தமிழ் அறிவோம்!
" காக்கைக்காகா கூகை "
இருபொருள் பட கருத்தாடும் முறையில் கைதேர்ந்தவர்தான் காளமேகப்புலவர். 'ககர ' வரிசை மட்டுமே அமையுமாறு அழகான செய்யுள் ஒன்றைப் பாடியுள்ளார். இதுபோல பாடுவது மிகவும் கடினமாகும். அந்தப் பாடலை இங்குக் காண்போம்.
" காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க - கைக்குக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா
காக்கைக்குப் பகை கூகை ( ஆந்தை) ; கூகைக்குப் பகை காக்கை. பகற்பொழுதில் காகம் கூகையை வென்றுவிடும் ; இரவுப்பொழுதில் கூகை காகத்தை வென்றுவிடும். அரசன் ( கோ) பகைவரிடத்தில் இருந்து தன் நாட்டை பகலில் காக்கையைப் போலவும், இரவில் கூகையைப் போலவும் காக்க வேண்டும். பகைவனின் பலவீனமறிந்து , கொக்கு காத்திருப்பது போல தகுந்த காலம்வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசன்கூட பகையை வெல்ல முடியாமல் தோற்றுவிடுவான்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்