பப்பாளி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு
தமிழகத்தில் பப்பாளி பொதுவாக செம்மண் செம்மண் சரளை மணல் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமான நோய் தாக்குதலும் வைரஸ் தொல்லைகளாலும் பப்பாளியில் முழுமையாகவே விளைச்சல் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனை தவிர்க்க பப்பாளி விவசாயம் செய்வோர் கீழ்க்கண்ட முறைகளை கடைப் பிடிக்கலாம்.பப்பாளி நடுவதற்கு தயார் செய்ய குழி எடுத்து காய வைக்கும் காலத்தில் குறைந்தபட்சம் 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் உடன் 10கிலோ தொலுவுரம் அல்லது 200 கிராம் அசோஸ் பைரில்லம் கலந்து தண்ணீர் கொடுத்து வைக்கலாம். ஒவ்வொரு குழிகளிலும் குறைந்தபட்சம் 10 கிலோ அளவுள்ள மட்கிய தொழுவுரம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் மேற்கண்ட சூடோமோனஸ் தூளுடன் கலந்து அடியுரமாக இடலாம்.
ஒவ்வொரு மாதமும் பழம் பூ பூக்கும் ஏழாம் மாதம் முன்பு வரை ஒவ்வொரு மாதமும் தரைவழி அதிக அளவில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து அதிகமாகவும் மணிச்சத்து குறைவாகவும் இருக்குமாறு இடுபொருட்களை கொடுப்பது மிகவும் முக்கியம். முதல் மாதத்தில் வாரம் ஒருமுறை மீன் அமிலம் அல்லது ஜீவாமிர்தம் அல்லது பஞ்சகாவியா கண்டிப்பாக தரவேண்டும்.அனைத்துப் பயிர்களுக்கும் அந்த சத்து கிடைத்து விட்டதை உறுதிப்படுத்தவேண்டும். பொதுவாக பழ மரங்கள் உள்ள நிலங்களில் சரிவு அதிகம் உள்ள இடங்களில், மேடுகளில் உள்ள பயிர்களுக்கு சத்துகள் போதுமான அளவு கிடைக்காத வகையும் உள்ளது . இதுவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வைரஸ் போன்ற நோய் வர ஒரு காரணமாக அமைகிறது.
எனவே 200 லிட்டர் என்ற அளவில் அரை லிட்டர் மீன் அமிலம் கலந்து அதனை எடுத்துக்கொண்டு போய் பாசனம் செய்த வயலில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தபட்சம் அரை லிட்டர் என 400 செடிகளுக்கு ஊற்றி விடலாம். இதனை ஒவ்வொரு பாசனத்திற்கும் பண்ணலாம். இதேபோல் பஞ்சகாவ்யாவை கொடுக்கவேண்டும். ஜீவாமிர்தம் கொடுப்பதாக இருந்தால் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை இன்னும் 300 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு பப்பாளி ஊரிலும் செடிக்கு செடி செடி செடிக்கும் செடிக்கும் ஒரு லிட்டர் ஊற்றி விடலாம். இதனை ஒவ்வொரு மாதமும் மாதத்திற்கு நான்கு முறை செய்வது நல்லது அதேபோல் பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசலை 10 லிட்டர் அரை லிட்டர் என தெளிக்க வேண்டும்.
முதல் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு செடியினை சுற்றியும் எடுக்கப்பட்ட வட்டப்பாதையில் எந்த ஒரு களைச்செடிகள் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.முதல் ஆறு மாதங்கள் ஒவ்வொரு செடிக்கும் குறைந்தபட்சம் காலை 5 லிட்டர் மாலை 5 லிட்டர் என வாரம் மூன்று முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும் தண்ணீர் தேங்கி நிற்கும் அல்லது ஈரம் அதிகம் இருக்கும் நிலம் என்றால் வாரம் ஒரு முறை தண்ணீர் தரலாம்.15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் சூடோமோனஸ் அல்லது விரிடி திரவத்தை தரைவழி தரவேண்டும். 10 லிட்டருக்கு 50 மில்லி என கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண்டும். இதனை அனைத்து மாதங்களிலும் செய்ய வேண்டும் . 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய முடியாதவர்கள் மாதம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்.
