X-சமூக அறிவியல்
காலாண்டு தேர்வு
மிக முக்கிய ஒரு மதிப்பெண் வினா & விடை
வரலாறு
1. 19 ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவின் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?
ஜப்பான்
2. இத்தாலி யாரிடம் லேட்டரன் உடன்படிக்கையை செய்து கொண்டது ?
போப்
3. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டு எங்கே வீசியது ?
ஹிரோஷிமா
4.எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
1991
5. பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
பிரிட்டன்
6. செப்டம்பர் 1949 மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எந்த நகல் கூடியது ?
பீகிங்
7. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் ( சதி) ஒழிக்கப்பட்டது ?
1829
8. நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்றவர் ?
ஜோசப் கோயேபெல்ஸ்
9. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது ?
1976
10. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் எனக் கூறியவர் ?
லெனின்
11. பன்னாட்டு செல்லம் உருவாக்கப்படுவதில் முன் முயற்சி எடுத்தவர் ?
உட்ரோ வில்சன்
12. உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?
லத்தின் அமெரிக்கா
13. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார் ?
யூதர்கள்
14. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது. ?
செப்டம்பர் 2 1945
15. எந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் பொதுவுடமைக் கொள்கையை கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரவை முன் வைத்தார் ?
ட்ரூமன்
16. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் யாது ?
ஆரிய சமாஜம்
17. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார் ?
M.G.ரானடே
18. சத்தியார்த்த பிரகாஷ் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
தயானந்த சரஸ்வதி
19. ஜெர்மனியோடு மீயூணிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார் ?
சேம்பர்லின்
20. முதல் உலகப்போரின் இறுதியில் நிலை குலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை ?
ஜெர்மனி, ஆஸ்திரிய ஹங்கேரி, உதுமானியர்
புவியியல்
1. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு ?
கோசி
2. இந்தியாவின் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது ?
சணல்
3. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ?
பாங்கர்
4. ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு ?
சம மழை கோடுகள்
5. இந்திய மாங்கனிசு தாது நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் ?
நாக்பூர்
6. போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
சாலை
7. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ?
தொட்டபெட்டா
8. தமிழ்நாட்டில் உள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ?
3 மற்றும் 15
9. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்?
3214கி.மீ
10. உலகிலேயே மிக நீளமான அணை ?
ஹிராகுட் அணை
11. தேசிய தொலை உணர்வு மையம் மையம் அமைந்துள்ள இடம் ?
ஹைதராபாத்
12.மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம்?
சூரியன்
13. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ?
காவிரி டெல்டா
14. இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம் ?
கொல்கத்தா
15. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் ?
உத்திரப் பிரதேசம்
16. மேற்கத்திய இடையூறுகளால் மழைப் பொழிவை பெறும் பகுதி ?
பஞ்சாப்
17. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ?
ஆந்திர பிரதேசம்
18. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் ?
ஆனைமுடி
19. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி என அழைக்கப்படுகிறது.
தீபகற்பம்
20.- மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகமாக காணப்படுகிறது.
செம்மண்
21. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ?
மகாராஷ்டிரா
22. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ?
கோயம்புத்தூர்
23. புகழ்பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ?
ஜார்க்கண்ட்
24. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது ?
கனிமப் படிவுகள்
25. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ?
பெட்ரோலியம்
குடிமையியல்
1. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது ?
ஒரு முறை
2. நமது அடிப்படை கடமைகளை இடமிருந்து பெற்றோம்.
ரஷ்யா அரசியலமைப்பு
3. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும் ?
சட்டப்பிரிவு 360
4. ஒரு வெளிநாட்டவர் கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும் ?
இயல்புரிமை
5. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ?
25 வயது
6. நடுவன் அரசின் அரசியலமைப்பு தலைவர் ?
குடியரசுத் தலைவர்
7. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் ?
குடியரசுத் தலைவர்
8. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்கு பொறுப்புடையவர்களாவர்?
மக்களவை.
9. மாநில ஆளுநரை நியமிப்பவர் ?
குடியரசுத் தலைவர்
10. மேலவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது ?
30 வயது
11. அமைச்சர்களின் தலைவர் ?
முதலமைச்சர்
12. இந்தியாவில் முதன் முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் ?
