Ad Code

Ticker

6/recent/ticker-posts

இன்றைய செய்திகள் 30/05/2025

 


🍒🍒அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

🍒🍒சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய தொடக்க கல்வித் துறை உத்தரவு.                                                  🍒🍒பொறியியல் மாணவர் சேர்க்கை - 2.66 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.

🍒🍒ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி

🍒🍒G.O.Ms.NO.21 தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசாணை வெளியீடு.

🍒🍒அரசு கலை - அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் மே 30-ல் வெளியீடு.

🍒🍒தொழில்முனைவோராக புதிய சான்றிதழ் படிப்பு அறிமுகம்.

🍒🍒அங்கீகாரமற்ற நர்சரி பள்ளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

🍒🍒அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் விதிகள் அதிரடியாக மாற்றியமைப்பு.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு.

🍒🍒10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் திருத்தங்கள்: தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு

👉கோப்புப் படம்

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.

👉இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், சில பள்ளிகளின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

இதையடுத்து தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழிலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தேர்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன்13-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

🍒🍒வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை சொல்வது என்ன ?

👉சென்னை:அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பாட விவரங்கள் வடிவமைத்து போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

👉இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ”அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும்.

👉இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம், பட்டிமன்றம் போன்றவை நடத்தப்பட்டு மாணவர்களின் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார்.

👉இதை செயல்படுத்தும் வகையில் மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம், மாதம், வாரம், வகுப்பு வாரியாக உள்ள பொருண்மைகளுக்கான விவரங்களை மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைக்க வேண்டும்.

👉மேலும், பள்ளிகளில் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் வாயிலாக அமல்படுத்தவும் அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வித் துறை கருத்துரு வழங்கியது. 

👉அதையேற்று அதற்கான அனுமதியை வழங்கி ஆணையிடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவங்களிலும் என்னென்ன தலைப்புகளில் வாசிப்பது, கதை சொல்லுவது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பது குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

👉அதில் தமிழக அரசின் சின்னங்கள், நெகிழியைத் தவிர்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனை மரத்தின் சிறப்பு, தேசத் தலைவர் ஜவஹர்லால் நேரு, இயற்கை அளித்த கொடை, உடலை உறுதி செய், நேர்மையின் சிறப்பு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பணிகள், எனக்குப் பிடித்த நண்பன் என பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து தமிழ் நாளிதழ் செய்தி

🍒🍒நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு:-

👉தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எளிதில் பாடத்தை புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு ஆசிரியா்கள் புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொண்டு வருகின்றனா். தற்போதைய காலச்சூழலுக்கேற்ப தொழில்நுட்பங்கள் உதவிகொண்டு மாணவா்களை மையமாக கொண்ட கற்றல் சூழல்களை வடிவமைக்கின்றனா். இதனால் மாணவா்கள் வகுப்பறையில் மிகவும் ஆா்வத்துடன் கல்வி பயில்வதுடன், அவா்களின் கற்றல் அடைவுகளும் மேம்பட்டுள்ளன.

அத்தகைய ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் விதமாக 2025-2026-ஆம் கல்வியாண்டு முதல் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் மாணவா்களின் நலனுக்காக பாடுபடும் ஆசிரியா்கள் உற்சாகம் பெறுவா். அதனுடன், அவா்களைப் பாா்த்து மற்ற ஆசிரியா்களும் இதேபோல் புதிய முறைகளில் பாடங்களை கற்றுதர முன்வருவாா்கள். இது மாணவா்களுக்கு வகுப்பறை கல்வியை சுவாரசியமாக்கும். இதன்மூலம் மாணவா்களின் கற்றல் திறன் அதிகரிக்கும்

அதன்படி, அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களில் ஒரு மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 போ் தோ்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியானவா்களை மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், அரசு கல்வியியல் கல்லூரி முதல்வா் ஆகியோா் அடங்கிய ஒரு உயா்நிலைக் குழு தோ்ந்தெடுக்கும். அவ்வாறு தோ்வான 380 ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக ரூ.1.2 லட்சம் நிதியை தேசிய ஆசிரியா் நல நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

🍒🍒மகப்பேறு விடுப்பு! அரசு பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம்! அரசாணை சொல்வது என்ன?

