மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம் பத்தாம் வகுப்பு வரலாறு பாடத்தில் மொத்தம் பத்து பாடங்கள் உள்ளன. தற்போது இந்த பத்து பாடங்களில் முதல் பாடம் முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும் என்ற பாடத்தின் ஒரு சிறிய தொகுப்பை நாம் பார்க்கலாம். தாங்கள் ஒன்பதாம் வகுப்பில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனி ஆதிக்கம் என்ற 11 வது பாடத்தை படித்திருப்போம் அந்தப் பாடத்தின் விளைவே முதல் நான்கு பாடங்களாக இங்கு வரலாறு பிரிவில் அமைந்துள்ளது முதல் பாடமாக முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனி ஆதிக்கத்தின் விளைவாக ஐரோப்பிய வல்லரசு நாடுகளிடையே யார் பெரியவன் யார் நாடு வலிமை மிக்க நாடு என்ற போட்டி எழுந்த போது அது முதல் உலகப்போராக வெடித்தது அதற்கான காரணம் என்று பார்த்தால்
👍ஐரோப்பிய நாடுகள் கூட்டணி சேர்த்தது
👌தங்கள் உற்பத்தி பொருட்கள் விற்க சந்தை தேவைப்பட்டது
👌 தங்கள் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்கள் தேவைக்காக நாடுகளை கைப்பற்ற நினைத்தது
🦆 எனது நாடே பெரியது நானே வலிமை மிகுந்தவன் என்ற ஆதிக்க மனப்பான்மை வளர்ந்தது
👍 ஜெர்மனியின் நாடுகள் பிடிக்கும் ஆக்கிரமிப்பு கொள்கை. பால்கன் பகுதியில் ஏற்பட்ட ஏகாதிபத்தியம்
💪🏽 எல்லாவற்றிற்கும் மேலாக ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்ட் இளவரசி இஷபெல்லா படுகொலை முதல் உலகப் போரின் காரணங்களாக அமைந்தது
🙏 இப்போரின் போக்காக ஆங்காங்கே மைய நாடுகளும் ( ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி துருக்கி பல்கேரியா) நேச நாடுகளும் ( இங்கிலாந்து பிரான்ஸ் ரஷ்யா இத்தாலி அமெரிக்கா பெல்ஜியம் ருமேனியா செர்பியா கிரீஸ்) போரிட்டு வந்தன. இப்போரானது பிரெஞ்சு முனைப்போர்,டானன்பர்க்,மார்ன் போர்,வெர்டன் போர், ரஷ்ய முனைப்போர், மத்திய கிழக்கு பகுதிகளில் போர் தூர கிழக்கு பகுதிகளில் போர் பால்கன் பகுதிகளில் போர் போன்ற இடங்களில் வெளிப்பட்டது.
🌷 போரில் ஈடுபட்ட மைய மற்றும் நேச நாடுகளுக்கு வெற்றியும் தோல்வியும் கிடைத்தன.
🍑 பணம் நழுவி பாலில் விழதா என்று நேச நாடுகள் அமெரிக்காவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தபோது
🍓 ஜெர்மனி சம்பந்தமே இல்லாமல் அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்க லூசு டானியா என்ற வர்த்தக கப்பலை தாக்கி மூழ்கடித்தது( 1917) அமெரிக்காவிற்கு கோபத்தை உண்டு பண்ணியது
🥭 ஜெர்மனிக்கு எதிராக 1917 ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் போர் பிரகடனம் செய்தார்
🍒 போரில் ஜெர்மனி நிலைகுலைந்தது
🍍 முதல் உலகப்போர் பாரிஸ் அமைந்து மாநாடு மூலம் முடிவிற்கு வந்தது
🍏1919 ஜூன் 28ஆம் நாள் அமைதி உடன்படிக்கை பிரான்சின் வெர்செய்ல்ஸ் கண்ணாடி மாளிகையில் கையெழுத்திடப்பட்டது .
🫐 இந்த உடன்படிக்கையின் மூலம் மையநாடுகள் நசுக்கப்பட்டன குறிப்பாக ஜெர்மனி மிகவும் பாதிக்கப்பட்டது ( அதன் விளைவை இரண்டாம் உலகப் போர்)
🍋 போரின் விளைவில் 1917 இல் ரஷ்யாவில் நடந்த புரட்சியின் விளைவாக சார் மன்னர்களின் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டு காரல் மார்க்ஸின் வழித்தோன்றல் லெனின் கையில் ரஷ்யா வந்தது
🍉 ரஷ்ய புரட்சியின் விளைவாக உலகில் பல நாடுகள் கம்யூனிசம் பரவியது .சமத்துவம் விளைந்தது. தொழிலாளர்கள் நலன்கள் வளர்ச்சி அடைந்தது.
🍇 போரின் பேரழிவை பார்த்த ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிபர்கள் இனி ஒரு போரே வேண்டாம் என்று உலக அமைதிக்காக பன்னாட்டு சங்கத்தை 1920 ஜனவரி 20 தோற்றுவித்தனர். இதன் செயலகம் அமைந்துள்ள இடம் ஜெனீவா ( பிரான்ஸ்). பன்னாட்டு சங்கத்தின் இரண்டு குறிக்கோள்களில் ஒன்று போர்களை தவிர்த்து உலகில் அமைதி நிலைநாட்டுவது இரண்டாவது சமூகப் பொருளாதார விஷயங்களில் பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது. பன்னாட்டுச் சங்கம் சில சிக்கல்களை கையாண்டு வெற்றியும் பெற்றது. பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான காரணங்கள் என்று பார்க்கும் போது பன்னாட்டு சங்கத்தை தோற்றுவித்த அமெரிக்கா இதில் இடம்பெறவில்லை. பிடிக்காத நாடுகள் விலகிக் கொள்ளலாம். பன்னாட்டு சங்கத்திற்கென்று பாதுகாப்பு கூட்டுப்படை இல்லை. ஜெர்மனி இத்தாலி போன்ற நாடுகள் பன்னாட்டு சங்கத்தின் பேச்சைக் கேட்கவில்லை.
🍒 இது போன்ற காரணங்களால் பன்னாட்டு சங்கம் தோல்வி அடைந்தது.
முக்கிய ஆண்டுகள்
1870 - முற்றுரிமை முதலாளித்துவம்
1900 - ஆப்பிரிக்கா ஐரோப்பியாவின் காலனி ஆதல்
1882 - மூவர் உடன்படிக்கை
1907 - இளம் துருக்கியர் புரட்சி
1914 - முதல் உலகப்போர் ஆரம்பம்
1914 ஜூன் 28 - ஆஸ்திரியா இளவரசர் படுகொலை
1919- வெர்செய்ல்ஸ் அமைதி உடன்படிக்கை
1918 - முதல் உலகப்போர் முடிவு
1920 ஜனவரி 20 - பன்னாட்டு சங்கம் தோற்றுவிப்பு
2024 பப்ளிக் ல வந்த வினாக்கள்
1.மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது
3. முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்கள்
2. பன்னாட்டு சங்கத்தின் பணிகள்
Quiz - Go To world war -1 Map Quiz
TLM
முதல் உலகப் போர் கதை - Go To video
World war 1 all part EM- Go To video
முதல் உலகப் போர் தொடங்கியது எப்படி- Go To video
முதல் உலகப் போர் காரணங்கள் -Go to video
0 கருத்துகள்