நாம் ஒன்பதாம் வகுப்பு புவியியல் பாடத்தில் 7 ஆம் பாடமான நிலவரைபடத் திறன்கள் என்ற பாடத்தை பார்க்கப் போகிறோம்...
*முதல் நான்கு பாடத்தில் புவியின் நான்கு கோளங்கள் பற்றியும்,5 வது பாடத்தில் உயிர்க்கோளம் பாடம் பற்றியும் பார்த்தோம். 5 வது பாடத்தில் தான் மனிதர்களாகிய நாம் வருகிறோம்.
* 6 வது பாடத்தில் நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த செய்யப்பட்ட நடவடிக்கைகளே சுற்றுப்புற சீர்கேடுகளாக வந்துள்ளது.
* தற்போது 7 வது பாடத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு மாணவரும் நிலவரைபடத் திறன்கள் அறிந்து அதனை பயன்படுத்த வேண்டும் என்பதே இப்பாடம்.
இந்தப் பாடத்தில் மாணவர்களாகிய நீங்கள்.
* நிலவரைபடத்தின் கூறுகள்...
* அதன்படி படித்தல்...
* வான்வெளி புகைப்படம்...
* செயற்கைக்கோள் புகைப்படம் அறிதல்...
* GIS... GNSS... GPS... WEP MAPPING . போன்றவை பார்கலாம்
*சரி, இனி நாம் பாட அறிமுகத்திற்கு வருவோம்...
ஒருவர் நிலவரைபடங்களை கையில் வைத்துக்கொண்டு இந்த உலகத்தை ஒரே வீச்சில் முழுமையாகப் பார்க்க முடியும்.
* ஒரு நிலவரைபடம் ஆயிரம் சொற்களுக்குச் சமமானது.
*நிலவரைபடத்தை அறிந்து கொள்ள அடிப்படைத் திறன்கள் நமக்கு அறிவது அவசியம்.
*நிலவரைபடத்தின் கூறுகளான அளவை குறியீடுகள் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
* இன்று நிலவரைபடத்தில் நவீன தொழில் நுட்பங்கள் வந்துள்ளன.
* GPS... GIS... GNSS... WEP MAP...
7.1 நிலவரைபடம் ஒரு கருவி
*நிலவரைபடங்கள் புவியியல் வல்லுநர்களின் ஒரு அடிப்படை..
* இது வரைபடங்கள் வார்த்தைகள் மற்றும் குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினை தெள்ளத் தெளிவாக நமக்கு விளக்குகிறது.
நில வரைபடம் மற்றும் நிலவரைபடவியல்
* பொதுவாக நிலவரைபடங்கள் நிலப்பகுதியினை மேலிருந்து பார்ப்பது போல் வரையப்படும்.
*ஒரு நிலவரைபடம் என்பது காகிதம், துணி அல்லது ஏதேனும் தட்டையான பரப்பில் புவியின் மேற்பரப்பில் முப்பரிமான வடிவத்தை சிறிய வடிவில் காட்டுவது.
*மேலும் அளவைகள் மற்றும் திசைகள் கொண்டு நிலவரைபடங்கள் வரையப்படுகின்றன.
*குறியீடுகள் மற்றும் நிறங்கள் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.
7.1.2 நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?
தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோட்டுச் சட்டம், நிலவரைபடக் குறிப்பு மற்றும் முறைக் குறியீடுகள் ஆகியவை ஆகும்.
1.தலைப்பு:
*இது நிலவரைபடத்தின் நோக்கம் அல்லது கருத்தைக் குறிக்கிறது.
* எ.கா: இந்தியா - இயற்கை அமைப்பு: உலகம் - அரசியல்; தமிழ்நாடு - போக்குவரத்து.
2.அளவை:
*அளவை என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும், புவிப் பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூர விகிதம் ஆகும்.
*அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைபடத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவை:
* சொல்லளவை முறை
* பிரதிபின்ன முறை
* கோட்டளவை முறை
சொல்லளவை முறை:
*நிலவரைபடத்தில் உள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தினை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும்.
*இதில் 1 செ.மீ என்பது 10 கி.மீட்டரைக் குறிக்கும்.
பிரதிபின்ன முறை:
* இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்மையான தூரங்களை ஒப்பீடு விகிதமாகவோ, பின்னமாகவோ கூறப்படும்.