👉தமிழக அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மகப்பேறு விடுப்புக் காலத்தால், அரசு பெண் பணியாளர்களின் பதவி உயர்வோ பணி மூப்போ பாதிக்கப்படாது.

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதியில் நடைபெற்ற 2025 - 2026 மானியக் கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு 9 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்புக் காலம், 2021, ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து ஓராண்டாக உயர்த்தப்பட்டது.

தற்போதைய விதிகளின்படி, மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

இதனால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்தில் முடிக்க இயலாமல், அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணி மூப்பினையும் பல்லாயிரக்கணக்கான இளம்மகளிர் அரசுப் பணியாளர்கள் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இனிவரும் காலங்களில், அரசுப் பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

🍒🍒பிரபல தமிழ் நடிகர் ராஜேஷ் காலமானார்.

பிரபல நடிகர் ராஜேஷ் (75) நேற்று காலமானார்.

அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.

👉மறைந்த நடிகர் ராஜேஷ் உடல் ஜூன் 1இல் அடக்கம் செய்யப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து அவரது மகள் வரும் 31ஆம் தேதி வருவதால் மறுநாள் ஜூன் 1 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது

👉தற்போது அவரது உடல் இராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

🍒🍒மகளிர் டிஎன்பிஎல் கிரிக்கெட்

மகளிருக்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் அறிவிப்பு 

🍒🍒கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு

கமல்ஹாசனுக்கு ஆதரவாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேச்சு

கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் பேசிய நிலையில் ஆதரவு

"நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?"...கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி

"எப்போதும் கன்னட மொழி மீது காதல் கொண்டவராக இருக்க வேண்டும்"

"சர்ச்சை எழும்போது குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்"

"நட்சத்திர படங்களை மட்டும் ஆதரிக்காமல் புதியவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்"

🍒🍒பாமக இளைஞரணி சங்கத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் முகுந்தன். 

அன்புமணி ராமதாஸ் எங்கள் எதிர்காலம் என குறிப்பிட்டு, ராஜினாமா கடிதத்தை  அனுப்பினார்.

🍒🍒தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுவின் கடமை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவை சீட் தரவில்லை எனில், அதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள். நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம்.

-தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

🍒🍒பா.ம.க நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி

சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் பா.ம.க நிர்வாகிகளை அன்புமணி சந்திக்கிறார்

கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று முதல் ஜூன் 1 வரை மூன்று நாட்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை

🍒🍒கேரள கப்பல் விபத்து - மாநில பேரிடராக அறிவிப்பு

கேரள, கொச்சி அருகே MSC ELSA 3 கப்பல் கவிழ்ந்த சம்பவதில் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில பேரிடராக அறிவித்தது கேரள மாநில அரசு

🍒🍒நடிகர் ராஜேஷ் மறைவு - ரஜினிகாந்த் இரங்கல்

நெருங்கிய நண்பர் ராஜேஷ் மரண செய்தி அதிர்ச்சியளிக்கிறது, மிகுந்த மன வேதனையை தருகிறது - நடிகர் ரஜினிகாந்த்

🍒🍒முதல்வர் நேரில் அஞ்சலி

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி

🍒🍒போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல்.

🍒🍒உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை. தவளைமலை பகுதியில் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

🍒🍒எளிமை ஆளுமை திட்டத்தை நேற்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆன்லைன் மூலம் அரசு திட்டங்கள், சேவைகளை பெறும் வகையில் வசதி.

