Ad Code

Ticker

6/recent/ticker-posts

வீட்டுக் காய்கறி கழிவுகளை உரமாக மாற்றும் வழிமுறைக்கள் என்ன?

செய்முறை-1

காய்கறி கழிவுகளை சிறிதாக வெட்டி காயவைத்து பிறகு மக்குவதற்கான தொட்டியில் போடவும். போடும்போது முதலில் உங்கள் தோட்டத்து மண், வீட்டில் சேகரித்த தேங்காய் நார் ஒரு லேயர், காய்கறி கழிவுகள் அடுத்த லேயர், காயவைத்துபொடித்த முட்டை ஓடுகள் ஒரு லேயர், மண்புழு உரம் ஒரு கைப்பிடி,  மக்கிய சாணம் பொடித்தது ஒரு லேயர், காய்ந்த இலை சருகுகள் செடிகள் ஒரு லேயர், நன்கு புளித்த மோர் ஒரு டம்ப்ளர் தெளிக்கவும். மேலே மூடாக்கு போடுவது போல தென்னைநார் கழிவு அல்லது தோட்டத்து மண் கொண்டு மூடிவிடவும். மழை நீர் அல்லது ஈரம் படாமல் வைத்திருப்பது சீக்கிரம் மக்குவதற்கு   உதவும். 

செய்முறை-2

ன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல், கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாக்கலாம். வெங்காயம், உருளைக்கிழங்கு தோல், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டாமல், வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் இவற்றைக் கொட்டி மண்ணைத் தூவினால் உரக்குழி தயார்.
இதேபோல் பயன்படுத்தப்பட்ட டீ தூள், முட்டை ஓடுகள், கால்நடைகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகிறது. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண் இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம். இக்கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்து எல்லாம் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை உரமாக இடும்போது செடிகள் நன்றாக வளரும் சுவையான காய்கறி கிடைக்கும்.


செய்முறை-3

தினமும் சேரும் காய்கறி கழிவுகள், பழத் தோல்கள், பூ கழிவுகள் (செம்பருத்தி, சாமந்தி), முட்டை கூடு என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். முட்டை கூட்டை நன்றாக நொறுக்கி போட வேண்டும். சிட்ரிக் அமிலம் சம்பந்தமான பழங்களை தவிர்க்க சொல்கிறார்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு மாதிரி). எல்லாவற்றையும் எடுத்து அதே அளவு இலை சருகு, ஒரு tea spoon அளவுக்கு Compost Microbes பவுடர் கலந்து கொஞ்சமாய் ஈரப்பதம் இருக்கும் அளவுக்கு நீர் தெளித்து நன்றாக கிளறி விடவும் (தனியாக Sprayer தேவை இல்லை. கையால் தெளித்தால் போதும்). நிறைய நீர் விடக் கூடாது. நீர் தேங்காமல் ஈரம் இருக்கும் அளவுக்கு தெளித்து கிளறி விட்டால் போதும். நிறைய பழத்தோல் சேர்த்தால், கிளறி விட்டப்பிறகு மேலே கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு தூவி விட்டால் ஈக்கள், பூச்சிகள் மொய்க்காது. தவிர வேப்பம் புண்ணாக்கு கலக்கும் போது இறுதியில் கிடைக்கும் உரம் இன்னும் தரமாக இருக்கும்.
பூச்சி புழுக்கள் வருமா என்று கேட்டால், கழிவுகளை மக்க வைப்பதில் அவை இல்லாமல் எப்படி என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அருவருக்க தக்க அளவில் எல்லாம் புழுக்கள் வருவதில்லை. கூர்ந்து கவனித்தால் சின்னதாய் சில பூச்சி புழுக்கள் தெரியலாம். கண்டிப்பாய் ஒரு கையுறை வேண்டும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்