கோட்டளவை முறை:
நிலவரைபடங்களில் ஒரு நீண்ட கோடு பல சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தை காட்டுகிறது என்பதை காட்டுவதே கோட்டளவு முறையாகும்.
3. திசைகள்:
பொதுவாக நிலவரைப்படங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.
*ஒரு நிலவரைபடத்தில் வடக்குத்திசை எப்போதும் புவியின் வட துருவத்தை நோக்கியே உள்ளது.
* நாம் வட துருவத்தைப் பார்த்து நின்றால், நமது வலக்கை கிழக்குத் திசையையும், இடக்கை மேற்குத் திசையையும், நமது பின்புறம் தெற்குத் திசையையும் காட்டும். இவை அடிப்படை திசைகளாகும்.
*பொதுவாக, நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.
புவி வலைப்பின்னல் அமைப்பு (Grid System):
* ஓர் இடத்தின் அமைவிடம், அதன் அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு மூலம் வரையறுக்கப்படுகிறது. பொதுவாக, ஓரிடத்தின் அட்சக்கோட்டினை முதலில் கூறிப் பின்னர் தீர்க்கக்கோட்டினைக் கூறுகிறோம்.
* ஓரிடத்தின் அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோட்டின் அளவு, கோணம், நிமிடங்கள் மற்றும் விநாடி அலகுகளில் குறிக்கப்படுகின்றன.
கோட்டு சட்டங்கள் (PROJECTION):
*ஒரு நிலவரைபடத்தில் கோட்டுச் சட்டம் என்பது கோள வடிவிலான புவியை தட்டையாக ஒரு காகிதத் துண்டில் காட்டும் வழிமுறை ஆகும்.
* புவிக்கோளத்தின் அட்ச மற்றும் தீர்க்கக் கோடுகளின் வலைப்பின்னலை சமதள பரப்பில் காட்டும் வழிமுறையாகும்.
* நிலவரைபடங்களில் வடிவம், பரப்பு மற்றும் திசைகள் மாறாது இருக்க வரையப்படுகிறது.
* உருளை மேற்பரப்பில் வரைந்த கோட்டுச் சட்டங்கள்
* கூம்பு மேற்பரப்பில் வரைந்த கோட்டுச் சட்டங்கள்
* சமதளப் பரப்பில் வரைந்த கோட்டுச் சட்டங்கள் என மூன்று வகைப்படும்.
6. நிலவரைபடக் குறிப்பு (Legend):
* நிலவரைபட விவரங்களைப் புரிந்துகொள்ள உதவும் நிலவரைபடக் குறிப்பு பொதுவாக நிலவரைபடத்தின் கீழே இடது அல்லது வலது மூலையில் குறிக்கப்பட்டிருக்கும்.
7. முறை குறியீடுகள் (Conventional signs and symbols):
*ஒரு நிலவரைபடம் உலகளாவிய மொழியாகும். இது சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப வரையப்பட வேண்டும்.
* முறைக்குறியீடுகள் நிலவரைபடத்தில் பயன்படுத்தப்படும் நிலையான குறியீடுகளாக இருக்கின்றன.
* முறைக் குறியீடுகளின் வகைகள்:
* புள்ளி குறியீடுகள் - கட்டடங்கள், நீருள்ள தொட்டி, முக்கோண காட்டிகள்.
* கோட்டுக் குறியீடுகள் - இருப்புப்பாதை, சாலைகள், மின்கம்பி,
* பரப்புக் குறியீடுகள் பயிரிடப்பட்ட இடம், குளங்கள், பழத்தோட்டம்.
பின்வரும் நிறக்குறியீடுகள் நிலவரைபடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
1. பழுப்பு:
நிலம் அல்லது புவி அம்சங்கள் சம உயரக்கோடுகள், அரிக்கப்பட்ட பகுதிகள், முக்கிய குன்றுப்பகுதிகள், மணல் பகுதிகள் மற்றும் குன்றுகள், இரண்டாம் நிலை அல்லது சரளை சாலைகள்.
2. வெளிர் நீலம்:
நீர் நிலைகள் -கால்வாய்கள், கடற்கரைகள், அணைகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள். வெள்ளக்கரை, குளங்கள், ஆறுகள், நீர்த்தேக்கத் தொட்டிகள்.
3. கருநீலம்:
தேசிய நீர் வழிகள்
4. பச்சை:
தாவரங்கள் பயிரிடப்பட்ட வயல்கள், கோல்ஃப் மைதானங்கள். இயற்கை மற்றும் வேட்டையாடுதலுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைகள், பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள், பொழுதுபோக்கு மைதானங்கள், வனப்பகுதி.