நகைக் கடன்களுக்கான ரிசர்வ் வங்கியின் வரைவு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

🍒🍒செபி முன்னாள் தலைவர் மாதவி புச் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. வழக்கை தள்ளுபடி செய்தது லோக்பால் அமைப்பு.

🍒🍒நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 69 ரூபாய் உயர்வு. கம்பு, சோளம், பருப்பு வகைகளுக்கான ஆதார விலையையும் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்.

🍒🍒கொச்சி அருகே கடலில் மூழ்கிய கப்பலால் சுற்றுச்சூழல் ஆபத்து. இழப்பீடு கோரி கப்பல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர கேரள அரசு திட்டம்.

🍒🍒ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு உலக நாடுகள் அங்கீகாரம். இந்தியாவுக்கு ஆதரவு பெருகி வருவதாக ஜெய்சங்கர் விளக்கம்.

🍒🍒ஹமாஸ் இயக்கத்தின் காசா பகுதி தலைவர் முகம்மது சின்வர் கொல்லப்பட்டதாக தகவல். இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

🍒🍒ரூ.2. ,ரூ.5 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை

👉ரிசர்வ் வங்கியின் 2024-25 ஆண்டு அறிக்கை நேற்று (மே 29) வெளியானது. அதன்படி, 'பண அச்சடிப்பு செலவு ரூ.6,372.8 கோடியாக உயர்ந்துள்ளது. பண மதிப்பு 6% அதிகரித்து, ரூ.500 நோட்டுகள் 40.9% புழக்கத்தில் உள்ளன. ரூ.2000 நோட்டுகளில் 98.2% வங்கிக்கு திரும்பியுள்ளது. நாணயங்கள் மதிப்பில் 9.6% மற்றும் e-rupee மதிப்பில் 334% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.2, ரூ.5 நோட்டுகள் அச்சிடப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒சபரிமலையில் வரும் 4ம் தேதி நடை திறப்பு

👉சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல காலம் மற்றும் மகர விளக்கு பூஜை தவிர, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. மேலும் பிரதிஷ்டை தினத்திற்கும் நடை திறப்பது வழக்கம். இந்தாண்டு பிரதிஷ்டை தினம் வரும் 5ம் தேதி என்பதால், 4ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்று 5ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

🍒🍒அதிபர் டிரம்புக்கு கண்டனம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு US பெடரல் வர்த்தக நீதிமன்றம் தடை விதிப்பு.

உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிஉயர் வரி விதிப்புக்கு Manhattan வர்த்தக நீதிமன்றம் தடை.

அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் நீதிமன்றம் கடும் கண்டனம்.

ட்ரம்ப்பின் இந்த வரி விதிப்புதான் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவியது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

-ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

🍒🍒7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட 7வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

பல்வேறு நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து, இந்தஆணையம் ஆய்வு செய்து 2026 ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளாக அறிக்கையை சமர்ப்பிக்கும்.

🍒🍒ஒரே ஆண்டில் 23,953 வங்கி மோசடிகள்.

2024-25ல் நாடு முழுவதும் 23,953 வங்கி மோசடி சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆர்.பி.ஐ அறிவிப்பு.

தனியார்த்துறை வங்கிகளில் 14,233 மோசடிகளும், பொதுத்துறை வங்கிகளில் 6,935 Technology நடந்துள்ளன.

ஒட்டுமொத்த மோசடி தொகை ரூ.36,014 கோடி என தெரிவிப்பு.

🍒🍒அமைந்தகரையில் உரிய அனுமதியின்றி உடல் எடையைக் குறைப்பதாக விளம்பரப்படுத்தி, இயங்கிவந்த (VLCC) தனியார் மருத்துவமனையை உடனடியாக மூட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரண்யா என்பவர் தொடர்ந்த வழக்கில் இழப்பீடாக ரூ.5 லட்சம், வழக்கு செலவாக ரூ.5,000 வழங்க உத்தரவு.

2023ம் ஆண்டு நவம்பர் மாதம் VLCC மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி தற்போதும் சிகிச்சையில் உள்ளார்.

