Ad Code

Ticker

6/recent/ticker-posts

பழைய வருமான வரி திட்டமா? புதிய திட்டமா? 2025-இல் எந்தது சிறந்தது?

 தற்போது நம் நாட்டில் வருமான வரிகணக்கை தாக்கல் செய்வதற்கு இரண்டு நடைமுறைகள் அமலில் இருக்கின்றன. ஒன்று, பழைய வரி கணக்கு தாக்கல் நடைமுறை, மற்றொன்று. புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறை.



மத்திய அரசை பொறுத்தவரை புதிய வரி கணக்கு நடைமுறையில் அதிகமானவர்கள் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.எனவே புதிய வரி கணக்கு முறையில்தான் பல்வேறு சலுகைகளையும் அறிவித்திருக்கிறது.


புதிய வருமான வரி கணக்கு நடைமுறை:


புதிய வருமான வரி கணக்கு நடைமுறையை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்தவித வரியும் இல்லை.


பழைய வருமான வரி கணக்கு நடைமுறை:

பழையவருமான வரி கணக்கு நடைமுறையை பொறுத்தவரை பல்வேறு வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. எனவே பெரும்பாலான சம்பளதாரர்கள் தங்களின் வருமான வரியை குறைப்பதற்காக இந்த வரி கணக்கைத்தான் பின்பற்றுகின்றனர்.


என்ன வித்தியாசம்?: 

இந்தியாவில் பழைய வரிகணக்கு நடைமுறை மற்றும் புதிய வரி கணக்கு நடை முறை இரண்டுக்கும் இருக்கக்கூடிய வித்தியாசம், வரிச்சலுகைகள்தான். பழைய வரி கணக்கு நடை முறையை பொறுத்தவரை பிரிவு 80சி-ன் கீழ் நாம் நம்முடைய முதலீடுகள் உள்ளிட்டவற்றை கணக்கு காட்டி ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும். ஆனால் புதிய வரி நடைமுறையில் இத்தகைய சலுகைகள் எதுவும் கிடையாது, மாறாக, வருமான வரி உச்சவரம்பும், வரி விகிதங்களும் அதிகம்.


எதை தேர்வு செய்வது?: 

இந்த சூழலில்தான் பழையவரி நடைமுறையை தேர்ந்தெடுப்பதா அல்லது புதிய வரி நடைமுறையை தேர்ந்தெடுப்பதா என பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக வருகிற செப்டம்பர் 15-ந் தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.சம்பளதாரர் கள் ஒவ்வொரு ஆண்டும் பழைய வரி நடைமுறையில் இருந்து புதிய வரி நடைமுறைக்கு மாறிக்கொள்ளலாம்.


வரிவிலக்குகள்: 

வீட்டுக் கடன் உள்ளவர்கள்,அதற்கான வட்டி தொகைக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். இது பழைய வரி நடைமுறை யில் கிடைக்கிறது. அதேபோல ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் எனப்படும் எச்.ஆர்.ஏ.மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியம், யூலிப் திட்டங்கள், செல்வமகள் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்டவற்றில் பங்களிப்பு செய்பவர்கள் 80சி பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம். எனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பழைய வரி கணக்கு முறையை தேர்வு செய்யலாம்.


அதிக வரி விகிதங்கள்:

 நான் மேற்கண்ட முதலீடு களை மேற்கொள்ளவில்லை, எளிமையான ஒரு வரி கணக்கு நடைமுறையை விரும்புகிறேன் என்பவர்கள் புதிய வரி கணக்கு முறைக்கு மாறலாம். இதில் வருமானவரி விகிதங்கள் அதிகம். ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடை யாது, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அதற்கான இணையதளத்துக்குச் செல்லும்போதே, புதிய வரி முறையா அல்லது பழைய வரி முறையா என கேட்கும். அதில் பொருத்தமானதை தேர்வு செய்யலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்