5. கருப்பு:
கட்டுமான இடங்கள் தடங்கள், இருப்புப்பாதைகள், பாலங்கள், கல்லறைகள் - சாலைகள், கட்டடங்கள், தகவல் தொடர்பு கோபுரங்கள். அணைச் சுவர்கள், அகழ்வாய்வுகள் மற்றும் சுரங்க இடிபாடுகள், தொலைபேசி இணைப்புகள், மின் இணைப்புகள், காற்றாலைகள், எல்லைகள்.
6. சிவப்பு:
கட்டுமான இடங்கள் - தேசிய, கிளை மற்றும் முக்கிய சாலைகள், கலங்கரை விளக்கங்கள் மற்றும் கடல் விளக்குகள்.
7. இளஞ்சிவப்பு:
பன்னாட்டு எல்லைகள்.
7.1.3.நிலஅளவை(Survey):
*புவியின் மேற்பரப்பில் உள்ள ஓரிடத்தின் கோணம், திசை, பரப்பு, உயரம் மற்றும் தூரம் ஆகியவற்றைக் கருவிகளைப் பயன்படுத்தி அளவீடு செய்வது 'நில அளவை எனப்படும்.
*நிலவரைபடங்களைத் தயாரிப்பதற்கும், இடம் சார்ந்த தகவல்களைப் பெறுவதற்கும் ஆய்வு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
*நில அளவைமுறை நிலவரைபடத் தயாரிப்பில் குறிப்பாக இயற்கை அமைப்பு நிலவரைபடங்களைத் தயாரிப்பதில் உதவுகிறது.
*புவியியலாளர்களால் பயன்படுத்தும் நவீன நிலஅளவைக் கருவிகளான சங்கிலி (Chain), (Prismatic Compass), 5 (Plane Table), DD (Dumpy Level), அபனே மட்டம் (Abney Level), சாய்வுமானி (Clinometer), தியோடலைட் (Theodalite) மொத்த ஆய்வு நிலையம் (Total Station) மற்றும் உலகளாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்கு முறை (GNSS) ஆகியவற்றைக்கொண்டு ஓரிடத்தின் தூரம் , கோணம், உயரம் மற்றும் நிலப்பரப்பை அளவிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.
7.2 தொலை நுண்ணுணர்வு
*தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.
*'தொலை' என்பது தூரத்தையும் 'நுண்ணுணர்தல்' என்பது தகவல்களைச் சேகரிப்பதையும் குறிக்கும்.
தொலை நுண்ணுணர்வின் கூறுகள்:
ஆற்றல் மூலம் இலக்கு அனுப்பும் வழி உணர்விகள்
7.2.3 உலகளாவிய பயண செயற்கைகோள் ஒழுங்குமுறை
(Global Navigation Satellite System - GNSS)
*எப்போதேனும் உங்களது கைபேசியைப் பயன்படுத்தி வாடகை வண்டி பதிவு செய்திருக்கிறீர்களா?
*கைபேசியில் உங்களது பயணவழி மற்றும் பயணிக்கும் வண்டியின் இயக்கம் வரைபடத்தில் தெரிவதைக் கவனித்திருக்கிறீர்களா?
*நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே பயண நேரம் அறிய இது எவ்வாறு சாத்தியமாகிறது?
*21ஆம் நூற்றாண்டில் ஜி.என்.எஸ்.எஸ் (GNSS) நமது அன்றாட வாழ்வில் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணங்களை அளிப்பதின்மூலம் முக்கியப் பங்காற்றுகின்றது.
*ஜி.என்.எஸ்.எஸ் (GNSS) என்பது செயற்கைக்கோளுடன் இணைந்த சிறு மின்கருவி.
*நாம் பயணிக்கும் வண்டியை உலகின் எந்த மூலையிலும் இடஞ்சுட்டி கண்காணித்துத் தொடரும் ஒரு அமைப்பாகும்.
*வாகனம் ஓட்டுபவர் அதிகவேகம் எடுத்தாலோ, வழி தவறி சென்றாலோ உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வசதியும் உண்டு.
*வாகனங்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களை கண்காணிக்கவும் அவற்றின் வழிகளை வரைபடமாக காட்டவும் GNSS பயன்பாடுகள் உதவுகின்றன.
