தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின ் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத திகழ்கிறது. உலகின் பழம்பெரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது ப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது.
மாணவர்களே புவியியல் பிரிவில் முதல் ஐந்து பாடங்கள் நம் இந்தியாவை பற்றியது... அடுத்து வரும் இரண்டு பாடங்கள் நம் தமிழ்நாட்டைப் பற்றியது... இந்தியாவில் ஐந்து பாடங்களில் உள்ள கருத்துக்கள் இங்கு அப்படியே இரு பாடங்களில் வந்து உள்ளது... இந்தியாவின் இயற்கை அமைப்பு... காலநிலை காடுகள்... மண் வகைகள்... வேளாண் உற்பத்திகள்,.. கனிம வளங்கள்... அதனைப் பயன்படுத்தும் தொழிலகங்கள்... அதற்கு பயன்படும் போக்குவரத்துக்கள் என்று விரிவாக பார்த்தோம்... இங்கு அதேபோல் தமிழ்நாட்டைப் பார்க்க போகிறோம்.
மாணவர்களே புவியியல் பிரிவில் முதல் ஐந்து பாடங்கள் நம் இந்தியாவை பற்றியது... அடுத்து வரும் இரண்டு பாடங்கள் நம் தமிழ்நாட்டைப் பற்றியது... இந்தியாவில் ஐந்து பாடங்களில் உள்ள கருத்துக்கள் இங்கு அப்படியே இரு பாடங்களில் வந்து உள்ளது... இந்தியாவின் இயற்கை அமைப்பு... காலநிலை காடுகள்... மண் வகைகள்... வேளாண் உற்பத்திகள்,.. கனிம வளங்கள்... அதனைப் பயன்படுத்தும் தொழிலகங்கள்... அதற்கு பயன்படும் போக்குவரத்துக்கள் என்று விரிவாக பார்த்தோம்... இங்கு அதேபோல் தமிழ்நாட்டைப் பார்க்க போகிறோம்.
பொதுவாக புவியில் சிறந்த குடிமகனாக வழங்குவதற்கு தங்கள் தாய் நாட்டில் உள்ள இயற்கை அமைப்பு மற்றும் அதன் சூழல்களை அறிவது அவசியம்... இதையேதான் அமெரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உங்கள் IT மாணவர்களுக்கு புவியியல் மற்றும் வரலாறுள பகுதியையும் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள் என்று கூறினார்... அண்ணா பல்கலைக்கழகமும் அதற்கு செவி சாய்த்து ஆலோசனை செய்தது.. பின்னர் அது ஏனோ அப்படியே நின்று விட்டது... ஆகவே தாங்கள்ATLAS ஐ அவ்வப்போது எடுத்து பார்த்து வர வேண்டும்...
6.1 தமிழ்நாட்டு அமைவிடம் மற்றும் பரப்பளவு... இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது... கிழக்கில் கோடியக்கரை... மேற்கில் ஆனைமலை... வடக்கில் பழவேற்காடு ஏரி... கீழ் குமரிமுனை... தமிழகத்தின் பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.. இந்தியாவின் பரப்பளவில் 11 வது பெரிய மாநிலம்... இந்திய பரப்பளவில் சுமார் 4% கொண்டது
தமிழ்நாட்டின் எல்லைகள் மற்றும் அதன் அண்டை மாநிலங்கள் என்று பார்க்கும்போது கிழக்கே வங்காள விரிகுடா மேற்கே கேரளா வடக்கே ஆந்திர பிரதேசம் வடமேற்கே கர்நாடகா தெற்கே இந்திய பெருங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளன.... குஜராத் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம்..
இயற்கை அமைப்பு... தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீட உமையில் தமிழ்நாடு அமைந்துள்ளது நிலத் தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு தொடர்ச்சி மலை பீடபூமிகள் கடற்கரை சமவெளிகள் மற்றும் உள்நாட்டு சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளைக் கொண்டது
6.2. மேற்கு தொடர்ச்சி மலை...மேற்குத் தொடர்ச்சி
5 (Western Ghats)
இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர் ஆகும். மேற்குத்தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்குகடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது.
இதில் உள்ள கணவாய்கள் பாலக்காட்டு கணவாய் செங்கோட்டை கணவாய் ஆரல்வாய்மொழி கணவாய் அச்சன்கோவில் கணவாய்.. இதில் உள்ள மலைகள் நீலகிரி மலை ஆனைமலை பழனி மலை ஏலக்காய் மலை வருசநாட்டு மழை பொதிகை மலை மற்றும் மகேந்திரகிரி மலை
நீலகிரி மலை... நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது... இங்கு உள்ள சிகரம் தொட்டபெட்டா.... இங்கு உள்ள கோடை வாழிடங்கள் ஊட்டி குன்னூர்.... அரிய வகை தாவரங்கள் மற்றும் பூக்கள் உள்ள மலை... நீலகிரி வரையாடு இங்கு காணப்படுகிறது.
ஆனைமலை... கேரளாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பாலக்காட்டு கணவாயில் அமைந்துள்ளது... ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை மலை வாழிடம் ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளன.......
பழனி மலை... மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியாகும்... இங்கு உள்ள சிகரம் வந்த ராவ்... கோடை வாழிடமான கொடைக்கானல் இங்கு தான் உள்ளது...
ஏலக்காய் மலை.... தமிழ்நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இ மலைகள் ஏழுமலை குன்றுகள் என அழைக்கப்படுகிறது... ஏலக்காய் அதிகம் விளைவதால் இப் பெயர் ஏற்பட்டது... இங்கு காப்பியும் விளைகின்றது...
