1. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
அ) ரூஸ்வெல்ட்
ஆ) சேம்பெர்லின்
இ) உட்ரோ வில்சன்
ஈ) பால்டுவின்
2. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
ஈ) கோபால நாயக்கர்
3. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் தன் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
அ) கோல் கிளர்ச்சி
ஆ) இண்டிகோ கிளர்ச்சி
இ) முண்டா கிளர்ச்சி
ஈ) தக்காண கலவரங்கள்
4. 1709 இல் தரங்கம்பாடியில் ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவியவர்
அ) கால்டுவெல்
ஆ) F.W. எல்லிஸ்
இ) சீகன் பால்கு
ஈ) மீனாட்சி சுந்தரனார்
5. ______ஆம் ஆண்டில் லொக்கார்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
அ) 1927
ஆ) 1825
இ) 1925
ஈ) 1952
6. பழவேற்காடு ஏரி______மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
7. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
அ) சம மழைக் கோடுகள்
ஆ) சம அழுத்தக் கோடுகள்
இ) சம வெப்ப கோடுகள்
ஈ) அட்சக் கோடு
8. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படுவது?
அ) திருவாரூர்
ஆ) தஞ்சாவூர்
இ) சேலம்
ஈ) திருச்சி
9. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
அ) பாலக்காடு
ஆ) செங்கோட்டை
இ) போர் காட்
ஈ) அச்சன் கோவில்
10.மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு
அ) வரைபடவியல்
இ) மானுடவியல்
ஆ) மக்களியல்
ஈ) கல்வெட்டியல்
11.கீழ்க்காணும் வரிசையில் 'முகவுரை' பற்றிய சரியான தொடர் எது?
அ) குடியரசு, ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை
ஆ) இறையாண்மை, சமதர்ம சமயச்சார்பற்ற குடியரசு, ஜனநாயக
இ) இறையாண்மை, குடியரசு, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு
ஈ) இறையாண்மை, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு
12.மாநில அமைச்சரவையின் தலைவர்
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) சபாநாயகர்
ஈ) பிரதம அமைச்சர்
13. _______என்பது உடல்நலம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.
அ) ஆரோக்கியம்
ஆ) ஊட்டச்சத்து
இ) சுகாதாரம்
ஈ) பாதுகாப்பு
14. முதன்மைத் துறை______ ஐ உள்ளடக்கியது.
அ) வேளாண்மை
ஆ) தானியங்கிகள்
இ) வர்த்தகம்
ஈ) வங்கி
10th Social Science One Mark Questions Online Test –2 Practice & Score High in SSLC Exam 2025
மேலும் படிக்க
0 கருத்துகள்