Ad Code

Ticker

6/recent/ticker-posts

2026 - 2027 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் வெளியீடு! | TN Teachers Transfer Counselling 2026

 
2026 - 2027 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் வெளியீடு! | TN Teachers Transfer Counselling 2026

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6


5.5.6.032782 / 3 / 1 / 2026 .08.06.2026


ந.க.எண். 009324 / டி1 / 2026 நாள்.08.06.2026


பொருள்:-பள்ளிக் கல்வி -2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு


பார்வை:-1)அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021

2)அரசாணை (நிலை)எண்.180 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்:17.10.2022

3)அரசாணை (நிலை)எண்.94. பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.24.5.2023

4) அரசாணை (நிலை) எண். 164 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.11.7.2024

5) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.037584/83/இ1/2025 நாள்.18.06.2025

6) தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.13466/டி1/2025, நாள்.18.06.2025 -0-


பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் கடந்த 2025-26 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனை பின்பற்றி கடந்த ஆண்டு (2025-26) பொதுமாறுதல்கள் பணிகள் ஆசிரியர்களுக்கான முடிக்கப்பட்டுள்ளது.


2) அதேபோல 2026-27ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும், மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் அனைத்துவகை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.


மேற்படி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 15.06.2026 முதல் 22.06.2026 வரை 06.00 பிப வரை EMISல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.


 பார்வை-2ல் காணும் அரசாணையில் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணிநிறைவடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்குபெற விருப்பம் உள்ள அனைத்துவகை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.


2026 - 2027 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் வெளியீடு! | TN Teachers Transfer Counselling 2026 PDF 

Download Pdf 

கருத்துரையிடுக

0 கருத்துகள்