மாநில ஆள் சேர்ப்பு நிலையம்
170, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை கீழ்ப்பாக்கம்
சென்னை 600010
இணையதள முகவரி: www.tncoopsrb.in
அறிவிக்கை எண்: 1/2025 : 06.08.2025
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் கீழ்க்காணும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில்/ வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும்தகுதிபெற்றவிண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.tncoopsrb.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 29.08.2025 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
அ. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
ஆ. இத்தெரிவுக்கு நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்குப் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு மற்றும் இனச் சுழற்சி முறை ஒட்டு மொத்த நியமனத்திற்கும் பின்பற்றப்படும்.
இ. மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் பெண்கள், ஆதரவற்ற விதவைகள். முன்னாள் இராணுவத்தினர், தமிழ் வழியில் பயின்றோர். மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு விதிகள் நடைமுறையில் உள்ள அரசு ஆணைகளின்படி பின்பற்றப்படும்.
ஈ. மேற்படி சம்பள விகிதம் மற்றும் இதரப் படிகள் மேற்குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் பணிநிலை குறித்த சிறப்புத் துணைவிதிகளுக்குட்பட்டு அமையும்.
உ. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் துணைவிதிகளுக்குட்பட்டு பணியாற்ற வேண்டும்.
ஊ.தேர்வில் கலந்துகொள்ளும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள் தேர்வு நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்படும்.
2. தகுதிகள்:
அ.வயது
1. விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் (அதாவது 01.07.2007 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).
ஆ) கல்வித் தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree) (10+2+3 முறையில்)மற்றும் கூட்டுறவுப் பயிற்சி
*பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் (SSLC) மேல் நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்.
1. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி (Diploma in Cooperative Management).
2. சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் (Higher Diploma in Cooperative Management).
பின்வரும் பட்டப் படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சிபெறுவதிலிருந்துவிலக்களிக்கப்படுகிறார்கள்.
*வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.
*பி.காம் (ஆனர்ஸ்) கூட்டுறவு
*எம்.காம் (கூட்டுறவு)
*எம்.ஏ (கூட்டுறவு)
*பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும். கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு.
*பி.ஏ (கூட்டுறவு)
*பி.காம் (கூட்டுறவு)
பி.ஏ(கூட்டுறவு), பி.காம்(கூட்டுறவு) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள், கணக்குப்பதிவியல் (Book Keeping), வங்கியியல்(Banking). கூட்டுறவு (Cooperation), தணிக்கை (Auditing) ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினை முடித்திருக்க வேண்டும்.
*2024 -25 ஆம் ஆண்டில் 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி மற்றும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நடத்தப்படும் முழு நேர கூட்டுறவுப் பயிற்சி பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினைப் பெற்று வருவதற்கான சான்றிதழினை (Bonafide Certificate) சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். கூட்டுறவுப் பயிற்சியினை வெற்றிகரமாகப் படித்து முடித்ததற்கான சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே இவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
*விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப் படிப்பின்போது தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
*கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும் (Knowledge in Computer Application).
இ) பொது
*விண்ணப்பதாரர்கள் பிற மாநிலத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பினும் இதர வகுப்பினராகவே (OC) கருதப்படுவர்.
*"ஆதரவற்ற விதவை" விண்ணப்பதாரர்கள் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது உதவி / சார் ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விவாகரத்து பெற்றவர். கணவனால் கைவிடப்பட்டவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்படமாட்டார். மறுமணம் புரிந்தவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்பட மாட்டார்.
3. விண்ணப்பக் கட்டணம்
அ) விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர். அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250/- ஆகும்.இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- ஆகும்.
இணையவழி முறை(Online method)
*விண்ணப்பக் கட்டணத்தை Online மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
*இணைய வழிக் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கும்தோல்விகளுக்கும் மாநில ஆள்சேர்ப்பு நிலையம் பொறுப்பாகாது.
ஆ) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை www.tncoop.srb.in என்ற இணையதளம் மூலம் 29.08.2025 அன்று மாலை 5.45 மணி வரை பதிவேற்றம் செய்யலாம்.
இ) கட்டணம் செலுத்தும் முறையை எந்த நேரத்திலும் மாற்றியமைக்கும் உரிமை மாநில ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு உண்டு.
ஈ) ஒருமுறை செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டணம் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது.
