Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆரியபட்டா

ஆரியப்பட்டா ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன் கணித மற்றும் வானசாஸ்திர படிப்பில் புரட்சிகரமான மாற்றம் மற்றும் அந்தத் துறையில் முன்னோடியாக ஆராய்ச்சி மேற்கொண்டார் ஆரியபட்டா பீகாரில் உள்ள பாடலிபுத்திரத்தில் பிறந்தார்.
ஆரியபட்டா அல்ஜீப்ராவை உபயோகித்து கணித சாஸ்திரங்களான  ஜியோமெட்ரியிலும் ஹேத்திர கணிதம்,  திரிகோனமிதியிலும்  கவனம் வைத்த முதல் விஞ்ஞானி ஆவார். அவர் pi-மதிப்பை சராசரியாக நான்கு தசம இடங்கள் (31414) வரை கணக்கிட்டவர்.

ஆரியபட்டா தன் அறிவுத் திறமையால் வானுலகை சேர்ந்த தொகுதிகளின் அசைவுகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார். அந்த காலகட்டத்தில் பூமி நிலையானது, சூரியன், நட்சத்திரம் மற்ற ,வானுலகத்தை சேர்ந்த தொகுதிகள் பூமியை சுற்றி வருகின்றன என்று நம்பினர்.
ஆரியபட்டா அந்த யூகம் தவறானது என்று விளக்கினார். பூமி தனது அச்சினாலேயே தன்னைத்தானே சுற்றி வருகிறது என்றார். கிரகணங்கள் தோன்றுவதற்கான சரியான காரணங்களை சொல்லி அது பற்றி நிறைய இருந்த கட்டுக்கதைகளை பொய் என நிரூபித்தார்.

சமஸ்கிருதத்தில் வெளிவந்த ஆரியபட்டாவின் நூல்களான 'ஆரியபட்டாயா',' ஆரியபட்டா சித்தாந்தா' ஆகியவை இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாக உள்ளன. தினசரி வானவியல் கணக்கீடுகளுக்கும், பஞ்சாங்கம் குறிப்பதற்கும் அவை பயன்படுகின்றன. ஆரியபட்டா எல்லையில்லா ஆழமுள்ள கணிதத்தின் அறிவியலும், Kinematics,கோள் கணித சாஸ்திரத்திலும் கரை கண்டு மேதையாக விளங்கியவர். இந்த விஞ்ஞானத்தின் தான் பெற்ற அறிவினை உலகிற்கு தந்தார். இந்த மேதை இந்தியராக இருந்ததில் இந்தியா பெருமைப்படுகிறது. முதல் இந்திய பரிசோதனை செயற்கை கோலுக்கு ஆரிய பட்டா என்று பெயர் சூட்டியது அதனால்தான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்