x-சமூக அறிவியல்
காலாண்டு தேர்வு திருப்புதல்
மெல்ல கற்கும் மாணவர்களுக்காக மட்டும்
நீங்களும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விடை அளிக்க
1. ஜெர்மனியோடு தொடர்புடைய வெர்சேல்ஸ் உடன்படிக்கை சரத்துக்கள்.
*முதல் உலகப் போர் உருவாக காரணமான நாடு ஜெர்மனி.
*போர் இழப்பீட்டுத் தொகையை ஜெர்மனி வழங்க வேண்டும்.
*சிறிய கப்பற்படையை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
* போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.
* ஆஸ்திரிய ஹங்கேரி மற்றும் ஜெர்மனி இணைய தடை விதிக்கப்பட்டது.
2. தென்மேற்கு பருவக்காற்று குறித்து விளக்குக.
*தென்மேற்கு பருவக்காற்று காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை.
*கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது.
*ஜூன் முதல் வாரம் தொடங்குகிறது.
*வட இந்தியாவில் இடி மின்னலுடன் கனமழையை கொடுக்கிறது.
*இரு கிளைகளாக பிரிகிறது.
*அரபிக் கடல் கிளை
வங்காள விரிகுடா கிளை
இந்தியாவிற்கு ஆண்டுக்கு 75 சதவீதம் மழை பொழிவை கொடுக்கிறது.
3. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:
* மின் பற்றாக்குறை.
*பரந்த நிலப்பரப்பு இல்லை.
*கடன் பெறுவதில் சிக்கல்,
*கடனுக்கான வட்டி அதிகம்.
*குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய தொழிலாளர்கள் இல்லை.
*தொழிலாளர்களுக்கு தொழில்நுட்பம் தெரியவில்லை.
4. GDP ஐ கணக்கிடும் முறைகள்.
GDP ஐ கணக்கிடும் முறைகள் மூன்று ஆகும்.
அவைகள்:
1. செலவின முறை
செலவின் அடிப்படையில் கணக்கிடுவது ஆகும்.
2. வருமான முறை :
வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடுவது ஆகும்.
3. மதிப்பு கூட்டு முறை :
இடைநிலைப் பண்டத்தின் மதிப்பை கூட்டினால் இறுதிப் பண்டம் கிடைக்கும்.
பால் + சர்க்கரை + டீ தூள் = தேனீர்
5. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை விளக்குக.
ஐநா சபை குறிப்பு :
*ஐ.நா. சபையின் தலைமையகம் நியூயார்க்
*ஐநா சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1945
*ஐநாவில் தற்போதுள்ள உறுப்பு நாடுகள் -193
ஐ.நா.வின் அமைப்புகள்:
WHO, IMF, உலக வங்கி.
ஐநாவின் அங்கங்கள் :
பொதுச் சபை, பாதுகாப்பு சபை,
செயலகம், பன்னாட்டு நீதிமன்றம்
ஐநாவின் செயல்பாடுகள்:
*உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துதல்.
*நாடுகளுக்கு இடையே ஏற்படும் போரை நிறுத்துதல்.
*அகதிகள் பிரச்சனையை தீர்த்தல்.
6.இரண்டாம் உலகப் போரின் விளைவுகள்.
இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை நடைபெற்றது.
1. உலகம் இரு அணிகளாக பிரிதல்.
அமெரிக்க தலைமையில் ஒரு அணி.
ரஷ்யா தலைமையில் ஒரு அணி.
2. அணு ஆயுதப் பரவல் :
உலக நாடுகள் தங்களது பொருளாதாரத்தை அதிக அளவில் அணு ஆயுதத்திற்கு செலவிடுகிறது.
7. முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களை விவாதி.
*ஐரோப்பிய நாடுகளில் அணிசேர்க்கைகளும் எதிரணி சேர்க்கைகளும்.
*வன்முறை சார்ந்த தேசியம்.
*ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை.
*பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பாகை.
*வாழ்வின் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு.
*பால்கன் போர்கள்.
உடனடி காரணம்.
8. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றி விவரி.
இமயமலையின் உட்பிரிவுகள் : மூன்று
1.ட்ரான்ஸ் இமயமலைகள்:
*இது வடக்கு இமயமலைகள் என்று அழைக்கப்படுகிறது.
*ஜம்மு-காஷ்மீர் மற்றும் தீபத் பீடபூமியில் அமைந்துள்ளது.
