Ad Code

Ticker

6/recent/ticker-posts

செடிகளில் ஊட்டச் சத்துகள் பரவும் விதம்

 

பேரூட்டச் சத்துக்களை தழை, மணி சாம்பல் சத்துகள் வேகமாக பரவி பயிரின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கிடைக்கும்.  ஆனால் சத்துப்பற்றாக்குறை ஏற்படும் பொழுது அடி இலைகளில் முதலில் பாதிப்பு ஏற்படும்.  பற்றாக்குறை அதிகம் ஆகும்பொழுதுதான் மேல்உள்ள இலைகளிலும் பாதிப்பு அறிகுறிகளைக் காணலாம். மெக்னிசியம், துத்தநாகம், மாங்கனிசு, கந்தகம், மாலிப்டினம், இரும்ப, தாமிரம் போன்ற சத்துகள் குறைந்த வேகத்தில் பரவும்.  இவை பற்றாக்குறை ஆரம்பிக்கும்போது அறிகுறிகள் இளம் இலைகளில் காணலாம்.  சுண்ணாம்புச்சத்து, போரான் போன்ற சத்துகள் மிகக் குறைந்த வேகத்தில் நகர்வதால் இதன் பற்றாக்குறை அறிகுறிகளை நுனி இலைகளிலும், மொட்டுக்களிலும் காணலாம். சத்து பற்றாக்குறையை சரி செய்ய இயற்கை உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை அடியுரமாக கொடுத்து நிவர்த்தி செய்யலாம்.

100 கிலோ தொழுவுரத்தில் உள்ள சத்துக்கள் 

• தழைச்சத்து      - 1 சதவீதம்

• மணிச்சத்து        - 0.5  சதவீதம்

• சாம்பல் சத்து         - 1 சதவீதம்

• சுண்ணாம்பு சத்து  - 3 சதவீதம்

• மெக்னீசியம்  - 0.5 சதவீதம்

• கந்தகம்          - 0.5  சதவீதம் 



பயிருக்கு தேவையான  சத்துக்கள்  மொத்தம் 16

பேரூட்ட சத்துக்கள் - தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து இந்த வகை சத்துக்களை பயிருக்கு அதிகமாக பயன்படுத்துவதால் பேரூட்ட சத்து என்கிறோம். 

நுண்ணூட்ட சத்துக்கள் - இந்த வகை சத்துக்கள் வாயு நிலைகளிலும் காற்றிலிருந்தும் கிடைக்கும். கார்பன். ஹைட்ரஜன். ஆக்சிஜன் இவை கொழுப்புச்சத்துக்கள். காற்றிலிருந்து பயிருக்கு கிடைக்கிறது. சுண்ணாம்பு. மெக்னீசியம். இரும்பு போன்றவை மண்ணிலிருந்து கிடைக்க கூடிய திட வடிவ சத்துக்கள் ஆகும்.காய்கறிகளுக்கு நுண்ணூட்ட சத்து  போடுவதால் சுவை. மணம் அதிகம் இருக்கும்.சத்துக்களின் ராஜா என்று சுண்ணாம்புச் சத்து அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அனைத்து வகையான சத்துக்களையும் பிரித்து பயிருக்கு அனுப்புவதால் சுண்ணாம்புச்சத்திற்கு இந்த பெயர் கூறப்படுகிறது..

நுண்ணூட்டச் சத்துக்களின் முக்கியத்துவம்

ஊட்டச் சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்ளும் விதம்: தீவனப் பயிர்கள், கீரை வகைகள், தானியப்பயிர்கள் தழைச் சத்தினை அதிகமாக கிரகித்துக்கொள்ளும் பயிறு வகைகள் மணிச்சத்தை அதிகம் உட்கொள்ளும்.  பருத்தி, நிலக்கடலை தக்காளி ஆகியவற்றுக்கு சுண்ணாம்புச் சத்து அதிகம் தேவை.  காய்கறிகள் மெக்னிசியத்தினையும், எண்ணெய் வித்து பயிர்கள் மாங்கனிசு சத்தினையும் விரும்பும் கிழங்கு வகைகள், கரும்பு, பழங்களை போன்றவை இரும்புச் சத்தினை அதிகம் எடுத்துக்கொள்ளும்.

பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடுகளினால் பயிரின் இலைகளின் நரம்புகளுக்கிடையே மஞ்சளாக இருக்கும், நுனி காய்ந்து இருக்கும், நரம்புகள் காய்ந்து காணப்படும், நரம்புகளும், நுனியும் வளைந்து காணலாம்.  இலைகள் வாடியபடி இருக்கும்.  குருத்துக்களின் தோற்றம் எவ்வாறு உள்ளது.  இவ்வாறு பல்வேறு குறைபாடுகளை ஒப்பீட்டுப் பார்த்து குறைபாட்டிற்கு காரணமான ஊட்டச்சத்தினை கண்டறிந்து நிவர்த்தி முறைகளை மேற்க்கொள்ள வேண்டும்.


விவசாயிகள் சத்துக்குறைபாடுகளின் அறிகுறிகளை வயலின் சிறுபரப்பில் அனைத்துச் செடிகளிலும் காணலாம். செடியின் குறிப்பிட்ட வயது முதிர்ச்சியடைய அனைத்து பகுதியிலும் காணலாம். ஆனால் பூச்சி நோயினால் பாதிக்கப்படுவற்றின் அறிகுறிகள் வயல் முழவதும் பரவலாகத் தோன்றும்.  மேலும் இலைப்புள்ளிகளைச் சுற்றி மஞ்சள், பழுப்பு நிறமான வளையம் போன்று இருக்கும்.  இப்புள்ளிகள் இலைகளில் அங்கும் இங்கும் காணப்படும்.  வைரஸ் நோயினால் பாதிப்புடைய இலைகளின் நரம்புப்பகுதி மஞ்சள் நிறமாக மாறும். இதைக்கொண்டு விவசாயிகள் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் இது சத்துக்குறைபாட்டினை அல்லது பூச்சி, நோய் பாதிப்பினாலா என்று அறியலாம்

சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள மண்ணில் இரும்புச் சத்தும், மணிச் சத்தும் நீரில் கரையாத படி மண்ணில் ஒட்டிக் கொள்ளும்.  இதனால் தேவையான அளவு இரும்பு, மணிச்சத்து இட்டும் பயிருக்கு பயிர் கிடைக்காது. மேலும் இதனால் மாங்கனிசு மற்றும் துத்தநாகச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.  மேலும் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள மண்ணிற்கு அதிக அளவு போரான் இட வேண்டும்.  இவ்வாறு ஊட்டச்சத்துகளுக்கிடையே நட்பும் போட்டியும் இருக்கும்.விவசாயிகள் எளிய முறையில் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளை வயலில் அறியும் முறை: இந்த சத்துக்களின் தேவையையும், குறைபாட்டினையும பற்றாக்குறை காட்டிகள் என்று அழைக்கப்படும் பயிர்களை வைத்து அறியலாம்.  இதற்கு வயலில் இவற்றை ஒரு வரிசையில் பயிரிட்டு குறைபாட்டினை அறியலாம்.


இரும்பு     : சோளம், நெல்

துத்தநாகம் : மக்காச்சோளம், வெங்காயம்

மாங்கனிசு : அவரை, முள்ளங்கி, எலுமிச்சை

மாலிப்டினம்: காலிஃப்ளவர், முட்டைக்கோசு

போரான் : காலிஃப்ளவர், மலர்கள்

தாமிரம் : தக்காளி, எலுமிச்சை


நுண்ணாட்டச்சத்து மிக்க செடி வகைகள்: 

புளி, வாகநாராயணன், சீமைக் கருவேல் இலையில் துத்தநாகமும், கீரை வகைகளில் ( அகத்தியில் அதிகமாக  இரும்புச்சத்தும், தாமிரச்சத்து ஆவரையிலும், நன்கு புளித்த தயிர், முட்டை கரைசல், எருக்கம் இலையில் கால்சியம்சத்தும்,   அயோடின் வெண்டையிலும்,  போரான் கல்லி, கற்றாழை, எருக்கு போன்றவற்றில் அதிகம் உள்ளது.  எனவே இந்தத் தழைகளை 10 கிலோ எடுத்து வெல்லம் சேர்த்து 7 நாட்கள் ஊற வைத்து தெளிக்கலாம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்