Ad Code

Ticker

6/recent/ticker-posts

மங்கல வாழ்வு தரும் பங்குனி உத்திரம் 2026 – சிறப்பு, வழிபாடு முறை, பலன்கள் | Panguni Uthiram Festival Significance in Tamil

 


முருகன் - தெய்வானை திருமணம் நடைபெற்ற நாள், பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திர தினம் என்பர். அதைப் போல ராமர் சீதை திருமணம் நடைபெற்றதும், சுந்த ரேஸ்வாரை மீனாட்சி மணந்து கொண்டதும் இதேநாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. ரதிக்காக மன் மதனை சிவபெருமான் உயிர்ப்பித்து தந்ததும் இந்ததா ளில்தான். எனவே, தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற இந்தத் திருநாளில் திருமணத் தடை ஏற்பட்டவர்கள் விரதம் இருந்து மாங்கனி படைத்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. பங்குனி உத்திர விரதத்தை ஒரு சிலர் 'கல்யாண விரதம்' என்றும் அழைப்பர்.


வாழ்க்கை வளமாக இருக்க, எதையேனும் ஒன்றைநாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை நாம் பங்குனி மாதத்தில் முருகன் மீது வைக்க வேண்டும். கந்தனின் கருணையை நாம் அளவிட்டுச் சொல்லமுடியாது. அழுது தொழுதவர்க்கு அப்பொழுதே அருள்கொடுக்கவும். பொருள் கொடுக்கவும் காத்திருப்பவன் முருகப்பெருமான்.


சண்முகக் கவிராயருக்கும். சிவகாமசுந்தரி அம்மையாருக்கும் மகளாகப் பிறந்த குமரகுருபா சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்தார். இதனால் அவரது பெற்றோர் மனம் வாடினர். தங்களின் மனக் குறையை முருகனிடம் சொல்லி மன்றாடினர். ஒரு முறை குமரகுருபா சுவாமிகளின் பெற்றோர், அவரை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் தங்கி, விரதமிருந்து செந்தில் ஆண்டவரை வழிபட்டனர். திடீரென ஒருநாள் நல்ல உறக்கத்தில் இருந்த பெற்றோரைப் பார்த்து, அம்மா என்று வாய்திறந்து அழைத்தான் சிறுவன் குமரகுருபரன். தங்கள் குழந்தை பேசியதைக் கண்டு பெற்றோர் வியந்தனர். திருச்செந்தூர் வேலவனே, வேலால் நாவில் எழுத நூலாயிரம் பாடினார் குமரகுருபார். அந்தநேரத்தில் குமரகுருபரர் பாடிய பாடல்தான் கந்தர் கலிவெண்பா என்று அழைக்கப்படுகிறது. முருகனுக்கு ஆறு முகங்கள் உண்டு, எனவேதான் அவனை ஆறுமுகன்' என்று அழைக்கின்றோம். சீறும் முகம் கொள்ளாமல் சிரிக்கும் முகம் வாய்க்கப் பெற்றவன். கும்பிட்டவர்களுக்கு பேரும், புகழும் தருபவன். அப்படிப்பட்ட ஆறுமுகத்திற்கும், 12 காதுகள் உண்டல்லவா? அந்த 12 காதுகளும் எவை எவற்றையெல்லாம் கேட்க காத்தி ருக்கின்றது என்று முத்துக் குமாரசாமி திருவருட்பாவில் சிவஞானதேசிகர் அழகாக விளக்கி உள்ளார்.


1. தாயின் சொல்லைக் கேட்பதற்கு ஒரு காது


2. தந்தையின் சொல்லைக் கேட்பதற்கு ஒரு காது


3. மாமனாகிய திருமால் சொல்லைக் கேட்பதற்கு ஒரு


4. ஆனைமுகன் சொல்லைக் கேட்பதற்கு ஒரு காது 

5. நவவீரர்களின் சொல்லைக் கேட்பதற்கு ஒரு காது


6. பிரம்மனின் துதிகேட்ட ஒரு காது


7. விண்ணவர்க்கு அரசனான இந்திரன் சொல் கேட்ப தர்கள், நாளும், பொழுதும் நலமாக இருக்க பங்குனி தற்கு ஒரு காது


8. தெய்வானைசொல் கேட்பதற்கு ஒரு காது


9. வள்ளிசொல் கேட்பதற்கு ஒரு காது


10. அகரர்கள் சொல்கேட்க ஒரு காது

11. மறை துதிக்கு ஒரு காது


12. அடியவர்கள் சொல் கேட்க ஒரு காது


அப்படிப்பட்ட முருகப்பெருமானிடம் நம்முடைய மனக் குறைகளைச் சொன்னால், அவன் தன் பன்னிரு கரங் களாலும் வரங்களை அள்ளித்தருவான். பங்குனி 18-ந் தேதி (1.4.2026) புதன்கிழமை அன்று பங்குனி உத்திரமும், பவுர்ணமியும் வருகின்றது. பங்குனி உத்திரப் பெருநாளில் கந்தப்பெருமானை வழிபட்டால் செல்வ நிலை உயர்ந்து சிறப்பான வாழ்வும் அமையும்.


மாங்கனி கிடைத்தால் மாங்கனி வைக்கலாம். இல்லை யேல், தேன் கதலியோடு, தேனும், திணை மாவும் நைவேத் தியமாக வைக்கலாம். அதை எடுத்து நாமே சாப்பிடலாம். அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது.


அன்றைய தினம் முருகனுக்கு சர்க்கரையால் அபிஷே கம் செய்தால், அவன் அக்கறையோடு நமக்கு அருள் தருவான். பஞ்சாமிர்தத்தால் அந்த பாலனுக்கு அபிஷேகம் செய்தால் அஞ்சாத வாழ்வை அவன் நமக்கு அளிப்பான். பாலாலும், பன்னீராலும் அபிஷேகம் செய்தால் வாழ்நாளை நீட்டித்துக் கொடுப்பான். பங்குனி உத்திரத்தன்று ஆல யங்களுக்கு அருகில் தண்ணீர் பந்தல் வைத்து, பக்தர் களுக்கு நீர்மோர் வழங்கினால் எண்ணிய பலன் கைகூடும்.


வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லும் மாந்தர்கள், நாளும், பொழுதும் நலமாக இருக்க பங்குனி உத்திரத்தன்று முருகன் சன்னிதியில் நின்று திருப்புகழ் பாடுங்கள். தித்திக்கும் வாழ்வை அமைத்துக்கொள்ள லாம்.


-ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்