மயிலும், நாகமும் வழிப்பட்ட
சக்திமலை முருகன்
வேல் உண்டு உண்டு வினை 'இல்லை' என்பார்கள்.தீவினைகள் 'வேல்' என்பது கும். ஞானமாகிய ளேத்தின் வடிவகள் அனைத்தையும் அழித்து வெற்றியை தருகிறது. அந்த வகையில் வேலை தாங்கி நிற்கும் வெற்றிவேல் முருகன். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை போக்கி, வினைகளை அகற்றி, ஞானத்தை பெருக்கி, வெற்றியை வாரி வழங்குகிறார்.இத்தகைய சிறப்பு வாய்ந்த வெற்றி வேல் முருகன் கோவில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சக்திமலையில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமாள், தனது இடது பாகத்தில் மயில் இறகு வைத்திருப்பது அபூர்வ தோற்றமாகும்.
தல வரலாறு
ஒரு காலத்தில் இப்பகுதி, செழிப் பான மரங்கள் நிறைந்து காணப்பட் டது. இங்கு ஒரு மரத்தின் அடியில் சுயம்பு சிலை ஒன்று இருந்தது. இந்த கயம்பு மூர்த்தத்தை ஒரு மயிலும், நாகமும் தினமும் பூஜித்து வந்தன. இவ்வாறு தொடர்ந்து ஆறு மாத காலம் நடந்தது. இதை கவனித்த மாடு மேய்க்கும் சிறுவர்கள், ஊர் பெரியவர்களிடம் தகவல் தெரிவித்த .
இதையடுத்து, சிறுவர்கள் குறிப் பிட்ட இடத்திற்கு ஊர் மக்கள் சென்று பார்த்தனர். அப்போது சிறிது தூரத் தில் மயிலும், நாகமும் சுயம்பு மூர்த் தத்துக்கு பூஜை செய்வதைக் கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் மயிலும், நாகமும் அவ்வி டத்தை விட்டு சென்றதும், அரு தில் சென்று அந்த மூர்த்தத்தை தொழுது வணங்கினர். மயிலும், நாகமும் பூஜித்ததால், அந்த சுயம்பு மூர்த்தம், முருகப்பெருமானாக தான் இருக்கும் என எண்ணினர்.
பின்னர் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவ்விடத்தில் முருகப் பெருமானுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். அதன்படி சிறிய கோவி லாக கட்டி, சுயம்பு மூர்த்தத்தை வைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு சுயம்பு மூர்த்தத்திற்கு பின் னால் புதிய கற்சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். காலப்போக்கில் பக்தர்களின் உதவி யுடன் அர்த்த மண்டபம், மகாமண்ட பம் என கோவில் விரிவாக்கம் செய் யப்பட்டது.
கோவில் அமைப்பு
சோமாஸ்கந்த வடிவில் அமைக்கப் பட்டுள்ள இக்கோவில், பல சிறப்பு களை கொண்டுள்ளது, மூலவரான முருகப்பெருமான் வெற்றிவேல் முருகள்' எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவர்த இவர், இடது புறத்தில் மயில் இறகுடன் காட்சி தருவது அரிய அரிய தோற்றமாகும். பொது வாக முருகன் தலங்களில், முருகப் பெருமான் சிலையானது கையில் தண்டாயுதத்துடன் நிற்பது போன்று வடிக்கப்பட்டிருக்கும். ஆனால் இக் கோவிலில், கையில் வேலுடன் இருப் பது போன்ற முருகன் சிலை வடிக்கப் பட்டுள்ளது தனிச் சிறப்பாகும்.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் காணப்படுகிறார்கள். இக்கோவிலில் ஆதி விநாயகர், பைரவர், சொர்ண புரீஸ்வரர், சொர்ணாம்பிகை, சண்டி கேஸ்வரர், நாகர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந் துள்ளன.
வழிபாடு
இக்கோவிலில் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உடல்நலம் பாதித்தவர்கள், செவ்வாய்க்கிழமை களில் இங்கு வந்து மயில் பீலியால் தடவி, திருநீறு பூசினால் விரைவில் உடல்நலம் சரியாகும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது.
குடும்பப் பிரச்சினை, கோர்ட்டு வழக்கு உள்ளவர்கள் முருகனுக் குரிய 'சத்ரு சம்ஹார திரிசத அர்ச் சனை' செய்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள். செவ்வாய் செவ்வாய் நேசனும், நாக தோஷம் தலமாகவும் இக்கோவில் விளங்கு கிறது.
அமைவிடம்
கோத்தகிரி பேருந்துநிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவி லும், குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவிலும் வெற்றிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது.

0 கருத்துகள்