அனைத்து ஆசிரியர்களும் வணக்கம் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பிரிவில் அலகு 1 இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு பாடத்தில் மாணவர்களுக்கு சொல்லவேண்டிய முக்கிய கருத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் பாட சம்பந்தப்பட்ட வீடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது இறுதியில் Notes of lesson கொடுக்கப்பட்டுள்ளது.
அலகு -1 புவியியல்
இந்தியா அமைவிடம் நிலத் தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு
மாணவர்களே நாம் இன்று நம் புத்தகத்தின் இரண்டாம் பிரிவாக இருக்கும் புவியியல் பற்றி பாடங்கள் மொத்தம் 7. அவற்றில் இந்தியாவிற்கு 5 பாடங்கள் நம் தமிழ்நாட்டிற்கு இரண்டு பாடங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முதல் பாடமாக இந்தியா அமைவிடம் நிலத் தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு. ஒன்பதாம் வகுப்பில் பூமியின் அமைப்பு முதல் பேரிடர் மேலாண்மை வரை நிலக்கோளம்(அகச்செயல்பாடுகள்,) நிலக்கோளம் ( புறச்செயல்பாடுகள்) வளிக் கோளம் ( காற்று. வானிலை காலநிலை) நீர்க்கோளம்( கடல்கள்) உயிர்க்கோளம்( விலங்குகள்.) தாவரங்கள் மனிதனும் சுற்றுச்சூழலும் ( நாம இன்று வளர்ச்சி என்ற பெயரில் பூமியை நாசப்படுத்தும் நம் செயல்பாடுகள்) நில வரைபடத் திறன்கள். ( பூமியின் அமைவிடங்களை வெளிக்கொணர்தல் மற்றும் அறிதல்) கடைசியாக பேரிடர் மேலாண்மை என்றால் என்ன ?அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்வது. என்று பல்வேறு தலைப்புகளில் நாம் விரிவாக பார்த்தோம் தற்போது பத்தாம் வகுப்பில் நாம் ஒரு மனிதனுக்கு PARTS OF BODY என்று தலை, கை,, கால்கள், வயிறு, பாதம் என்று இருப்பது போல் நம் இந்தியாவின் இயற்கை அமைப்பு என்ற PARTS OF BODY தலை போன்ற வடக்கு மலைகளையும் மார்பு போன்ற வடபெரும் சமவெளிகளையும் வயிறு போன்ற தீபகற்ப பீடபூமிகளையும் கால்கள் போன்ற கடற்கரை சமவெளிகளையும் பாதங்கள் போன்ற இந்திய தீவுகளையும் நாம் இன்று விரிவாக பார்க்கலாம்.
இங்கு நாம் இந்தியாவின் நிலம் மற்றும் நீர் எல்லைகள், இந்தியா ஒரு துணைக்கண்டம், இந்தியாவின் அமைவிடம், பரப்பளவு , இந்திய திட்ட நேரம் என்று அறிமுகமாக நம் இந்தியாவை பற்றி அறியலாம். அடுத்ததாக இந்தியாவின் முக்கிய இயற்கை அமைப்பு பிரிவுகள் என்ற தலைப்பில் வடக்கு மலைகள் என்று பார்க்கும்போது இமயமலையின் மூன்று பெரும் பிரிவுகளை நாம் பார்க்கலாம். அவைகள் முறையே ட்ரான்ஸ் இமயமலைகள், மத்திய இமய மலைகள், பூர்வாஞ்சல் குன்றுகள் என்று அழைக்கப்படும் கிழக்கு இமய மலைகள் இவைகள் பற்றி பார்க்கும் போது இங்கு உள்ள கணவாய்கள் சிகரங்கள் ஆறுகள் மற்றும் இமயமலை முக்கியத்துவம் பற்றி நாம் விரிவாக காணலாம். அடுத்ததாக வட பெரும் சமவெளிகள் என்று பார்க்கும்போது பாபர் சமவெளி, தராய் மண்டலம், பாங்கர் சமவெளி, கங்கை மற்றும் பிரம்மபுத்ரா டெல்டா பகுதிகள், ராஜஸ்தான் சமவெளி, கங்கை சமவெளி, பிரம்மபுத்திரா சமவெளி என்று பார்க்கலாம். தீபகற்ப பீடபூமிகள் என்று பார்க்கும்போது தக்காண பீடபூமி மாள்வா பீடபூமி சோட்டா நாக்பூர் பீடபூமி பற்றியும் நாம் பார்க்கலாம். மற்றும் இந்திய புறத் தீபகற்பத்தில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளையும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்க்கலாம் கடற்கரை சமவெளிகள் என்று பார்க்கும்போது கிழக்கு கடற்கரை சமவெளிகள் மற்றும் மேற்குக் கடற்கரை சமவெளிகள் மற்றும் கங்கை சமவெளி என்று பார்க்கலாம் இந்தியாவின் தீவுக் கூட்டங்கள் என்று பார்க்கும்போது அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவுகளையும் வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் நாம் பார்க்கலாம் இந்தியாவின் வடிகால் அமைப்பு என்று பார்க்கும்போது இமயமலை ஆறுகள் ஆன சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா தீபகற்ப ஆறுகளான நர்மதை, தபதி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி போன்றவற்றையும் நாம் இங்கு பார்க்கலாம் இங்கு இமயமலை ஆறுகள் மிகவும் நீளமானவை மற்றும் அகலமானவை. வருடம் 365 நாட்களும் தண்ணீர் வரும். படகு போக்குவரத்து, போன்ற சிறப்புக்கள் உண்டு. பட் நீர் மின் உற்பத்தி செய்ய முடியாது. தீபகற்ப ஆறுகள் பருவ மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வரக்கூடிய ஆறுகள். பட் இந்த ஆறுகளில் நீர் மின் உற்பத்தி செய்ய முடியும். பல்நோக்கு திட்டம் என்ற அணைக்கட்டுகள் இங்கு அதிகமாக உள்ளன. கடைசியாக மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் என்று பார்க்கும்போது நர்மதை தபதி போன்ற ஆறுகளை பார்க்கலாம் இந்த ஆறுகள் டெல்டாக்களை உருவாக்காமல் மலை இடுக்குகளில் வந்து அரபிக் கடலில் கலக்கின்றன. கடைசியாக கங்கை ஆறு சிறப்புகள் என்று பார்க்கும் போதுஉற்பத்தி -இமயமலை --- கங்கோத்ரி.