மூன்றாம் மாதத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் என இ எம் கரைசலை மாதம் ஒரு முறையாவது பயிர்களுக்கு தருவது நல்லது.மூன்றாம் மாதத்தில் இருந்து மாதம் ஒரு முறை எருக்கு கரைசலை தரைவழி தரவேண்டும். எருக்கு கரைசல் கிடைக்காதவர்கள் கடையில் விற்கும் போரான் ஒரு மரத்திற்கு 50 கிராம் என்ற அளவில் தொழு உரத்தோடு கலந்து தரைவழி தரவும்.நிலத்தில் எந்த ஒரு நேரத்திலும் எறும்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எறும்பு இருந்தால் வசம்பு கரைசலை தெளித்து விடலாம் அல்லது அதன் புற்றில் சுடு தண்ணீர் ஊற்றி விடலாம்.
பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு சால் உழவு செய்துவிட்டு.. அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி விட்டு அரையடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 436 குழிகள் வரை எடுக்கலாம். குழி எடுத்த மறுநாள் ஒரு குழிக்கு அரை கிலோ தொழுவுரம் போட்டு, நடுவிரல் அளவு குழி எடுத்து, பப்பாளி கன்றை வைத்து, மேல் மண் கொண்டு குழியை மூடிவிட வேண்டும். நடவு செய்த உடனே பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.
ஏக்கருக்கு அரை கிலோ விதை!
பப்பாளியை கன்றாக வாங்காமல், விதையை வாங்கி நாமே நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதுதான் சிறந்தது. 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் நாற்றங்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான அரை கிலோ விதையை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் பஞ்சகவ்யா ஊற்றி அதில் விதையைப் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஓலைப்பாய் விரித்து, அதில் விதையை கொட்டி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நாற்றாங்காலில் தூவிவிட்டு 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு ஒரு முறை கிளறிவிட்டால் விதையும், தொழுவுரமும் கலந்துவிடும். தண்ணீர் பாய்வதற்கு வசதியாக 4 அடிக்கு ஒரு பாத்தி வீதம் 5 பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம். விதைத்ததில் இருந்து, 8 முதல் 10 நாட்களில் முளைப்பு தெரியும். 30 நாளில் அரை அடி உயரமும், 60 நாளில் ஓர் அடி உயரமும் வரும். 30-ம் நாளிலேயே எடுத்து நடவு செய்யலாம். ஆனால், ஓர் அடி உயரம் வந்தால் நடவு செய்ய வசதியாக இருக்கும்.
15 நாள் இடைவெளியில் பஞ்சகவ்யா!
பப்பாளியை நடவு செய்ததில் இருந்து, 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.
பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்!
6-ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 5 கிலோ பாசிப்பயறு, 5 கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை, ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல், காய் பிடித்து நன்கு வளரும். பூ பூக்கும் நேரத்தில்தான், பப்பாளியில் ஆண் பெண் அடையாளம் காணமுடியும். கிளைகளுக்கும் தண்டுக்கும் இடையே ஒரே பூ மட்டும் பூத்தால் அது பெண் பப்பாளி எனவும், கொத்தாக பூ காணப்பட்டால் அது ஆண் பப்பாளி எனவும் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.
400 பப்பாளி மரங்களில் குறைந்தது 20 ஆண் பப்பாளியாவது இருந்தால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். சில விவசாயிகள் ஆண் பப்பாளி மரங்களை மொத்தமாக பிடுங்கிவிடுவார்கள். இதனால் அயல்மகரந்தச்சேர்க்கை நடைபெறாமல் காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது. 7-ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதம் காய் பறிக்கலாம். 9-ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12-ம் மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். 13-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.
மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்!
பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.
0 கருத்துகள்