25 உலக அமைவிட தொகுதி (Global Positioning System - GPS):
*ஜி.பி.எஸ். (GPS) நமது வாகனங்களிலும், கைபேசிகளிலும் இல்லாவிட்டால் எதையோ தொலைத்தது போன்று உணரும் அளவிற்கு இன்றைக்கு இன்றியமையாததாக உள்ளது.
*ஜி.பி.எஸ் என்பது உலகின் முதல் மற்றும் தற்போது உபயோகிக்கப்படும் ஜி.என். எஸ்.எஸ் அதிகம் ஆகும்.
*இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையினால் உருவாக்கப்பட்டது. 1995இல் முழு உபயோகத்திற்கு வந்தது.
*நவ்ஸ்டார் என்பது 20,350 கிலோமீட்டர் புவிப்பரப்பிற்கு மேல் சுற்றி வரும் 6 வெவ்வேறு சுற்றுப்பாதையில் 24 அமெரிக்கா செயற்கைகோள்களின் வலைப்பின்னலாகும்.
* ஒவ்வொரு செயற்கைக்கோளும், தொடர்ச்சியான உலகளாவிய தகவல் தொடர்புக்காக ஒருநாளில் இருமுறை புவியை சுற்றி வருகின்றது.
* ஜி.பி.எஸ் கருவிகள் எல்லா அளவிலும், வடிவிலும் கிடைக்கின்றன. பெரும்பாலும் கைபேசி அளவிலேயே கிடைக்கின்றன.
*கைகளில் வைத்து கொண்டோ கப்பல்கள், விமானங்கள், சரக்கு வண்டிகள் மற்றும் கார்களில் பொருத்தியோ உபயோகிக்கலாம்.
உலக அமைவிடத் தொகுதியின் (GPS) பயன்கள்:
*கைபேசிகள் மற்றும் கடிகாரங்களில் இதன் பயன்பாடு அதிகம்.
* தானியங்கி பண பரிமாற்றக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.
* இராணுவ போர் தேடல்கள் மற்றும் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளில் பெரிதும் பயன்படுகிறது.
*பயணத் தகவல்களை துல்லியமாக வழங்குகிறது.
*பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவுகிறது.
*வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கண்காணிப்பு போன்ற பணிகளில் இது சிறப்பாக செயல்படுகிறது.
விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவுகிறது.
ஆ.புவியல் தகவல் அமைப்பு (Geographic Information System - GIS)
*புவியியல் தகவல் அமைப்பு ஒரு கணினி சார்ந்த கருவியாகும்.
*இதைக் கொண்டு கொடுக்கப்பட்ட புவியியல் நிலப்பரப்பைப் பற்றி அதிக புள்ளி விபரங்களைச் சேகரிக்க தொலை நுண்ணுர்வு, உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி மற்றும் பிற ஆதார மூலங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
*புவி தகவல் அமைப்பு என்பது கணினி வன்பொருள், மென்பொருள், புவித் தகவல்கள் மற்றும் பணியாளர் தொகுதி இணைந்த அமைப்பாகும்.
*G-Geographic - புவி: 1- Information - தகவல்; S System - அமைப்பு.
7.3. புவன்(Bhuvan)
* அறிவியல் அறிஞர்கள் கொள்கை வகுப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக அதிக அளவில் பயன்படுகிறது.
*'புவன்' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'புவி' என்று பொருள். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தினால் (ISRO) ஆகஸ்டு 12 ஆம் நாள், 2009 ஆம் ஆண்டு, இலவச இணையதளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
புவனின் நன்மைகள்:
*தனது முப்பரிமாண அமைவு மூலம் புவன் புவி மெய்யாகவே அண்டவெளியில் சுழல்வதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.
*மாணவர்கள், அறிவியல் மற்றும் பல்வேறு இடங்களின் வரலாறு போன்ற பலவகையான பாடங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
*இயற்கை வளத் தகவல்களையும், பேரிடர்கள் பற்றிய தகவல்களையும் உரிய நேரத்தில் தெரிவிப்பதில் மிகவும் உறுதுணையாக உள்ளது.
*ஆட்சியாளர் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உதவுகிறது.
9th Social Science Map Skills | 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் நிலவரைபட திறன்கள் | Samacheer Guide 2025
Keywords
9th social science geography map
9th social map questions and answers
9th std map points
9th social guide Tamil
map skills class 9 Tamil Nadu
social science 9th geography map Tamil medium

0 கருத்துகள்