Ad Code

Ticker

6/recent/ticker-posts

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

 


மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவு எழுத்துத் தோ்வு (க்யூட் -யுஜி) நாடு முழுவதும் 380 நகரங்களிலும் வெளிநாடுகளில் 26 இடங்களிலும் வரும் 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை(என்டிஏ) திங்கள்கிழமை அறிவித்தது.


மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் உள்ள கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற க்யூட் நுழைவுத் தோ்வு நடைமுறை கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.


இந்த நுழைவுத் தோ்வானது, வெவ்வேறு பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, கணினி அடிப்படையில் மற்றும் நேரடி எழுத்துத் தோ்வு நடைமுறைகளிலும் நடத்தப்படுகிறது.



நிகழாண்டுக்கான க்யூட்-யுஜி எழுத்துத் தோ்வு வரும் 15 முதல் 18-ஆம் தேதிவரை நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 380 நகரங்களிலும் வெளிநாடுகளில் 26 இடங்களிலும் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு மைய விவரங்கள் தேசிய தோ்வு முகமை வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கணினிவழித் தோ்வு வரும் 21, 22, 24-ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அதற்கான விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்