Ad Code

Ticker

6/recent/ticker-posts

மகப்பேறு அருளும் திருநிலை அங்காள பரமேஸ்வரி கோவில் வரலாறு | Thirunilai Angala Parameswari

 மகப்பேறு அருளும் திருநிலை அங்காள பரமேஸ்வரி

மகப்பேறு அருளும் திருநிலை அங்காள பரமேஸ்வரி கோவில் வரலாறு | Thirunilai Angala Parameswari create image


செங்கல்பட்டு மாவட்டம் திருநிலை என்ற கிரா மத்தில் அமைந்துள்ளது, அங்காள பரமேஸ் வரி உடனுறை பெரியாண்டவர் கோவில் சிவபெரு மான் மனித வடிவில் வந்ததால், அவர் காலடிகள் நேரடியாகப்பட்ட தலம் இதுவாகும். இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அசுரர்கள், தங்கள் தவ பலத்தால் பல்வேறு வரங்க ளைப் பெற்று, அனைவருக்கும் இன்னல்கள் விளை விப்பது தொடர்கதையாகி வந்தது. இந்நிலையில், அத்தகைய அசுரர்களை அழிக்க வேண்டிய சூழல் ஈசனுக்கு வந்தது. அசுரர்களின் வரத்தின் காரண மாக, ஈசன் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாக வாழ்ந்தால்தான் அவர்களை அழிக்க முடியும் என்னும் நிலை இருந்தது. அதன் காரணமாக சிவ பெருமான் பூமிக்கு வந்தார்.

இதனால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட் டன. தேவர்கள் மனம் கலங்கினர். அவர்கள் அனை வரும் பார்வதி தேவியிடம் சென்று, ஈசனை ஆட் கொண்டு உலகை காப்பாற்ற வேண்டும் என்று வணங்கி நின்றனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்ற பார்வதி தேவி, அங்காள பரமேஸ்வரியாக பூவுலகம் வந்து, சிவனைக் கண்டார். பின், தன் சூலாயுதத்தை ஓரிடத்தில் வீசி எறிந்தார். பூமியில் பதிந்த அந்த சூலாயுதத்தில் இருந்து ஒரு தெய்வீக 'ஒளி தோன்றியது. உடனே, அங்கே சிவபெருமான் வந்து, தன் பாதங்களை ஒரு நிலையாகப் பதித்து திருநிலையாய் நின்றார். இதைப் பார்த்து பரமேஸ் வரி அவரை வணங்கினார்.

அப்போது ஒரு நாழிகைப் பொழுது நிறைவுற சிவபெருமான் மனித உருவம் நீங்கி தன்நிலை அடைந்தார். “பெரிய மனிதராய் உலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிர் பெரியாண்டவர் என்னும் பெயரில் வழங்கப் பெறுவீர்கள்"என்று உமாதேவி கூற, தேவர்கள் அனைவரும் பெரியாண்டவரே என்றுசொல்லிஈசனின் பாதங்களைப் பணிந்தனர். அங்கேயே சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். இத்தகைய நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் திருநிலை.

சிவபெருமான் மனித வடிவில் உலகை வலம் வந்தபோது, அவருடன் 21 சிவகணங்களும் எவர் கண்ணிலும் படாமல் மறைந்து சென்றன. அங்காள பரமேஸ்வரி சூலாயுதத்தை எறிந்தபோது, மண்ணில் மறைந்திருந்த சிவகணங்கள் மண் கட்டிகளாக சிதறி விழுந்தன. பின்னர் ஈசன் சுய வடிவை அடைந்ததும், அவையும் சிவகணங்களாக வெளிப்பட்டன. இதைக் குறிக்கும் வண்ணம் இங்கே 21 சிவகணங்களும் லிங்க வடிவில் உள்ளன.

சிவனுடன், நந்தியும் மனித வடிவில் சென்றது. எனவே இங்குள்ள நந்தி,மனித உடலுடன் காணப்படுகிறது.இங்குள்ள விநாயகரும் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப் படுகிறது. இந்தத் திருநீற்றைப் பூசி, உட்கொள்வதால், நோய் நீங்குவதாகவும், கல்வி, செல்வம் கிட்டுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். பல சித்தர்களும், முனிவர்களும் கண்ணுக்குப் புலப்படாமல் இந்த சிவபெரு மானை வணங்கிச் செல்வதாகவும் நம்பப்படுகிறது. மூலவரான பெரி யாண்டவரை லிங்க வடிவில் உள்ள 21 சிவகணங்கள் தினமும் பூஜிப்பதாக ஐதீகம்.

இவ்வாலயத்தின் அருகிலுள்ள சித்தாமிர்த குளத்தில் குளித்து விட்டு, சிவபெருமானையும்,அம்ம னையும் தொடர்ந்து ஆறு வாரங் கள் வணங்கி வந்தால் நினைத்த காரியங்கள் நடைபெறும் என்கின் றனர். மகப்பேறு கிடைக்க வழிபட வேண்டிய பிரார்த்தனை தலமாக வும் இது விளங்குகிறது. பல்லாயி ரக்கணக்கானோர் இந்த சிவனை மனித வடிவில் பெரியாண்டவர்

குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்கள், சிவலிங்கத்தை சுற்றி 21 மண் உருண்டைகளை வைத்து வணங்கிச் செல்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருநிலை அங்காள பரமேஸ்வரி கோவில்.

-கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.
தினத்தந்தி அருள்தரும் ஆன்மிகம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்