கொல்கத்தா மும்பை சென்னை
பொருளியல்
1. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க் கப்பட்ட ஆயுட்காலம் ?
65
2. முதுமைத்துறை இதனை உள்ளடக்கியது.
வேளாண்மை
3. GDP யில் எந்தத் துறை மூலம் அதிகமான வேலை வாய்ப்பு ஏற்படுகிறது ?
பணிகள் துறை
4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது ?
1994
5. இந்திய அரசாங்கம் 1991 இல் - ஐ அறிமுகப்படுத்தியது.
புதிய பொருளாதாரக் கொள்கை
6. 1632 இல் ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர் மேன் வழங்கியவர் யார் ?
கோல்கொண்டா சுல்தான்
7. காட் (GATT)இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் ?
ஜெனிவா
8. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச்சட்டம் 480 கொண்டு வந்த நாடு ?
அமெரிக்கா
9. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் ?
தமிழ்நாடு
10. இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
பசுமை புரட்சி
கோடிட்ட இடத்தை நிரப்புக :
1. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்ற பிரான்சின் பிரதமர் கிளமென்சோ
2. ஆண்டில் லோக்கர்ணோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. 1925
3. டானன் பர்க் போரில் - பேரிழப்புகளுக்கு உள்ளானது. ரஷ்யா
4. நாசிச ஜெர்மனியின் ரகசிய காவல்படை என அழைக்கப்பட்டது. கெஸ்டபோ
5. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி இல் நிறுவப்பட்டது. 1927
6. போயர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆப்பிரிக்கநேர்கள்
7 .___என்பது தொலைவிலிருந்து எதிரிகளின் போர் விமானங்களை கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி. ரேடார்
8. கடன் குத்தகை திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூஸ்வெல்ட்
9. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ? டாக்டர் சன் யாட் சென்
10. ஐரோப்பிய குழுமத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. ஸ்ட்ராஸ்பெர்க் நகரில்
11. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். ராமலிங்க சுவாமிகள்
12. ராமகிருஷ்ண மெஷின் _____ என்பவரால் நிறுவப்பட்டது. சுவாமிவிவேகானந்தர்
13. குலாம் கிரி நூலை எழுதியவர் ? ஜோதிபா பூலே
14. ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையை துவக்கியவர் -அயோத்திதாசர்
15. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை இல் தோன்றியது. அமெரிக்க ஐக்கிய நாடு
16. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ? 1949 நவம்பர் 26
17. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் வழங்கப்பட்டுள்ளன. 51 A பிரிவின் கீழ்
18. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் --- ஆகும். உச்ச நீதிமன்றம்
19. அலுவல் வழியில் மாநிலங்களவை தலைவர் ஆவார். துணை குடியரசுத் தலைவர்
20. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது ? 65
21.- மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் வேந்தராக செயல்படுகிறார் ? ஆளுநர்
22 ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை இடம் கொடுக்கிறார்.
குடியரசுத் தலைவர்
23. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்களால்
24. இந்தியாவில் - துறை முதன்மை துறையாகும். வேளாண்மை
25. இரண்டாம் துறையை வேறு விதமான துறை என அழைக்கலாம். தொழில்துறை.
26.- மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
தலா வருமானம்
27. உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது. தியோடர் ரூஸ்வெல்ட்
28. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது . ஜனவரி 1, 1995
29. ஊட்டச்சத்து குறைபாட்டில் முக்கியமான குறியீடு ஆகும்.
ரத்த சோகை
30.--- ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. 2013
SSLC-சமூக அறிவியல்
காலாண்டு தேர்வு
மிக முக்கிய ஒரு மதிப்பெண் வினா & விடை
PDF Download
குறிப்பு : காலாண்டு தேர்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சரியான விடை மற்றும் கோடிட்ட இடம்...
என்றும் கல்வி பணியில்...
உங்கள் சமூக அறிவியல் ஆசிரியர்
M SHANMUGAVEL GHSS SALAIGRAMAM
Key words
SSLC Social Science, SSLC 1 Mark Questions, Social Science Quarterly Exam, Tamil Medium SSLC, SSLC 2025 Questions, 10th Social Science Notes, SSLC Important Questions, 1 Mark Questions and Answers PDF, Tamilnadu SSLC, SSLC Guide Tamil
0 கருத்துகள்