Ad Code

விக்ரவாண்டி புவனேஸ்வர் கோயில்


விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் விக்கிரவாண்டியின் பெயர் புவனி மாணிக்கபுரம்!
விக்ரவாண்டி புவனேஸ்வர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.விக்ரவாண்டி புவனேஸ்வர் கோயிலில் மொத்தம் ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் சில இந்திய தொல்லியல் துறையினர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்ரவாண்டி புவனேஸ்வர் கோவிலில் காணப்படும் கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்துட்பட்டது.(கி.பி 1102) விக்ரவாண்டி புவனேஸ்வர் கோயில்கலில் உள்ள கல்வெட்டுகளில் இது மிகப் பழமையானது எனவே அக்காலத்தில் விக்ரவாண்டி புவனேஸ்வர் கோயிலில் கட்டப்பட்டிருக்கவேண்டும். தற்போது விக்ரவாண்டி புவனேஸ்வர் கோயிலில் விக்கிரம சோழனின் 4-வது ஆட்சியாண்டு(கி.பி1122) கல்வெட்டை கருவறையின் குமுதப்பட்டியலில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு "ஸ்வஸ்தி ஸ்ரீ பூமாலை மிடைந்து" என்னும் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. கல்வெட்டில் இவ்வூர் "கங்கை கொண்ட சோழ வளநாட்டு புறையூர் நாட்டு நகரம் புவனி மாணிக்கபுரம்"என குறிக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து விக்கிரவாண்டி சோழர் காலத்தில் புவனி மாணிக்கபுரம் என அழைக்கப்பட்டது.என்பதையும் அது அக்காலத்தில் நகரமாக விளங்கியது என்பதையும் அறியமுடிகிறது.இக்கோயில் "சேதிகுல சிந்தாமணி"என அழைக்கப்பட்டிருந்ததையும். இக்கோயிலுக்கு திருநொந்தா விளக்கு எரிப்பதற்கும்.திருவமுது படைப்பதற்காக காசுகள் தானமாக வழங்கப்பட்டதையும் கல்வெட்டு கூறுகிறது .விக்கிரம சோழனின் மற்றொரு கல்வெட்டு"பூமாது புனர"என்று தொடங்கும் கல்வெட்டில் இக்கோயிலுக்கு செப்பு கிடாரம் மற்றும் செப்பு குடம் அளித்ததோடு திருநொந்தா விளக்கு எரிப்பதற்கு 20 காசுகள் கோயில் பிராமணர் வசம் கொடுத்ததை தெரிவிக்கிறது . மேலும் இராச நாராயண சம்புவராயர் கல்வெட்டு இவ்வூரை "விக்கிரம பாண்டியநல்லூர்" என கூறுகிறது.இது பாண்டிய மன்னன் விக்கிரமபாண்டியன் பெயரால் வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும்.பின்பு விஜயநகர மன்னன் வீரநரசிம்மராயதேவர் கிபி 1509 ஆம் ஆண்டு கல்வெட்டு "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பல்குன்ற கோட்டத்து ஓய்மான்வலநாட்டு வீடும் பற்று விக்கிரவாண்டி"என்று கூறுகிறது.இக்கல்வெட்டு இவ்வூரில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயில் அருகில் ஏரியை ஒட்டி அமைந்திருந்த வரதராஜ பெருமாள் கோயில் இருந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் சிதலமடைந்த பிறகு தற்போதுள்ள வரதராஜ பெருமாள் கோயில் கட்டப்பட்டது.இக்கோயில் ஏரி காத்த பெருமாள் என்னும் பெயரில் ஒரு பெருமாள் சிற்பம் ஒன்று உள்ளது. விக்கிரம பாண்டி என்று விஜயநகர காலத்தில் மருவி வழங்கப்பட்ட பெயர் தற்போது விக்கிரவாண்டி என்று அழைக்கப்பட்டு வருகிறது .

கருத்துரையிடுக

0 கருத்துகள்