Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆனந்த வாழ்வு அளிக்கும் ஆடித்தபசு – ஆன்மிக மற்றும் வாழ்வியல் பாடம் | Tamil Spiritual Blog

 டி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடித்தபசு 'தபசு' என்றால் 'தவம்' என்று பொருள். அம்பிகையின் தவ. வலிமையை போற்றி புகழும் நாளாக இந்த ஆடித்தபசு திகழ்கிறது. அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடித்தபசு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. என்றாலும், ஆடித்தபசு விழாவிற்கு பெயர் பெற்ற தலம், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தான். ஆடித்தபசு கொண்டாடப் படுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது இந்த தலம் தான்.



முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்று இரண்டு நாகலோக அரசர்கள் இருந்தார்கள். இவர் களில் சங்கன், சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டவன், சிவன் தான் அனைத்து தெய்வங் களை விடவும் உயர்வானவர் என்றான். ஆனால் பதுமன், தான் வணங்கும் நாராயணன் தான் அனைவரையும் விடவும் உயர்வானவர் என்றான். இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, இறுதியில் ஒரு முடிவு காண்பதற்காக பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர்.


இவர்களின் பிரச்சினையை கேட்ட பார்வதி தேவி, தன் கணவர் சிவன் தான் பெரியவர் என்பதா அல்லது தன் சகோதரர் திருமால் தான் பெரியவர் என்று சொல்வதா என யோசித்தார். சிவன், விஷ்ணு இவருமே ஒருவர் தான். உருவத்தில் தான் இருவரும் வேறுபட்டவர்களே தவிர, மற்றபடி இருவரும் ஒருவரே என்றார் பார்வதி, ஆனால் சங்கன் மற்றும் பதுமன் ஆகிய இருவரும் இதை ஏற்க மறுத்தனர். உரிய காலம் வரும்போது உங்களுக்கே இது புரியும் என சொல்லிவிட்டு சென்றார், பார்வதி தேவி.


நடந்தவற்றை சிவனிடம் கூறினார் பார்வதி. மேலும் உலக உயிர்கள் அனைத்துக்கும் நீங்கள் இருவரும் ஒன்று தான் என்பதை உணர்த்த இருவரும் ஒரே ரூபமாக காட்சி தாருங்கள் என வேண்டினாள். அதற்கு சிவபெருமான் பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் இயற்றும்படி கூறினார். அதன்படி புன்னை மரங்கள் நிறைந்த காட்டில் தவம் இயற்ற முடிவு செய்தார் பார்வதி தேவி.இவ்வாறு அம்பிகை தவம் இயற்ற தேர்வு செய்த இடம் தான் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தலமாகும். பார்வதி தேவி தவம் இயற்ற பூலோகம் செல்கிறார் என்றதும் தேவ மாதர்கள் அனைவரும் பக கூட்டங்களாக மாறி வந்து, அன்னை தவம் தெய்வ தற்கு காவலாக இருந்தனர். கோ' என்றால் பசு.பசு கூட்டத்துடன் வந்து மதி போன்ற முகத்துடன் தவம் செய்த அம்மன் என்பதால், இத்தலத்து அம்மன்  'கோமதி' என்றும், ஆவுடை நாயகி' என்றும் அழைக்கப்படுகிறாள்.


 


புன்னை வனத்தில் வாசி முனையில் நின்று பார்வதி தேவி கடும் தவம் இயற்றினார். அவரது தவத்திற்கு மகிழ்ந்து, சிவனும் நாராயணனும் இணைந்து ஒரே ரூபமாக சங்கர நாராயணராக (சங்கான் - சிவன், நாராயணன் - விஷ்ணு) காட்சி அளித்தனர். ஒரு பாகத்தில் தலையில் சடாமுடி, கங்கை, பிறை, நெற்றியில் திருநீற்று பட்டை, கழுத்தில் பாம்பு, ருத்ராட்சம் அணிந்த கோலமாகவும், மற்றொரு பாகத்தில் தலையில் கிரீ டம், நெற்றியில் திருமண், கழுத்தில் துளசி மாலை, கையில் சங்கு ஏந்திய நிலையில் சங்கர நாராயணராக காட்சி அளித்த நாளையே ஆடித்தபசு நாளாக நாம் கொண்டாடுகிறோம். சிவபெருமான், திருமால், அன்னை அம்பிகை ஆகிய மூவருக்கும் உரிய நாளான ஆடித்தபசு நாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி வியாழக்கிழமை வருகிறது. இந்த நாளில் சங்கரன்கோவில் சென்று வழிபட்டு வரலாம். முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ-விஷ்ணு கோவில்களுக்கு சென்று வரலாம். அதுவும் முடியாதவர்கள் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபடலாம். இந்த நாளில் சத்யநாராயண பூஜை செய்வது வறு மையை போக்கி அனைத்து விதமான செல்வங்களையும் அள்ளித்தரும். ஆடித்தபசு நாளில் அம்பிகையை வேண்டி வழிபட்டால், கணவன் - மனைவிக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கி, ஒற்றுமையான ஆனந்தமான வாழ்க்கை அமையும், அதோடு சிவன், பெருமாள், அம்பிகை ஆகிய மூன்று தெய்வங்களின் அருளும் கிடைக்கும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்