*மிகப்பெரிய வடிகால் அமைப்பு
*மக்களடர்த்தி அதிகம்
*நீளம் சுமார் 2525 கி.மீ
*உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்குகிறது
*விளையும் பயிர்கள்: கரும்பு, சணல்,
துணை ஆறுகள் : யமுனை கோசி இத்துடன் நம் புவியியல் முதல் பாடம் நிறைவு பெறுகிறது... இதில் நாம் நம் இந்தியாவின் இயற்கை அமைப்பு பிரிவிலுள்ள அனைத்தையும் பார்த்து உள்ளோம்
Unit -1 Geography
India's location, topography and drainage system
Students, today we have a total of 7 lessons about geography, which is the second section of our book. Out of them, 5 lessons are divided into 5 lessons for India and 2 lessons for our Tamil Nadu. The first lesson is India's location, topography and drainage system. In the ninth grade, from the structure of the earth to disaster management, the earth (internal processes,) the earth (external processes) the atmosphere (air. weather climate) the water sphere (oceans) the biosphere (animals.) plants, humans and the environment (our activities that destroy the earth in the name of development today) map skills. (Uncovering and knowing the locations of the earth) Finally, what is disaster management? How do we face it? We have seen in detail on various topics Now in the tenth grade, just as a human being has PARTS OF BODY such as head, hands, legs, stomach, feet, we will see in detail the natural structure of our India, the northern mountains like the head, the northern plains like the chest, the peninsular plateaus like the stomach, the coastal plains like the legs, and the Indian islands like the feet. Here we can learn about our India as an introduction to the land and water borders of India, India is a subcontinent, the location, area of India, and the Indian planning time.
Next, under the title of the main natural structure divisions of India, when we look at the northern mountains, we can see the three major divisions of the Himalayas. They are the Trans Himalayas, Central Himalayas, Eastern Himalayas called Purvanchal Hills respectively When we look at these, we can see in detail the passes, peaks, rivers and the importance of the Himalayas here. Next, when we look at the Northern Great Plains, we can see the Babur Plain, Terai Zone, Bhangar Plain, Ganga and Brahmaputra Delta regions, Rajasthan Plain, Ganga Plain, Brahmaputra Plain. When we look at the Peninsular Plateaus, we can also see the Deccan Plateau, Malwa Plateau, Chota Nagpur Plateau. And we can see the Western Ghats and Eastern Ghats in the Indian subcontinent When we look at the coastal plains, we can see the East Coastal Plains and the West Coastal Plains and the Gangetic Plain When we look at the archipelagos of India, we can see the Lakshadweep Islands in the Arabian Sea We can also see the Andaman and Nicobar Islands in the Bay of Bengal When we look at the drainage system of India, we can see the Himalayan rivers Indus, Ganges, Brahmaputra We can also see the peninsular rivers Narmada, Tapti, Mahanadi, Godavari, Krishna, Kaveri, Vaigai, Thamirabarani etc.
The Himalayan rivers here are very long and wide. Water comes 365 days a year. There are special features like boat transport. But cannot generate hydroelectric power. Peninsular rivers are rivers that can only receive water during the monsoon. But can generate hydroelectric power in these rivers. There are many multi-purpose dams here. Finally, when we look at the rivers flowing towards the west, we can see rivers like Narmada and Tapti These rivers do not form deltas and flow into the Arabian Sea through mountain passes. Finally, when we look at the special features of the Ganges River, we see that it originates from the Himalayas --- Gangotri.
+Largest drainage system
+Highest population density
+Length is about 2525 km
+Forms the largest delta in the world
+Crops grown: Sugarcane, Jute,
Tributaries: Yamuna, Kosi With this, our first lesson in geography is completed... In this, we have seen everything in the natural structure section of our India
பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள்
அன்புடன்
மாணவ நண்பன் சமூக அறிவியல் பிரியன் முனீஸ்வரன்.
10th Social Geography Unit-1 Notes of lesson
- இந்தியாவின் அமைவிடம்
- இயற்கை பிரிவுகள்
- இந்தியாவின் வடிகால் அமைப்பு
- உலக வரைபடத்தில் இந்தியாவை காண்பித்து பரவல்களை விளக்குதல்.
- இந்திய ஆறுகள் தோற்றம் அது பாயும் மாநிலங்கள் மற்றும் கடல்களில் கலக்கும் விதம் பற்றி விளக்குதல்.
- கருத்து வரைபட விபரங்களை தொகுத்தல்.
- இந்திய வரைபடத்தில் அண்டை நாடுகளை குறிக்கச் செய்தல்.
- இந்திய நிலவரைபடத்தில் நில வரைபட திறன்களின் குறியீடுகள் பயன்படுத்தி மலைகள், சமவெளிகள், பீடபூமிகள், கடல்கள் குறித்து வரச் செய்தல்.
0 கருத்துகள்