செவ்வாய்க்கோளுக்கு " பயனீர் - 3 " என்ற ஆளில்லா விண்கலனை ஆய்வுக்காக அனுப்பினார்கள்
" நாசா " அறிவியலாளர்கள். செவ்வாய்க்கோளில் உயிரினங்கள் இருந்தால் அவர்கள் பேசும் மொழியைப் பதிவு செய்யவும் , அவற்றுடன் உரையாடவும், குறிப்பிட்ட ஒரு மொழியைப் பதிவு செய்து அவர்கள் அனுப்பினார்கள். அப்படி அவர்கள் பதிவு செய்து அனுப்பிய மொழி எது தெரியுமா?
நம் தமிழ்மொழியே ஆகும்.
உலகிலேயே மிகத் தொன்மையான மொழியாகவும் , இயற்கை அமைப்பில் உருவான மொழியாகவும் தமிழ்மொழி இருப்பதால் , ஒருவேளை வேற்றுக் கோள்களில் எங்கேனும் மனிதர்கள் வாழ்வதாக இருந்தால் அவர்களும் தமிழ் பேசுபவர்களாகவே இருப்பார்கள். அப்போது அவர்களை எளிதாகத் தொடர்பு கொள்ளலாம் எனக் கருதியே தமிழ் மொழியை ஒலிதம் ( ஆடியோ) மூலமாக ஒலிப்பதிவு செய்து செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியதாக " நாசா " அறிவித்தது. உலகில் எந்தக் கோளில் மனிதன் தோன்றினாலும் அவன் பேசும் முதல் மொழியாக தமிழாகவே இருக்கும் என்பதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதற்கு இதுவே நல்ல சான்றாகும் .
செவ்வாய்க்கோளில் மூன்று பெரிய பாறைகளைக் கண்டறிந்தது நாசா . அவற்றில் ஒரு பாறைக்கு " பொங்கல் " என்று பெயர் சூட்டியது நாசா. தமிழர்கள் கொண்டாடும் முதன்மை விழாவும் , உலகில் பழமை வாய்ந்த இயற்கையைப் போற்றும் விழாவான " பொங்கல் விழாவுக்கு " உரிய மதிப்பளிக்கும் வகையிலேதான், செவ்வாய்க் கோளில் கண்டறிந்த பாறை ஒன்றிற்குப் "பொங்கல் " என்ற பெயரைச் சூட்டியதாகச் சொன்னது நாசா .
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான " நாசா " செவ்வாய்க்கோள் பற்றி ஆய்வு செய்ய பல விண்கலன்களை அனுப்பியுள்ளது. அதில் ஒரு விண்கலம் செவ்வாய்க் கோளில் உள்ள மலைகளைக் கண்டறிந்தது. அம்மலைகளில் ஒன்றிற்கு " நீலகிரி " என்ற பெயரைச் சூட்டியது "நாசா". உலகில் உள்ள பழமையான மலைகளுள் ஒன்றுதான் "நீலகிரி" .
பழமை வாய்ந்த மலையான நீலகிரியை பெருமைப்படுத்தவே செவ்வாய்க் கோளில் கண்டறிந்த மலைகளுல் ஒன்றிற்கு நீலகிரியின் பெயரைச் சூட்டியதாக அறிவித்தது நாசா.
மண்ணுலகில் வரலாறு படைத்த நம் தமிழ்மொழி, இப்போது விண்ணுலகிலும் சாதனை படைக்கத் தொடங்கிவிட்டது .
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 கருத்துகள்