதாரம்  ஏற்படும் " இதுதான் அவன் சொன்ன தத்துவம்.  


" மிக்குஉடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை 

ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும் 

நற்குஎளிது ஆகி விடினும் நளிர்வரைமேல் 

கல்கிள்ளிக் கைஉயர்ந்தார் மேல் " 


( முன்றுரையரையனார். பழமொழி நானூறு - 48)


குளிர்ந்த மலைமேல் கற்பாறைகள் மிகுதியாகக் கிடக்கின்றன. அவற்றைச் சும்மா கிள்ளிப் பார்க்கலாமே என்று எண்ணுதல் கூடாது. அப்படி அந்தப் பாறையைக் கிள்ளினால் நமக்குத்தான் கை வலிக்கும். அந்தப் பாறைக்கு ஒன்றும் ஆகாது. அதுபோல,  அறிவுநிறைந்த சான்றோர்களையும் , மக்களால் மிகவும் மதிக்கப்படுபவர்களையும் , அவர்கள் வருந்தும்படி அவர்களுக்குத் தீங்கு செய்தால் அது நமக்குத்தான் துன்பத்தைத்தரும். அவர்களுக்கு ஒன்றும் ஆகாது. 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்