Ad Code

Ticker

6/recent/ticker-posts

பிரம்ம குப்தா

பிரம்மகுப்தா கணிதம் மற்றும் வானவியல் பற்றி முக்கியமான படைப்புகளை எழுதியிருக்கிறார். பிரம்மகுப்தா தந்தை ஜிஸ்னுகுப்தா ஆவார். குறிப்பாக சொல்வதென்றால் 628 பிரம்ம குப்தா எழுதிய "The opening of the Universe"  சொல்லலாம். அது 25 அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ளது. பழங்கால இந்தியாவின் முதன்மையான கணிதவியல் மையமான உஜ்ஜயினியிலிருந்த வானவியல் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றாா் பிரம்மகுப்தா.வரஹமஹிரா போன்ற பிரபலமான கணிதவியல்  அறிஞர்கள் அங்கு பணிபுரிந்து வலுவான கணித, வானவியல் அமைத்தனர்.

 பிரம்மகுப்தாவின் முதல் நூல் "பிரம்மஸ்புதசித்தாந்தா"அவர்  666-இல் தனது 67 வயதில் கணிதம் மற்றும் வானவியலில் இரண்டாவது நூலான  " கண்ட கத்யகா" எழுதினார்.
பிரம்மகுப்தாவின் இந்த இரண்டு ஆராய்ச்சி நூல்களிலும் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. 'பிரம்மஸ்புதசித்தாந்தா' வில் வட்டத்தன்மையுள்ள நாற்கரத்தின் பகுதிகளுக்கும், பக்கங்களின் எல்லை முக்கோணங்களின் நீளத்திற்கும் விசேஷமான சூத்திரம் தந்துள்ளார். இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால் வட்டத்தன்மையுள்ள நாற்கரத்திற்கு மட்டும் தான் சூத்திரம் என்பது குறிப்பிடவில்லை. சில சரித்திர ஆசிரியர்கள் இதை பிழை என்று சொல்லுகின்றனர். அதேசமயம் பிறர் வட்டத்தன்மையுள்ள உள்ள நாற்கரத்திற்குதான் விதிகள்  உபயோகபட்டுள்ளது என்று தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.



 பிரம்மஸ்புதசித்தாந்தா, சூரிய ,சந்திர கிரகணம், கோள்களின் சேர்க்கை, கோள்களின் நிலைகளை  நிர்வக்கிறது. பூமி நிலையானது என்று பிரம்மகுப்தா நம்பினார். தன் முதல் நூலில் ஒரு வருடத்தின் கால அளவு 365 நாட்கள், 6 மணி, 5 நிமிடம், 19 நொடிகள் என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது நூலில் அதை 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம் 36 நொடி என்று மாற்றி அமைத்தார். முதல் மதிப்பீட்டில் இருந்து இரண்டாவது மதிப்பீட்டில் ஆண்டின் கால அளவு 365 நாட்கள் 6 மணி உண்மையில் குறைவு என்றால் தானே ஒழிய முன்னேற்றம் அல்ல. பிரம்ம குப்தாவின் ஆண்டின் கால அளவின் இரண்டாவது மதிப்பீடு ஆரியபட்டா -I-இன் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் ஏனெனில் இரண்டும் 6 வினாடிக்குள் ஒத்திருக்கிறது.


'கண்டகத்யகா' எட்டு அத்தியாயங்கள் கொண்டது. கோளங்களின் தீர்க்கரேகை, தினசரி சுழற்சியின் மூன்று கணக்குகள், சந்திரகிரகணம், சூரியகிரகணம், உதயம், அஸ்தமனம், சந்திரனின் பிறை, கோள்களின் சேர்க்கை ஆகிய தலைப்புகள் அடங்கியுள்ளன. பிரம்மகுப்தாவின் இந்த இரண்டாவது நூலில் குறிப்பாக கணதத்தின் பங்கு என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில், செங்கோனம் இல்லாத ஒரு கோணத்திற்கு எதிரே உள்ள பக்கத்திற்கும் கர்ணத்திற்கும் உள்ள விகிதத்தின் மதிப்பை கணக்கிட அவர் இடைச்செருகல் சூத்திரம் பயன்படுத்தி உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்