🍒🍒இஸ்ரேலுக்கு கடும் கண்டனம். காசா பகுதியில் பொதுமக்களை குறிவைப்பதை ஏற்க முடியாது.

இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்.

🍒🍒நெடுநாள் கழித்து திமுக குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

👉"மதுரையில் திமுகவை பலமான கட்சியாக உருவாக்கியவர் முன்னாள் மேயர் முத்து என பாராட்டி வீடியோ".

"முன்னாள் மேயர் முத்துவின் சிலையை எனது தம்பி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்"

-மு.க.அழகிரி.

🍒🍒பல் கிளீனிக்கில் 8 பேர் பலி - வெளியான அதிர்ச்சி தகவல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023ஆம் ஆண்டில் தனியார் பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதில் 8 பேர் பலி.

தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்களை கொண்ட குழு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்.

🍒🍒உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்.

என். வி.அஞ்சாரியா, விஜய் பிஸ்னோய், ஏ.எஸ்.சந்த்ருகரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு

🍒🍒"கமல்ஹாசன் கருத்துக்கு ஆதாரங்கள் உள்ளன.அவரின் கருத்து சரியானது

 -சபாநாயகர் அப்பாவு பேட்டி

திராவிட குடும்பத்தின் முதல் மொழி தமிழ் எனவும், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்துதான் பிறந்துள்ளதாகவும் ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து கூறியுள்ளார்.

கமல்ஹாசன் கருத்துக்கு ஆதாரங்கள் உள்ளன.

அவரின் கருத்து சரியானது”

🍒🍒விழுப்புரம் ஏ.கோவிந்தசாமி நினைவிடத்தில் உள்ள நூலகத்திற்கு தனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சம் மதிப்பில்,

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களுக்காக 375 புத்தகங்களை, மாவட்ட ஆட்சியர் அப்துல் ரஹ்மானிடம் வழங்கினார் விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா.

🍒🍒ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள்.. இப்போது எங்களுடைய நேரம்.. இ.பி.எஸ். சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்.. பிரேமலதா திட்டவட்டம்.

🍒🍒11 நகராட்சிகளின் தரம் உயர்வு.

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு.

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம் பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன🍒🍒கிரீஸ் நாட்டில் இருந்து சாதகமான உணர்வோடு திரும்புவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி கருத்து

👉பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தைப் பற்றி கூறி ஆதரவைப் பெற்று வருவதாக விளக்கம்.

🍒🍒கீழடி ஆய்வறிக்கை - மத்திய அரசு விளக்கம்

கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் மறுப்பு.

தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி ஆய்வறிக்கையில் சில திருத்தங்கள் செய்யும்படி மட்டுமே கோரினோம்

தொல்லியல்துறை இயக்குநர் அறிவுறுத்திய திருத்தங்களை ஆய்வாளர் செய்யவில்லை என மத்திய அரசு விளக்கம்.

கீழடி தொடர்பான செய்திகளை முழு ஆய்வுக்குப் பிறகு வெளியிட வேண்டும் எனவும் வேண்டுகோள்.

🍒🍒அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் விலகினார். ‘DOGE’ அமைப்பில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

🍒🍒காணொளி காட்சி வாயிலாக கலைஞர் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.

👉முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள கலைஞர் பன்னாட்டு மையத்திற்கு நேற்று ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.5000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியவை இங்கு அமைய உள்ளன.

🍒🍒சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.71,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,895-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

🍒🍒தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த, தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 200 கருத்தடை மருத்துவர்கள் நியமனம்.

கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கு கறுத்தடை அறுவை சிகிச்சை செய்வதுடன், வெறிநோய் தடுப்பூசியும் செலுத்த கால்நடைத்துறை அதிகாரிகள் முடிவு.

இந்த பணிகளை வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது.                              என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்,                                                        மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

கருத்துரையிடுக

0 கருத்துகள்