தல வரலாறு
தூத்துக்குடியின் பழம்பெயர் 'திருமந் திரநகர்'என்பதாகும். இங்குதான் சிவபெருமான் பிரணவ மந்தி இவ் ரத்தை பார்வதி தேவிக்கு வரையறுத்ததாக நம்பப்படு கிறது. அதன் காரணமாகவே இந்த இடம் 'திருமந்திர நகர்' என்று அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் வந்த வன் காசியப முனிவர் பசுமை நிறைந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார். அதுவே இந்த சங்கர ராமேஸ் வரர் கோவில் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவளை காசியப முனிவர், கவுதமர், பரத்துவாஜர், அத்திரிபோன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.
கிள் பிற்கால குறுநில மன்னரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந் தார். இவருக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் மனம் வருந்திய மன்னன், காசி போன்ற புண்ணிய திருத்தலங் களுக்குச் சென்று புனித நீராடி வந்தார். ஒரு சமயம் மன்னன் தனது பரிவாரங்களுடன் புனித நீராடச் செல் லும்போது, இறைவனது குரல் "பாண்டியா, திருமந்திர நகரில் உள்ள காசிக்கு நிகரான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா" என அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து சங்கரராம பாண்டியன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி காசியப முனிவர் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு திருக்கோவில் ஒன்றை எழுப்பினார்.
கோவில் அமைப்பு கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து ளுப்பது நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது. இரண்டு பிரகாரங்கள் வாழியா உள்ளன. இக்கோவிலை ஒட்டி பெரு மாள் கோவிலும் உள்ளது. இறைவன் சன்னிதி முன்பு அர்த்தமண்டபம், மகா மண்டபம் உள்ளன. இத்தல இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு திருக் கரங்களில் ஒரு கரத்தில் தாமரை ஏந் தியும், மற்றொரு கரத்தை இடையோடு தொங்க விட்டபடியும் பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் காட்சி அளிக் கிறார்.
இறைவன் எதிரில் உயர்ந்த மரம், நந்தி உள்ளன. அதனை கடந்தவுடன் வாசலின் இருபுறமும் சூரியன், சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள் ளார். கருவறை வாச லில் அழகிய விநாய கர் தனிச் சன்னிதி யில் அருள்கிறார். கருவறை கோட்டத் தில் தென்முகன், லிங் கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகார சன்னிதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற் கில் விநாயகர், அடுத்து புறச்சுற்றில் கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன.
வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார். அருகில் தெற்கு நோக் கியபடி உற்சவ திருமேனியுடன் முருகன் சன்னிதியும் உள்ளது. வடப்புற சுற்றில் தெற்கு நோக்கிய இரு மாடங் களில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் உள்ளனர். அதே சுற்றில் தெற்கு நோக்கிய சனிபகவான் சன்னிதி உள்ளது. அழகிய மண்டபத்தில் வடகிழக்கில் நடராஜர் சிவகாமி யுடன் உள்ளார். அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சனிபகவான் கையில் வில் அம்புடன் உள்ளார். மற்ற கிரகங்களும் கையில் ஆயுதங்களுடன் வாகனத்தில் உள்ளனர்.
இரண்டாம் பிரகாரத்தில் கன்னி விநாயகர், முருகன். ஐயப்பன் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில் உள்ள 'வாஞ்சா புஷ்கரணி என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம், வைகாசியில் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி, புரட்டாசியில் நவராத்திரி மற்றும் பாரிவேட்டை, ஐப்பசியில் திருக்கல்யாணம், கார்த்திகையில் சொக்கபனை ஏற்றுதல், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, தை மாதத்தில் தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா, மாசியில் மகா சிவராத்திரி, பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார் சிவ பெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறக்கப்பட் டிருக்கும்.
அமைவிடம்
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத் தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது
Key words
sankara rameswaram temple,
child blessing temple in tamilnadu,
miracle temple for childless couples,
kulanthai bhagyam temple tamil,
kulanthai prapthi temple tamilnadu,
kulanthai varam kadavul,
pregnancy temple tamilnadu,
rameswaram sankara temple child blessing,
sivan temple for child boon,
santhana prapthi stalam tamil
0 கருத்துகள்