Ad Code

Ticker

6/recent/ticker-posts

எடையை குறைக்க கிரீன் டீ vs பிளாக் காபி – எது சிறந்தது? நிபுணர் விளக்கம்!

 


டல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் தேர்வாக கிரீன் டீ அல்லது பிளாக் காபி உள்ளது. எடையை ஆரோக்கியமான முறையில் இழக்க நினைப்பவர்கள் இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்கிறார்கள்.


கிரீன் டீ, பிளாக் காபி இரண்டிலுமே கலோரிகள் மிகக் குறைவாகவும், ஆண்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும் உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, நம் உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கும்.ஆனால் இவை இரண்டில் எது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்?

அதுகுறித்து இங்கே பார்க்கலாம்...


பொதுவாகவே எடையை குறைக்க விரும்புபவர்கள் தேர்வு செய்யும் முதல் பானம் கிரீன் டீ அவர்கள், ஒரு நாளைக்கு 3 முதல் 4 கப் கிரீன் டீ குடிக்கிறார்கள். இது பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. காரணம் இதில் இருக்கும் காபீன் மற்றும் கேட்சின். ஆய்வு ஒன்றின்படி, உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பைக் குறைக்க கேடசின் பெரிதும் உதவுகிறது.


கிரீன் டீ வாயிலான எடை இழப்பு, நல்ல தூக்கத்துக்கு உதவுகிறது. இது தவிர, டைப் 2 சர்க்கரை நோய்க்கும், இதயம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் கிரீன் டீ ஆரோக்கிய பானமாக கருதப்படுகிறது.


அல்சைமர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் இந்த பானம் உதவுகிறது. கிரீன் டீயில் மெக்னீசியம், பிளேவனாய்டுகள், வைட்டமின் பி. போலேட் போன்றவை உள்ளன. இவை நாம் தினமும் விரும்பிக் குடிக்கும் பால் கலந்த தேநீரில் கிடையாது.


எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் பிளாக் காபி யையும் விரும்பி குடிக்கிறார்கள். கிரீன் டீ போலவே இந்த பானத்திலும் காபீன் உள்ளதால், எடை இழப்புக் கும் சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பிளாக் காபி, வளர்சிதைமாற்றச் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது இதனால் பசி எடுக்காமல், ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.


பிளாக் காபியில் வைட்டமின் பி2, பி3, பி5, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.


கிரீன் டீ, பிளாக் காபி இரண்டுமே வெவ்வேறு வழிகளில் எடை இழப்புக்கு உதவுகின்றன. ஆனால் இவற்றின் நன்மைகளை ஒப்பிட்டுப் பார்த்தால், பிளாக் காபியை விட கிரீன் டீதான் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் கிரீன் டீ இலைகளில் அதிக ஆகசிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் ஒருவர் இந்த இரண்டு பானத்தில் எதை தேர்வு செய்தாலும் அதை அளவுக்கு அதிகமாக குடிக்கக் கூடாது. ஏனெனில் அளவுக்கு அதிகமாக எதை எடுத்துக் கொண்டாலும் அது ஆரோக்கியத்துக்கு நன்மைக்குப் பதிலாக தீங்குதான் விளைவிக்கும்.


Source 

தினத்தந்தி தேவதை 

Keywords 

எடையை குறைக்கும் கிரீன் டீ, பிளாக் காபி vs கிரீன் டீ, weight loss drinks Tamil, best drink for weight loss, green tea or black coffee for fat loss, எடை குறைக்கும் பானங்கள், green tea benefits in Tamil, black coffee weight loss Tamil, intermittent fasting drinks Tamil


கருத்துரையிடுக

0 கருத்துகள்