Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழக போலீஸ் துறையில் விரைவில் 1,352 சப்- இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

 தமிழக போலீஸ் துறையில் விரைவில் 1,352 சப்- இன்ஸ்பெக்டர்கள் நியமனம் 



 சீருடை பணியாளர் தேர்வாரியம் அறிவிப்பு

தமிழக  போலீஸ் துறையில் விரைவில் 1352 சப் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர் இதற்கு வருகிற 7-ந் தேதி முதல் "ஆன்லைன்" மூலம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1,352 செப் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 தமிழக போலீஸ் துறையில் 1,352 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட இருக்கிறது. இதில் 53 இடங்கள் எஸ்.சி (ஆதிதிராவிடர்கள்) எஸ்.டி (பழங்குடியினர் வகுப்பிற்கான பின்னடைவு பணியிடங்கள் ஆகும். ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

பொது பிரிவினருக்கு வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும். பி,சி.,பி சி- முஸ்லிம், எம். பி. சி வகுப்பினருக்கு 32, எஸ்.சி,எஸ்.டி,உறுப்பினர் மற்றும் மூன்றம் பாலினத்தவருக்கு 35,ஆதரவற்ற விதவைகளுக்கு 37, என வயதுவரம்பு நின்னிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உடற்தகுதியும் நினைக்கப்பட்டுள்ளது‌.மொத்த காலியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 10% (ஆண்களுக்கு ஏழு சதவீதம் பெண்களுக்கு மூன்று சதம்) ஒதுக்கீடு வழங்கப்படும்.

போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசருக்கு 20 சதவீதமும், போலீசாரின் வாரிசுகளுக்கு 10 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஒதுக்கீடு சலுகை பின்னடைவு பணியிடங்களுக்கு பொருந்தாது. 

7 தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 


உரிய கல்வித் தகுதியும், உடல் தகுதியும் உடைய பட்டதாரிகள் சீருடைய பணியாளர் தேர்வாணையத்தின் www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் வருகிற ஏழாம் தேதி(திங்கள் கிழமை)முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு மே 3ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்தார்களுக்கு முதலில் எழுத்து தேர்வு அதைத் தொடர்ந்து உடல் தகுதி தேர்வும்.இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, உடல் தகுதி  காலியிடங்கள் விவரம்  தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம். 

சிலம்பம் சேர்ப்பு 

மாவட்ட அளவில் ஆண்கள்- 654 பெண்கள் -279 என 933 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கும், ஆயுதப்படை பிரிவில் ஆண்கள்- 255 பெண்கள் 111 என366 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் நிரப்பிடப்பட உள்ளது.


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளின் பட்டியலில் தற்போது முதல் முறையாக சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது அதன்படி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற சிலம்பம் வீரர்கள் இப்பிரிவில் இட ஒதுக்கீடு பெற தகுதி பெற்றுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்