வருசநாடு மற்றும் ஆண்டிபட்டி மலைக் குன்றுகள்.... இங்கு மேகமலை கழுகுமலை குரங்கணி மலை சுருளி மற்றும் கும்பக்கரை நீர்வீழ்ச்சிகள் உள்ளன... இம்மலையின் தெற்கு சரிவுகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மலை அணில் சரணாலயம் உள்ளது
பொதிகை மலை... இம்மலையின் பெரும்பகுதி தென்காசி மாவட்டமாகும்... அகத்தியர் மலை மற்றும் தெற்கு கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.. இங்குதான் களக்காடு புலிகள் காப்பகம் உள்ளது
மகேந்திரகிரி மலைக்குன்றுகள்... கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை கொண்டது... இம்மலை தான் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி
6.3 கிழக்கு தொடர்ச்சி மலை... தொடர்ச்சியற்ற மலைத்தொடர்... காரணம் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது..... இதில் உள்ள மலைகள் ஜவ்வாது சேர்வராயன் கல்வராயன் கொல்லிமலை மற்றும் பச்சை மலை.... தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன......
ஜவ்வாது மலை.... இம்மலையில் உள்ள மாவட்டங்கள் திருவண்ணாமலை மட்டும் வேலூர்.... இதில் உள்ள சிகரம் மேல்பட்டு.... நீல நிற சாம்பல் கிரானைட் பாறைகளால் ஆனது.... பழங்கள் மரங்கள்.... மருத்துவ மூலிகைகள்... சந்தன மரங்கள் போன்றவை உள்ளன....... கல்வராயன் மலை..... கல்வராயன் என்ற பெயர் கரலர் என்ற பழங்குடியினர் பெயரில் வந்தது... தமிழ்நாட்டின் மிக முக்கிய மலை.... ஜவ்வாது மட்டும் சேர்வராயன் மலைகளுடன் இணைந்து காவிரி மட்டும் பாலாறு ஆற்றின் வடிநிலப் பகுதியை பிரிக்கிறது..... சேர்வராயன் மலை.... சேலம் நகருக்கு அருகே அமைந்துள்ளது... உள்ளூர் தெய்வமான சேர்வராயன் என்ற பெயரில் வந்தது... இதில் உள்ள சிகரம் சோலைக்கரடு... ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது... ஏற்காடு மலை வாழும் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
கொல்லிமலை.... நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய மலைத்தொடர்... தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்லும் மலை... இம்மலையில் உள்ள புனிதத் தலம் அரப்பளீஸ்வரர்... பசுமை மாறாக் காடுகள் மற்றும் சோலைக்காடுகள் அதிகம் உள்ளன... காபி தோட்டங்கள் பழங்கள் பூக்கள் சவுக்கு பண்ணைகள் இங்கு அதிகம் உள்ளன.... பச்சைமலை...... திருச்சி மட்டும் பெரம்பலூர் சேலம் மாவட்டங்களில் உள்ள மலைத்தொடர்... பசுமை தாவரங்கள் அதிகம் உள்ளதால் பச்சை மலை என்று அழைக்கப்படுகிறது... இம்மலையில் பலாப்பழம் நன்றாக விளைகிறது..
6.4... பீடபூமிகள்.... தமிழ்நாட்டில் உள்ள பீடபூமிகள் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.... ஏறக்குறைய முக்கோண வடிவில் சுமார் 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது... வடமேற்கு பகுதியில் பாரமஹால் பீடபூமியானது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ளது... கோயம்புத்தூர் பீடபூமியானது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது... மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கிறது... மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் பவானி நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கிறது.. மதுரை பீடபூமி மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது... இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது இதிலுள்ள ஆறுகள் வைகை மட்டும் தாமிரபரணி....
6.5... சமவெளிகள்.... தமிழ்நாட்டில் காணப்படும் சமவெளிகளை உள்நாட்டு சமவெளிகள் மற்றும் கடற்கரை சமவெளிகள் என்று இரு பிரிவாக பிரிக்கலாம்... பாலாறு பெண்ணையாறு காவிரி மற்றும் தாமிரபரணி ஆறுகள் உள்நாட்டு சமவெளிகளை உருவாக்கி உள்ளது... இதில் பெரும்பாலும் கடலோர மாவட்டங்கள் அமைந்துள்ளது... தமிழ்நாட்டின் கடற்கரை சமவெளியானது சோழமண்டல சமவெளி என அழைக்கப்படுகிறது... இது கன்னியாகுமரி முதல் சென்னை வரை நீண்டு பரவி உள்ளது.... கிழக்கு நோக்கி பாயும் வங்காள விரிகுடா ஆறுகளால் உருவாக்கப்பட்டது... ராமநாதபுரம் வட்டம் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரைப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் தேரி என்று அழைக்கப்படுகிறது... இங்கு உள்ள மன்னார் வளைகுடாவில் பவளப்பாறையில் அதிகம் உள்ளன... கடற்கரைகள் என்று பார்க்கும்போது தமிழ்நாட்டில் அழகான சோழமண்டல கடற்கரை... சென்னை மெரினா கடற்கரை... எளியட் கடற்கரை கோவளம் கடற்கரை (காஞ்சிபுரம்) வெள்ளி கடற்கரை ( கடலூர்) மிகவும் முக்கியமானது...
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாகத்திற்கான PPT collection - Download pdf
Key words
தமிழ்நாடு இயற்கைப் பிரிவுகள், புவியியல் பாடம், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல், Tamil Nadu Geography, 10th Social Science, class 10 geography tamil, natural divisions of tamilnadu, SSLC public exam notes Geography one mark questions, Tamil Nadu regions, geography map study, sslc study material, 10th std notes tamil, kalvi seithigal, tn textbooks
0 கருத்துகள்