Ad Code

Ticker

6/recent/ticker-posts

பீர்பால் சஹானி

பீர்பால் சஹானி இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக விளங்கினார். பூமியின் அமைப்பியல், தாவரவியல் போன்றவற்றில் பீர்பால் சஹானி பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பீர்பால் சஹானி ஒரு கல்விமான், விஞ்ஞானி மட்டுமல்ல ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர். தற்போது பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாப்பின் பேராவில் 1891 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பீர்பால் சஹானி பிறந்தார்.பீர்பால் சஹானி தந்தை லாலாகுசிராம் சஹானி லாகூர் அரசு கல்லூரியில் இரசாயனத்துறைப் பேராசிரியராக இருந்தார்.

பீர்பால் சஹானின் தந்தை விஞ்ஞான ஆராய்ச்சியை முன்னேற்றி விஞ்ஞானத்தை பிரபலமாக கடினமாக உழைத்தார். இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜில் ரூதர்போர்ட்டுடன் கூட பணிபுரிந்தார். பீர்பால் சஹானி விஞ்ஞானத்தை நேசிப்பதற்கு தந்தையிடம் கற்றுக் கொண்டார் விடுமுறையில் தந்தையுடன் கிராமப்புறங்களுக்கு சென்று இயற்கையை கவனித்தார் அவர் பிரகாசமான மாணவராக இருந்து பள்ளியில்
நன்றாக படித்தவர்.பீர்பால் சஹானி பள்ளிப்படிப்பு முடித்து 1911இல் லாகூர் அரசு கல்லூரியில் தாவர  பட்டம் பெற்றார்.அதே ஆண்டு தன் உயர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார் அங்கே இம்மானுவேல் கல்லூரியில் இயற்கை விஞ்ஞானத்தை படித்தார். 1919 இல் D.Sc பட்டம் பெற்றார். அந்த நேரத்தில் இந்திய மாணவர்களுக்காக Lowson -ன் தாவர இயல் பாடப்புத்தகத்தை மறுபடி படித்து வெளியிட்டார். அந்த புத்தகம் இன்று கூட பிரபலமாக இருக்கிறது.

பீர்பால் சஹானி 1919இல் இந்தியா திரும்பிய பிறகு பனாரஸ் பல்கலைக் கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக பணி செய்ய வாய்ப்பு பெற்றார்.ஒரு வருடத்துக்கு பிறகு 1920- 21 வரை லாகூரில் பணி. 1921-33 வரையில் லாகூர் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தார். 1933-இல் டீன் ஆக பதவி உயர்வு பெற்றார். 1949 வரை அதாவது அவரது இறுதிகாலம் வரை அங்கு இருந்தார்.பீர்பால் சஹானி 1924-ஆம் ஆண்டு இந்திய தோட்ட கழகம் நிறுவினார்.1936 ஆம் ஆண்டு மிகவும் ஆசைப்பட்ட பிரிட்டிஷ் விஞ்ஞான கௌரவம் ஆன ராயல் சொசைட்டியின் உறுப்பினரானார். இந்த கௌரவத்தை பெற்ற ஐந்தாவது இந்திய விஞ்ஞானி, முதல் தாவரவியலாளர், பல விருதுகள், கௌரவங்கள் இவரை தேடி வந்தடைந்தன.

பீர்பால் சஹானி இந்து சமவெளி நாகரிக விவரிப்பு முறைகளைப் பற்றி விசாலமான படிப்பு
படித்தவர்.களிமண் உருவம் செய்தல், ஸ்டாம்பு, நாணயங்கள் சேகரித்தல் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.பீர்பால் சஹானி லக்னோவில் தாவரவியல் சங்கத்தை தொடங்கினார். அதனை தீவிர கவனத்துடன் திட்டமிட்டார். உத்தியோக சம்பந்தமான பெரும் புகழின் உச்சியில் இருந்தபோது  1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 தேதி மறைந்தார். அவர் மறைவுக்கு சில நாட்கள் முன்புதான் லக்னோவிலுள்ள தாவர இயல் சங்கத்திற்கான அடிக்கல் நாட்டினார் நேரு.இந்த சங்கம் பின்னாளில் பீர்பால் தாவரவியல் சங்கம் என்று மாற்றப்பட்டது.பீர்பால் சஹானி நினைவாக ஒவ்வொரு வருடமும் நாட்டில்  தாவரவியலில் சிறந்து விளங்குபவதற்கு"பிர்லா தங்க விருது" அளிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்