2.இமய மலைகள்:
*இவை உள் இமய மலைகள் மத்திய இமயமலையில்
*வெளி இமய மலைகள் என பிரிக்கப்பட்டுள்ளது.
*இங்கு கோடை வாழிடங்கள் சிகரங்கள்,பனி ஆறுகள் ஆகியவை உள்ளன.
3.பூர்வாஞ்சல் குன்றுகள்:
*இது கிழக்கு இமயமலையாகும்.
*இது வட கிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
இமயமலையின் முக்கியத்துவம் :
*இந்தியாவின் இயற்கை அரணாக உள்ளது.
*வற்றாத ஜீவநதிகளின் பிறப்பிடமாக உள்ளது.
*கோடை வாழிடங்கள் பல உள்ளன.
*இமயமலை ஒரு பல்லுயிர் மண்டலமாக விளங்குகிறது.
*பல புனித தலங்கள் உள்ளன.
9. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்:
*அயன மண்டல பசுமை மாறா காடுகள்:
*ஆண்டு மழைப்பொழிவு 200 செ. மீ. மேல்
*வளரும் மரங்கள் - ரப்பர், தென்னை மூங்கில்
*அயன மண்டல இலையுதிர் காடுகள் :
*ஆண்டு மழைப்பொழிவு 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை.
*வளரும் மரங்கள் சந்தனமரம், மூங்கில்
*அயன மண்டல வறண்ட காடுகள் :
*ஆண்டு மழைப்பொழிவு 50 செ. மீ முதல் 100 செ.மீ வரை.
*மலரும் மரங்கள் இலுப்பை ஆலமரம்
*முட்புதர் காடுகள் :
*ஆண்டு மழை பொழிவு 50 செ.மீ கீழ்.
*வளரும் மரங்கள் கருவேல மரம், ஈச்சமரம்
*அல்பைன் காடுகள்/ இமயமலை காடுகள்:
*கிழக்கு இமயமலை சரிவுகளில் காணப்படுகிறது.
*வளரும் மரங்கள் - ஒக், பைன்
10. நகரமயமாக்கல் என்றால் என்ன ?_ அதன் சிக்கல்கள் யாவை ?
நகரமயமாக்கம் :
*கிராமப்புறம் நகர்ப்புற சமுதாயமாக மாறுதல் அடைவதை நகரமயமாக்கம் என்கிறோம்.
நகரமயமாக்கத்தின் சிக்கல்கள் :
*குடியிருப்புகள் பற்றாக்குறை.
*குடிநீர் பற்றாக்குறை.
*வடிகால் பிரச்சினைகள்.
*சுகாதாரப் பிரச்சினைகள்.
*குற்றங்கள் அதிகரிக்கிறது.
* மக்கள் நெருக்கடி அதிகம்.
*சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
11. பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்த வாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக
பெண்கள் மேம்பாட்டிற்கு 19 நூற்றாண்டில் பாடுபட்ட சீர்திருத்தவாதிகள்:
*ராஜாராம் மோகன்ராய்,
*ஈஸ்வர சந்திர வித்யாசாகர்,
*கேசவ சந்திர சென்,
*எம் ஜி ரானடே, ஜோதிபா பூலே
சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள்:
*பெண் அடிமைத்தனத்தை எதிர்த்தனர்.
*குழந்தை திருமணத்தை எதிர்த்தனர்.
*பலதாரமணத்தை எதிர்த்தனர்.
*உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது.
* பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
*விதவைகள் மறுமணத்தை ஆதரித்தனர்.
*ஒடுக்கப்பட்ட மக்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டனர்.
12. இந்தியாவின் மண் வகைகள் ஏதேனும் ஐந்திணை குறிப்பிட்டு மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.
இந்தியாவில் உள்ள மண் வகைகள் ஐந்து.
வண்டல் மண் :
*பழைய வண்டல் படிவுகள் பாங்கர்.
*புதிய வண்டல் படிவுகள் காதர்.
*விளையும் பயிர்கள் நெல் கரும்பு வாழை
*காணப்படும் இடம் கங்கை ஆற்று பள்ளத்தாக்கு.
கரிசல் மண் :
*ஈரம் ஆகவும் சேறாகவும் இருக்கும்.
*விளையும் பயிர்கள் - பருத்தி கரும்பு
*காணப்படும் இடம் மகாராஷ்டிரம்
செம்மண் :
*சிவப்பு நிறத்தில் இருக்கும்.
