Ad Code

Ticker

6/recent/ticker-posts

9th Class Social Quarterly Exam 2025 Important Questions Tamil Nadu - PDF Download & Tips

 Introduction:


🎓 தமிழ்நாடு பள்ளிக்கல்வி வாரியம் (TNSCERT) பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள், சமூக அறிவியல் (Social Science) பாடம் மிக முக்கியமானது. 2025ஆம் ஆண்டின்  காலாண்டுத் தேர்விற்கான முக்கியமான கேள்விகளை கீழே தொகுத்துள்ளோம்.இந்த கேள்விகள் வழிகாட்டியாகவும், தேர்வுக்கு முன் முழுமையான தயாரிக்கவும் உதவும்.



📚 பாடங்கள் (Chapters Covered):

வரலாறு 

1.மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

2.பண்டைய நாகரிகங்கள்

3.தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

4.அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

5.செவ்வியல் உலகம்

புவியியல் 

1.நிலக்கோளம் I- புவி அகச்செயல்பாடுகள்

2.நிலக்கோளம் -IIபுவி புறச்செயல்பாடுகள்

3.வளிமண்டலம்

4.நீர்க்கோளம்

5. உயிர்க்கோளம்

குடிமையியல் 

1.அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

2.தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

3.மனித உரிமைகள்

பொருளியல் 

1.மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

2.இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

✅ முக்கியமான கேள்விகள் (Important Questions):

1.பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.

2. சிகுராட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக.

3.மும்மணிகள் (திரிரத்னா) -இச்சொல்லை விளக்கிக் கூறு.

4. புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

5.புவியின் நான்கு கோளங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

6. காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடுக.

7.மழைப்பொழிவின் வகைகள் யாவை?

8. உயிரினப் பன்மை என்றால் என்ன?

9. நீரியல் சுழற்சி என்றால் என்ன?

10.நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.

11.குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா. அறிவித்துள்ளவை யாவை

12.இந்தியாவில் தேர்தல் முறை பற்றி எழுதுக

13.பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் யாவை?

14 குழந்தைகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களையும் ஏன் பணிக்குழுக்களாக கருதக்கூடாது?

15.வேறுபடுத்துக:

அ) வானிலை மற்றும் காலநிலை

ஆ) இயற்சிதைவு மற்றும் வேதியியல் சிதைவு

காரணம் கூறுக: வெப்பசலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.

16. சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்களைப் பற்றி எழுதுக.

17. சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை
மேம்படுத்தின?

18. புவி அமைப்பை விவரி.

19. மேகங்களின் வகைகளை விவரி.

20. கடல் வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை?

21. சூழ்நிலைமண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.

22. இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிபந்தனைகளை
விளக்குக.

23. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?

24. புதுப்பிக்கத்தக்க வளங்கள் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள் வேறுபடுத்துக.

25.கீழ்க்காணும் இடங்களை தென்னிந்திய வரைபடத்தில் குறிக்கவும்:

26. பொதுத்துறை - தனியார் துறை வேறுபடுத்துக

27.இந்திய வரைபடம் 
(அ) கொற்கை (ஆ) அரிக்கமேடு (இ) காஞ்சி 
(ஈ) சென்னை (உ) மதுரை


28. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது -தெளிவுபடுத்துக. 

29. கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக் கூறு.

30. உலக வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறித்துக் காட்டுக:

 (1) எகிப்து

(iii) மெசபடோமியா

(ii) இந்தியப் பெருங்கடல்

(ν) சீனா 

(vii) லண்டன் 

(vi) இத்தாலி

(viii) கருங்கடல்

(iv) பசிபிக் பெருங்கடல்

ஆ)
 (i) பூமத்தியரேகை

(ii) பசிபிக் நெருப்பு வளையம்

(v) ஆல்ப்ஸ் மலை

(iv) வெப்ப பாலைவனம்

(iii) இமயமலை

(vi) ஆர்டிக் பெருங்கடல்

(vii) லேப்ரடார் நீரோட்டம்

(viii) கலிபோர்னியா


📥 PDF Download:


👇 இந்த முக்கியமான கேள்விகளை PDF வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


🔗 Click here to Download PDF


📌 தேர்வுக்கு தயார் செய்ய சில பயனுள்ள குறிப்புகள்:


1.தினமும் குறைந்தது 1 மணி நேரம் Social பாடத்திற்கு ஒதுக்கவும்.


2.கடந்த வருடங்களின் தேர்வு கேள்விப் பேப்பர்களை ஆராயுங்கள்.


3.முக்கியமான தேதிகள், நிகழ்வுகள், வரைபடங்களை ஒட்டிய படிக்கவும்.


4.குறுஞ்சிறுகுறிப்புகள் (short notes) உருவாக்கி மறந்துவிடாமல் படிக்கவும்.


5.முக்கியமான கேள்விகளுக்கு முந்தைய மாதிரி பதில்களை எழுதிப் பயிற்சி செய்யவும்.


📢 Related Posts (உடனே பாருங்கள்!):

*9 th social map material 

*9 th social mind map

*9 th class time scale 


Key words 

9th social quarterly exam 2025,9th std social important question,Tamil Nadu 9th exam 2025,9th social quarterly syllabus,9th class model question paper,Social science class 9 Tamil medium,9th quarterly exam study material,9th class exam tips 2025

கருத்துரையிடுக

0 கருத்துகள்