4. விண்ணப்பிக்கும் முறை
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் www.tncoop.srb.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் கீழ்க்கண்டவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அ) விண்ணப்பப் படிவங்கள் இணையதளம் மூலம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆ) விண்ணப்பப் படிவங்களுடன் கீழே அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
*i) விண்ணப்பதாரரின் புகைப்படம் 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format)
ii) விண்ணப்பதாரரின் கையெழுத்து 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format)
*iii) விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file).
iv) கூட்டுறவு பட்டயப் பயிற்சி சான்றிதழ் -200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
v) கூட்டுறவுப் பட்டயப் பயிற்சியினை தற்போது மேற்கொண்டு வருபவர்கள் தொடர்புடைய கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்திடமிருந்து பெற்ற அதற்கான தகுதிச் சான்றிதழ் (Bonafide Certificate) -200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
vi) பி.எ(கூட்டுறவு), பி.காம்(கூட்டுறவு) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள் தங்களது கணக்குப்பதிவியல் (Book Keeping), வங்கியியல்(Banking), கூட்டுறவு (Cooperation), தணிக்கை (Auditing) ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றதற்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை (Consolidated mark list) பதிவேற்றம் செய்ய வேண்டும்- 600 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
vii) மாற்றுத் திறனாளிச் சான்றிதழ் 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
viii) ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
** ix) முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ் 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
X) பட்டப் படிப்பினை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM Certificate)- 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
*xi) பட்ட படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் 200kb அளவுக்கு மிகாமல் (pdf file)
மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் (*) குறியீடு செய்யப்பட்டவை அனைத்தையும்(**) குறியீடு செய்யப்பட்டவைகளில் தங்களுக்கு எது பொருந்துமோ அந்த ஆவணங்களை மட்டும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது, விண்ணப்பதாரர் தவறான தகவல்களை அளித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறானவை என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் அவ்விண்ணப்பதாரர் தேர்விலிருந்து நிராகரிக்கப்படுவதுடன், மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் இனி வருங்காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராக அறிவிக்கப்படுவார்.
ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிய மேலும், அலுவலருக்குக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அவ்விண்ணப்பதாரர் வங்கி/சங்கத்தின் உதவியாளர் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், பணியில் சேருவதற்கு முன்னர் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிய அலுவலரிடமிருந்து தடையில்லாச் சான்று (NOC) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
5. எழுத்துத் தேர்வு
அ) மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முறையாக விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
எழுத்துத் தேர்வு சென்னையில் நடைபெறும். எழுத்துத் தேர்வு எந்த இடத்தில் நடைபெறும் என்பது எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்படும். எழுத்துத் தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் (e-mail) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். நுழைவுச் சீட்டுடன் வராத விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். எழுத்துத் தேர்வுக்கு தனது சொந்த செலவில் விண்ணப்பதாரர் கலந்து கொள்ள வேண்டும்.
ஆ) எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு. பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன். 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
இ) மேற்கண்ட எழுத்துத் தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் (Syllabus) மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
ஈ) எழுத்துத் தேர்வு முடிந்தவுடன் எழுத்துத் தேர்வுக்கான வினா விடைகள் (Key answers) மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட வினா விடைகள் (key answers) தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று தினங்களுக்குள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு எழுத்துப் பூர்வமாக அல்லது இ-மெயில்(e-mail) மூலமாகத் தெரிவிக்க வேண்டும். மாநில ஆள்சேர்ப்பு நிலையக் கூட்டத்தில் அது பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
6. நேர்முகத் தேர்வு
I.அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைப் போல் L இரண்டு மடங்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தங்கள் சொந்த செலவில் கலந்து கொள்ள வேண் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பென் அடிப்படையிலும், நடைமுறையிலுள்ள அரசாணைகளின்படி இட ஒது மற்றும் இனச்சுழற்சி அடிப்படையிலும் நேர்முகத் தேர்வி அழைக்கப்படுவார்கள்.
II.நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்படவுள்ள நபர்களின் பெயர்ப் பட்டியல் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.
iii. நேர்முகத் தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் (e-mail) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்களை, விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அழைப்புக் கடிதத்துடன் வராத விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
iv. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்களிடம். அவர்கள் எந்த சங்கத்திற்கு எந்த வரிசையில் ஒதுக்கீடு செய்யப்பட விரும்புகிறார்கள் என்ற முன்னுரிமை விருப்பம் (option) பெறப்படும். நேர்முகத் தேர்வு முடிவடைந்த பின்னர். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களை கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது விண்ணப்பதாரர்கள் தெரிவித்த முன்னுரிமை, பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் வகுப்புவாரி இனச் சுழற்சி கவனத்தில் கொள்ளப்படும்.
V. எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும்.
7. தெரிவு செய்யப்படும் முறை
அ) விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு. இனச் சுழற்சி முறை. அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கணினி மூலம் சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.