*விளையும் பயிர்கள் பருப்பு வகைகள்
*காணப்படும் இடம் தமிழ்நாடு கேரளா
சரளை மண் :
*விளையும் பயிர்கள் - காபி ரப்பர்
*காணப்படும் இடம் அசாம் மலைப் பகுதி
காடு மற்றும் மலைமண்:
*விளையும் பயிர்கள்- தேயிலை,மக்காச்சோளம்
*காணப்படும் இடம் ஜம்மு காஷ்மீர்
13. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக
தேசிய நெடுஞ்சாலைகள்
மாநிலச் சாலைகள்
மாவட்டச் சாலைகள்
கிராமப்புறச் சாலைகள்
எல்லைப் புறச்சாலைகள்
விரைவு சாலைகள்
பன்னாட்டு நெடுஞ்சாலைகள்
தங்க நாற்கரச் சாலைகள்
14. இந்திய அரசியலமைப்பின் சிறப்பு கூறுகளை விளக்குக.
உலகிலேயே இந்திய அரசியலமைப்பு மிகவும் நீளமானது.
நெகிழும் நெகிழா தன்மை கொண்டது.
கூட்டாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒற்றை குடியுரிமை வழங்குகிறது.
வயது வந்தோர் வாக்குரிமை அளிக்கிறது.
இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
15. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
தென்னிந்தியாவின் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படும்.
அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகின்றன.
இவ்வாறுகள் பாயும் திசை அடிப்படையில் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அவைகள்
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்:
தாமிரபரணி காவிரி,
கிருஷ்ணா, கோதாவரி
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
நர்மதை, தபதி
16. முதலமைச்சரின் அதிகாரங்களை பணிகளையும் விவரி.
அமைச்சரவை தொடர்பானவை.
முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை.
அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
சட்டமன்றம் தொடர்பானவை.
சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
17. பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
பன்னாட்டு நிறுவனத்தின் நன்மைகள் :
குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும்.
உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது.
நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.
பன்னாட்டு நிறுவனங்களில் தீமைகள் :
சுற்றுச்சூழல் தீங்கினை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
18. உலகமயமாக்களின் சவால்களை எழுதுக.
உலகமயமாக்களின் சவால்கள் :
* நன்மைகள் எல்லா நாடுகளுக்கும் கிடைப்பதில்லை.
* சமத்துவமின்மை உள்ளது.
* ஊதியம் குறைவாக உள்ளது.
*வேலைவாய்ப்பு போட்டிகள் அதிகம்.
* குழந்தை தொழிலாளர் நடைமுறை உள்ளது.
*உடல் நலக்குறைவு மற்றும் நோய்கள் அதிகம் உருவாகிறது.
19. பொது விநியோக முறையை பற்றி விவரிக்கவும்.
தமிழ்நாடு உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது.
மத்திய மாநில அரசுகள் பொது வழங்கும் முறைக்கு மானியங்கள் கொடுக்கிறது.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இலக்குப் பொதுமக்கள் முறை உள்ளது.
பயனாளிகள் அளவுகோல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது.
50% நகர்ப்புற குடும்பங்களையும் 75 சதவீதம் கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியது.
SSLC சமூக அறிவியல் 5 மதிப்பெண் வினாக்கள் PDF – மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு | Free Download Tamil Nadu 10th Social Science Questions
குறிப்பு : மேற்கண்ட 5 மதிப்பெண் வினாக்களுக்கு விடைகளை மெல்ல கற்கும் மாணவர்கள் மட்டும் படித்து எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெறும் மாணவர்கள் மேற்கண்ட கேள்விகளுக்கு முழுமையான விடைகளை படித்து தேர்வு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மெல்ல கற்கும் மாணவர்கள் எளிமையாக படிக்கும் விதத்தில் மேற்கண்ட வினாக்களுக்கு விடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தேர்வு எழுதும் பொழுது ஐந்து மதிப்பெண்களுக்கு நான்கு மதிப்பெண்கள் குறையாமல் மாணவர்கள் பெற வாய்ப்புகள் அதிகம்.
என்றும் கல்வி பணியில்..,
உங்கள்
சமூக அறிவியல் ஆசிரியர் நண்பன்
M SHANMUGAVEL GHSS SALAIGRAMAM
Keywords
SSLC Social Science 5 mark questions, Tamil Nadu 10th quarterly exam, Social Science questions PDF, slow learners 10th standard, SSLC 5 mark free download, 10th social science important questions, 10th exam 5 mark questions Tamil, SSLC study material, TN SSLC PDF 2025
0 கருத்துகள்