நம் நெல் அறிவோம்
சீரகச் சம்பா நெல்
நாம் மறந்து போன பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகளை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு பாரம்பரிய நெல் இரகத்தின் அரிசியை பற்றி பதிவிட்டு வருகிறேன்.
அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது *சீரகச் சம்பா நெல்*என்கிற பாரம்பரிய ரகம் நெல் பற்றி தான்.சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றாகும். சீரகம் எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு "சீரகச் சம்பா" எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் செய்ய ஏற்றது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.இந்த சீரகச் சம்பா நெல்லிருந்து கிடைக்கும் அரிசியின் சோறு பல மருத்துவப் பயக்கள் உடையது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்படும் இந்த சீரகச் சம்பா நெல் இரகம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் பெருமளவில் வேளாண்மைச் செய்யப்படுகிறது.
சீரகச் சம்பா அரிசி நறுமணமும், அறுசுவையும் நிறைந்தது. இது, எளிதாக செரிப்பதோடு, இரைப்பை ஒழுங்கீனங்களை தடுத்து பசியைத் தூண்டக்கூடியது.ஆரம்ப நிலையிலுள்ள, வாத நோய்களைப் போக்கவல்லது
சீரகச்சம்பா அரிசி தின்னச்
சுவையாகும்
பேரகத்து வாதமெல்லாம்
பேருங்காண் – வாருலகில்
உண்டவுட னேபசியும் உண்டாகும் பொய்யலவே
வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து.
மேற்கூறிய பாடலின் பொருளானது,
”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்” என்பதாகும்.சீரக சம்பா அரிசி குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கு உதவி செய்யும். உணவு பசியை அடக்க உதவுகிறது. இது நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
இந்த அரிசி உணவு சீரணமாகும் போது இரத்தத்தில் சர்க்கரை வெளியீடு மெதுவாக இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஏற்றதுசீரக சம்பா அரிசி ஒரு மலமிளக்கியாக செயல்படக் கூடியது. எனவே மலச்சிக்கலை தடுக்கும். மலச்சிக்கலுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் நார்ச்சத்துக்கள் குறைவான உணவுகளை உண்பது. எனவே பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மலச்சிக்கலை போக்க நார்ச்சத்துக்கள் உள்ள உணவை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
புரோட்டீன், செலினியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவை இந்த சீரக சம்பா அரிசியில் இருக்கிறது. இந்த சீரக சம்பா அரிசியில் கொழுப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை நாம் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்காது. ஏற்கனவே உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த அரிசியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
செலினியம் நல்ல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன் ஆகும். இது நமது செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதிலிருந்து காக்கிறது.இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது.மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.தைராய்டு சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்க உதவுகிறது.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நம்மைத் தடுக்க உதவுகிறது.சீரக சம்பா அரிசியில் உள்ள செலினியம் அழற்சியைக் குறைக்க உதவுகிறது .மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.இதில் சோடியம் இருப்பதால் நம்முடைய இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.சீரக சம்பா அரிசியில் இயற்கையான மணத்தினை அளிக்கக் கூடிய 2-அசிட்டைல்- 1-ப்ய்ரரோலினி என்ற இயற்கை வேதியல் பொருள் இருப்பதால் அதன் மணம் ஒரு உணவை உண்ணத் தூண்டுகிறது.சன்ன ரக அரிசியான இதனை சமைக்கும் பொழுது இந்த வேதியல் பொருள் அபாரமான மணத்தினை கொடுப்பதுடன் உண்பவருக்கு சீரான ஜீரணத்தையும் அளிக்கிறது.
சீரக சம்பா அரிசி ரகங்கள்
சீரக சம்பா அரிசியில் பல ரகங்களும், பல வாசனையையும் கொண்ட அரிசிகள் உள்ளது. துளசி, ஜீரகம், மசாலா மணம் என பல மணத்துடன் நமது பாரம்பரிய சீராக சம்பா அரிசி இன்று நடைமுறையில் உள்ளது.பாரம்பரிய சீராக சம்பா அரிசியின் தனித்தன்மை என்னவென்றால் பல விவசாயிகள் இதனை இயற்கை முறையில் பயிரிடுவது. எந்த செயற்கை ரசாயனமும், பூச்சிக்கொல்லியும் இல்லாது இன்று இந்த சீராக சம்பா அரிசி கிடைக்கிறது. அதிலும் கைக்குத்தல் முறையில் உமியை மட்டும் நீக்கி தவிட்டுடன் கூடிய அரிசியில் பல பல சத்துக்கள் உள்ளது.
GI குறைவான அரிசி
அன்றாடம் உண்ணும் வெள்ளை அரிசியை விட இதன் GI குறைவாக உள்ளது. இதனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் இதனை உண்ணலாம். மேலும் இதில் புரதம், நார்ச்சத்துக்கள், மற்றும் வைட்டமின் சத்துக்களும் உள்ளது.இந்தியாவின் பெருமையான பாரம்பரிய பாசுமதி அரிசியைப் போல நமது தமிழகத்தின் பெருமையான சீரக சம்பா அரிசியினை அந்த காலத்தில் சிற்றன்னம் படைத்து வளைகாப்பு நேரத்தில் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கொடுப்பது வழக்கம்.
இதில் கலவை சாதம் என்று இன்று நாம் சொல்லும் எலுமிச்சை சாதம், புளியஞ்சாதம், தேங்காய் சாதம், வெண்பொங்கல், கூட்டாஞ் சோறு போன்றவற்றை தயாரித்து உண்டு மகிழ்ந்தனர்.சீரக சம்பா அரிசியுடன் நாட்டு காய்கறிகளையும் நாட்டுப் பருப்பையும் கொண்டு தயாரிக்கும் கூட்டாஞ் சோறின் சுவை தனி சுவைத்தான்.
சீரக சம்பா அரிசி பிரியாணி
மேலும் ஊன்சோறு என்று நமது ஊர்களில் சீரக சம்பா அரிசியுடன் இஞ்சி, பூண்டு கொண்டு தயாரான உணவு இன்று மேற்கத்திய உணவான பிரியாணியுடன் சேர்ந்து பல வகைகளில் இன்று அனைவருக்கும் பிடித்த உணவாக வலம் வருகிறது. இன்றும் பல பிரத்தியேக பிரியாணி தயாரிப்பாளர்கள் தங்களின் உணவு விடுதிகளில் இந்த சீரக சம்பா அரிசியினை கொண்டே பிரியாணி தயாரிக்கின்றனர். பிரியாணி உணவின் சுவைக்கும், மணத்திற்கும் காரணமும் இதுவே.சீரக சம்பா அரிசியில் பிரியாணி மட்டுமல்லாது அன்றாடம் உணவிற்கும் இதனை பயன்படுத்தலாம்.பல வகைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த சீரக சம்பா அரிசியை நீங்களும் வாங்கி உண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Key words
Seeraga Samba Rice,Seeraga Samba Cultivation,Traditional Rice Varieties in Tamil Nadu,Benefits of Seeraga Samba,Organic Seeraga Samba Rice,சீரக சம்பா நெல்,சீரக சம்பா நெல் பயிரிடும் முறை,பாரம்பரிய நெல் வகைகள்,சீரக சம்பா நெல் நன்மைகள்,காரிகாப்பு நெல்,சீரக சம்பா நெல் நன்மைகள்,சீரக சம்பா நெல் பயன்கள்,பாரம்பரிய நெல் நன்மைகள்,சீரக சம்பா அரிசி உடல்நலம்,தமிழில் ஆரோக்கிய அரிசி வகைகள்
0 கருத்துகள்