மேற்குறிப்பிட்ட முறைப்படி விண்ணப்பதாரர்களை சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது அதிக மொத்த மதிப்பெண் பெற்றவர்கள் இனச்சுழற்சியைப் பின்பற்றி அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்த சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவர். குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு இனச்சுழற்சி அடிப்படையில் அவர்கள் விரும்பிய சங்கத்திற்கு ஒதுக்கீடு கிடைக்காமல் போகலாம். அத்தகைய நேர்வில் அந்தச் சமயத்தில் அவர்களது இனச்சுழற்சிக்கு எந்தச் சங்கத்தில் காலிப் பணியிடம் இருக்கிறதோ அந்தச் சங்கத்திற்கு அவர் ஒதுக்கீடு செய்யப்படுவார்.
ஆ) விண்ணப்பதாரர்களின் தகுதி குறித்த அனைத்துச் சான்றிதழ்களையும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனைத்துச் சான்றிதழ்களையும் சரி பார்த்த பின்னரே தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.
இ) மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் தேர்வு செய்யப்படும் நபர்களுக்குத் தெரிவு மற்றும் சங்கத்திற்கு ஒதுக்கீடு ஆணை (Selection and allotment order) மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் வழங்கப்படும். அவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட சங்கத்தின் தகைமை வாய்ந்த அலுவலரால் பணியமர்வு ஆணை (Appointment order) வழங்கப்படும்.
ஈ)முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர்களுக்கு முன்னாள் இராணுவத்தினருக்கான இட ஒதுக்கீடு முறை பொருந்தாது.
உ) தெரிவு செய்யப்படும் மாற்றுத் திறனாளிகள், தங்களது குறைபாடு, தாங்கள் தெரிவு செய்யப்படும் பதவிகளுக்குரிய பொறுப்புகளை முழுத்திறனுடன் நிறைவேற்றுவதற்குத் தடையாக இருக்காது என்பதற்கான சான்றிதழை மருத்துவக் குழுவிடம் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.
8. இதர நிபந்தனைகள்
1. நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளார் என மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் தெரிவு செய்யப்பட்ட ஒரு விண்ணப்பதாரர் அப்பணிக்கென நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் அனைத்தையும் முழுமையாகப்பெற்றிருக்கவில்லையென பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் அவரது தேர்வு மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் இரத்து செய்யப்படும்.
IL நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு அவ்வாறு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டதை மட்டுமே காரணமாக வைத்து பணி நியமனம் கோர உரிமை கிடையாது.
III. மேற்படி பணியிடங்களுக்கான தேர்வு குறித்து ஏதேனும் முறையீடு செய்வதாயின் இறுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத் தலைவரிடம் உரிய காரணங்களுடன் மேல் முறையீடு செய்ய வேண்டும். அதற்குப் பின் பெறப்படும் முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது.
IV. காரணம் எதுவும் தெரிவிக்காமல் இந்த அறிவிக்கையை இரத்து செய்வதற்கு / திரும்பப் பெறுவதற்கு / திருத்துவதற்கு / கெடு தேதியை நீட்டிப்பதற்கு மாநில ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு உரிமையுண்டு.
V. விண்ணப்பதாரர்கள் அவர்களது சொந்த நலன் கருதி அவர்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக "விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை" கவனமாகப் படித்து தேர்வு செய்யப்படுவதற்குரிய நிபந்தனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
VI. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நேரும் போது, விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வதில் தாமதமோ அல்லது தொழில் நுட்பச் சிக்கல்களோ எழ வாய்ப்புள்ளது.
மேற்கூறிய தொழில்நுட்பக் காரணங்களால் அல்லது வேறு காரணங்களால், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களைக் கடைசிக் கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு மாநில ஆள்சேர்ப்பு நிலையம் பொறுப்பாகாது.
VII. விண்ணப்பத்தினைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரத்திற்குப் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான வசதி உடனடியாக நிறுத்தப்படும்.
VIII. விண்ணப்பக் கட்டணம் செலுத்தியது தொடர்பான பிரச்சினை குறித்து ஏதேனும் முறையீடு செய்வதாயின் அப்பிரச்சினை ஏற்பட்ட நாட்களுக்குள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்திடம் உரிய காரணங்களுடன் முறையீடு செய்ய வேண்டும். அதற்குப் பின் பெறப்படும் முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது.
IX. விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு 044-28364858 என்ற மாநில ஆள்சேர்ப்பு விண்ணப்பதாரர்கள் நிலையத்தின் உதவி மைய எண்ணிலோ அல்லது srb.rcs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
தலைவர்.
மாநில ஆள்சேர்ப்பு நிலையம்,
0 கருத்துகள்