Ad Code

Ticker

6/recent/ticker-posts

நாம் தினமும் பார்க்கும் சாதாரண விஷயங்களுக்குப் பின்னால் கூட ஒரு பெரிய அறிவியல் இருக்கிறது

 


கால்பந்து வீரர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது நான் தெரிந்து கொண்ட ஒரு அறிவியல் தகவல்.


கால்பந்து விளையாட்டு மைதானத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள்  கத்தும் போது, நடுவர் ஊதும் ஒரு சிறு விசில் சத்தம் எப்படி 22  விளையாட்டு வீரர்களை சட்டென்று  நிறுத்துகிறது? 


இதோ அதன்பின்னால் உள்ள த்ரில்லர் தகவல்.


உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டை நினைத்துப் பாருங்கள். ஒரு லட்சம் ரசிகர்கள். காதைப் பிளக்கும் ஆரவாரம். மைதானத்தின் நடுவில் 22 வீரர்கள் புயல் வேகத்தில் ஓடுகிறார்கள்.


அந்த நேரத்தில் ஒரு வீரர் ஃபவுல் செய்கிறார்.


நடுவர் தன் வாயில் இருக்கும் சின்ன விசிலை ஊதுகிறார்.


அடுத்த நொடி - அத்தனை ஆரவாரத்தையும் கிழித்துக் கொண்டு அந்த சத்தம் 22 பேரையும் சிலையாக நிற்க வைக்கிறது.


*இது எப்படி சாத்தியம்?*


இதற்குப் பின்னால் இருப்பது சாதாரண விசில் அல்ல, 

அதி நவீன அறிவியல் அதிசயம்.


நாம் சிறு வயதில் ஊதிய விசில்களில் உள்ளே ஒரு சிறிய இரும்பு கோலி உருண்டு சத்தம் வரும். 

ஆனால் FIFA நடுவர்கள் பயன்படுத்தும் விசிலில் அந்த பந்தே கிடையாது.


அவர்கள் பயன்படுத்தும் விசிலுக்கு Pea-less Whistle என்று பெயர்.


அந்த விசிலின் உள்ளே இருக்கும்  Acoustic Chambers எனப்படும் மூன்று அறைகளுக்குள்

காற்று புகுந்து மோதும் போது மூன்று விதமான அதிர்வெண்களில் Harmonics ஒலி உருவாகிறது.


அதனால் தான் லட்சம் பேர் கத்தினாலும் அதையும் தாண்டி வீரர்களின் காதுகளில் கூர்மையாக பாய்கிறது.


ஜப்பானில் உள்ள Molten VALKEEN நிறுவனம் தயாரிக்கும் இந்த விசில் டைட்டானியத்தால் செய்யப்பட்டது.


உள்ளேதண்ணீர் புகாது.

மழை பெய்தாலும் சத்தம் மாறாது. விசில் சத்தம் வீரர்களை நோக்கி தள்ளுவதற்கு பக்கவாட்டில்  Directional Fins  எனப்படும் விசிறிகள் கூட உண்டு.


இதை விட சுவாரஸ்யம் என்ன தெரியுமா?


நடுவர்களுக்கு விசில் ஊதுவதற்கு என்றே தனி பயிற்சி உண்டு. 

அதற்குப் பெயர் 'Tonguing Technique'.


சாதாரண ஃபவுலுக்கு - ஒரு மென்மையான, 

அளவான விசில்.


பெனால்டிக்கு அழுத்தமான, நீளமான விசில்.


ரெட் கார்டுக்கு  காற்றே வெடித்துச் சிதறும் அளவுக்கு 

அதிரடி விசில்!


வீரர்கள் விசில் சத்தத்தை வைத்தே நடுவரின் மனநிலையை புரிந்து கொள்வார்கள்


நாம் தினமும் பார்க்கும் சாதாரண விஷயங்களுக்குப் பின்னால் கூட ஒரு பெரிய அறிவியல் இருக்கிறது. 

அதை தேடிப் பிடிப்பதில் தான் இருக்கிறது சுவாரஸ்யம்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்